search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

    கடலூரில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடங்கி வைத்தார்.
    கடலூர்:

    சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி கடலூரில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது. கடலூர் அண்ணாபாலம் அருகில் நடந்த தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் கலந்து கொண்டு கொடியசைத்து பேரணியை தொடங்கி வைத்தார். பேரணியில் புனித வளனார் பள்ளி, கல்லூரி மாணவர்கள், கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணி அண்ணாபாலம், பாரதிசாலை, தலைமை தபால் நிலையம் வழியாக டவுன்ஹாலை சென்றடைந்தது. பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள், ஒழிப்போம், ஒழிப்போம் போதைப்பொருட்களை ஒழிப்போம், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதால் இதயம், சிறுநீரகம் மற்றும் மூளை பாதிப்பு போன்ற நோய்கள் ஏற்பட்டு மரணம் ஏற்படும். ஆகவே போதைப்பொருட்களை தவிர்ப்போம் என்று கோஷங்களை எழுப்பியபடி சென்றனர்.

    இதில் கடலூர் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெ க்டர் சுதா, அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணன், ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முன்னதாக போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து வரும் அரசு, உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட கட்டுரை, ஓவியம், வாசக போட்டிகளில் பள்ளிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். இதில் திருக்கண்டேஸ்வரத்தில் உள்ள நகராட்சி உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தேவநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×