search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு"

    • போடி அருகே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பின்னர் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    போடி:

    ரூடாட் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு பள்ளி சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி போடி அருகே சில்லமரத்துபட்டியில் நடந்தது. இதற்கு தேனி மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமை தாங்கினார். போடி போலீஸ் துணை சூப்பிரண்டு சுரேஷ் கொடி அசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் ஏராளமான மாற்று திறனாளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். போதை பொருட்களை ஒழிப்போம், மனித மாண்பை காப்போம் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு பள்ளி இயக்குனர் முருகன் தலைமை தாங்கினார். பள்ளி நிர்வாகி செல்வி பரணி வரவேற்றார். பள்ளி ஒருங்கிணைப்பாளர் குழந்தை வள்ளி, தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாராயணமூர்த்தி, மாற்று திறனாளிகளுக்கான அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்புகள் பற்றி சிறப்புரை ஆற்றினர்.

    மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சகுந்தலா பெற்றோருக்கான சுய உதவி குழுக்களை தொடங்கி வைத்தார். போடி இந்தியன் வங்கி கிளை உதவி மேலாளர் அருண் மாற்றுத் திறனாளிகளின் வங்கி கணக்கை தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

    பின்னர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் தீபக் குமார், முத்துப்பாண்டி, ஜோதிப்பாஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன்.
    • போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

    சென்னை:

    தமிழ்நாட்டில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆங்காங்கே போதை பொருள் விற்கப்படுகிறது.

    இதனால் நாளுக்கு நாள் போதை மருந்தின் பயன்பாடும், அதற்கு அடிமையாகிறவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டு வருகிறது.

    போதை பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு உள்ளார்.

    இது தொடர்பாக அவர் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கடந்த 5-ந்தேதி எழுதிய கடிதத்தில் போதை பொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலுமாக ஒழிக்க உறுதி ஏற்றிருக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பும், ஆதரவும் அளிக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.

    இதன் தொடர்ச்சியாக சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுகளுடன் ஆலோசனை நடத்தி போதை பொருளை முற்றிலும் ஒழிக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    போதை பொருள் விற்பவர்களின் சொத்துகளை முடக்க வேண்டும் என்றும் போதை பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

    இதன் தொடர்ச்சியாக இன்று மாணவ-மாணவிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போதை பொருட்களுக்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டார்.

    இதற்கான நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

    அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியை வாசிக்க அதை மாணவ-மாணவிகளும் திரும்ப வாசித்து உறுதிமொழி ஏற்றனர்.

    போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாக தருவேன்.

    போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப்பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.

    இவ்வாறு உறுதிமொழி ஏற்றனர்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, ஏ.டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று உறுதி மொழி ஏற்றனர்.

    இதையொட்டி போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறும்படத்தையும் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

    தமிழக காவல் துறையில் இயங்கி வரும் போதை பொருள் நுண்ணறிவு பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இரண்டையும் ஒன்றிணைந்து செயல்படும் வகையில் இன்று முதல் அமலாக்கப்பணியகம் குற்றப்புலனாய்வுத்துறை (சி.ஐ.டி.) என்று அறிவிப்பு வெளியிட்டார்.

    சென்னையில் இன்று மேற்கொள்ளப்பட்ட உறுதி மொழி போல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் மாணவ-மாணவிகள் போதை ஒழிப்பு உறுதி மொழி எடுத்துக்கொண்டனர்.

    ×