search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmers siege"

    • திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கொடுவாய், செங்காட்டு பாளையத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வந்தது.
    • திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கொடுவாய், செங்காட்டு பாளையத்தில் தனியார் பால் கொள்முதல் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தை திருச்சி துறையூரை சேர்ந்த செல்வகுமார், சுந்தரமூர்த்தி மற்றும் கொடுவாய் செங்காட்டு பாளையத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் சுற்று வட்டார கிராம மக்கள் சுமார் 1000- க்கும் மேற்பட்டோர் பால் வழங்கி வந்தனர். மேலும் இந்த நிறுவனம் மாத கணக்கில் பால் கொள்முதலுக்கான பணத்தை வழங்காமல் இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நிறுவனத்தின் முதலாளிகள் திடீரென தலைமறைவாகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் 500-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு பால் கொள்முதல் நிறுவனத்தை முற்றுகையிட்டனர். அங்கு ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த பல்லடம் துணை வட்டாட்சியர், பல்லடம் காவல் ஆய்வாளர், அவினாசிபாளையம் போலீசார், தெற்கு அவினாசிபாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விவசாயிகளோடு பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பாதிக்கபட்ட விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் மாநில தலைவர் இரா.சண்முகசுந்தரம், மாநில பொது செயலாளர் முத்து விஸ்வநாதன், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் மகாலிங்கம், மாநகர செயலாளர் ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையின் முடிவில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பேரில் நடவடிக்கை எடுக்கக்கோரி அவினாசிபாளையம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் பால் பணம் பாக்கி கொடுக்காமல் வைத்துவிட்டு, பால் பண்ணை மூடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • உரிய தொகை வழங்காததால் கடந்த 6-மாதத்திற்கு முன்பு, அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.
    • இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே வி.கூத்தம்பட்டி வழியாக விருதுநகரிலிருந்து கோயம்புத்தூருக்கு உயர் மின் கோபுரம் செல்கிறது. ஆத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட வீரக்கல் ஊராட்சியில் வீ.கூத்தம்பட்டி, தெற்கு மேட்டுப்பட்டி, வடக்கு மேட்டுப்பட்டி, வண்ணம்பட்டி ஆகிய பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மின்வாரிய அதிகாரிகள் மின்கோபுரம் அமைக்க இடம் கொடுத்ததற்கு உரிய தொகை வழங்காததால் கடந்த 6-மாதத்திற்கு முன்பு, அமைச்சர் இ.பெரியசாமியிடம் நேரில் சந்தித்து விவசாயிகள் புகார் செய்தனர்.

    அதன்பின்னர் அவர் நடவடிக்கை எடுத்ததின் பேரில் விவசாயிகள் சிலருக்கு மட்டும் மின்வாரிய அதிகாரிகள் பணம் வழங்கியுள்ளனர். அதன்பின்னர் மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதிக்கு செல்லவில்லை. இந்நிலையில் வீ.கூத்தம்பட்டிக்கு சென்ற மின்வாரிய அதிகாரிகளை இடம் கொடுத்த விவசாயிகள் முற்றுகையிட்டு தங்களுக்கு வழங்கவேண்டிய நிவாரணத் தொகையை வழங்கும்படி கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தி.மு.க. ஒன்றியகுழு உறுப்பினர் வீ.கூத்தம்பட்டியை சேர்ந்த செல்வி காங்கேயன் கூறுகையில் விவசாயிகளிடம் இடம் கேட்க வரும்போது அதிகாரிகள் உங்கள் இடத்திற்குரிய பணத்தை தருகிறோம் என கூறி 3 வருடங்கள் ஆகிறது. இதுநாள்வரை முறையாக உரிய நிவாரண பணம் தரவில்லை. அதனால் இங்கு வந்த மின்சாரத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். இதுகுறித்து அமைச்சர் இ.பெரியசாமியிடம் புகார் செய்துள்ளோம் என்றார். விவசாயிகள் மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பட்டா வழங்காததை கண்டித்து நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம், சிறுவளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சொந்தமான இடம் உளியநல்லூர் கிராமத்தில் உள்ளதாகவும், அந்த இடத் தில் விவசாய பொருட்கள் சேமிப்பு கிடங்கு கட்ட இருப்ப தால் அந்த இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என்று தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வருவாய்துறையினருக்கு கடந்த சில மாதங்களாக கோரிக்கை வைத்துவந்தனர்.

    இந்நிலையில் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தி வரும் வருவாய் துறையினரை கண்டித்து பனப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய்த்துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாநில பொதுச் செயலாளர் உதயகுமார், மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ், நிர்வாகிகள் சுபாஷ், ராஜமாணிக்கம், சுப்பிரமணி, மணி, ஆதிமூலம், தினகரன், ரவிச்சந்திரன், கிருஷ்ணன், தேவராஜ், நரசிம்மன், சம்பத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    திண்டுக்கல் கலெக்டர் ஆபீசில் விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் வினய் தலைமை தாங்கினார். வேளாண்மை அதிகாரிகள் வேளாங்கண்ணி, மனோகர் மற்றும் பலர் பங்கேற்றனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக வேடசந்தூர் அருகே உள்ள ஆர். கோம்பை, வடுகம்பாடி விவசாயிகள் கஜா புயலுக்கு நிவாரணம் வழங்ககோரி கோ‌ஷம் எழுப்பினர்.

    அப்போது அவர்கள் கூறுகையில், எங்களது பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. ஆனால் 600 பேருக்கு மட்டுமே நிவாரணம் கிடைத்து உள்ளது.

    மற்றவர்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர். இதனையடுத்து தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர்.

    கொடைக்கானலில் புயலால் சிசு வாழை பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு மானியம் வழங்ககோரியும் மனு அளிக்கப்பட்டது. திண்டுக்கல் சிறுமலையை சேர்ந்த காய்கறி விவசாயிகள் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் தங்களது பகுதியில் விளையும் சவ்சவ், வாழை, எலுமிச்சை, அவரை உள்ளிட்ட காய்கறிகளை திண்டுக்கல் காந்தி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகிறோம். கடந்த சிலநாட்களாக அங்கு உள்ள காண்டிராக்டர்கள் தலா ஒரு மூட்டைக்கு பணம் கேட்கிறார்கள்.

    பணம் தரவில்லை என்றால் உள்ளே கொண்டு வர அனுமதிக்க மறுக்கிறார்கள். எனவே முன்பு போலவே இலவசமாக காய்கறிகள் கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என்றனர்.

    காரியாபட்டி வேளாண்மைத்துறை அலுவலகத்தில் விதை நிலக்கடலை வழங்கக் கோரி தோப்பூர் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.

    காரியாபட்டி:

    தமிழ்நாட்டில் விவசாயத்தில் வளர்ந்துவரும் மாவட்டமாக ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 2 மாவட்டங்களை விவசாய நலவாழ்வு இயக்கத்தின் கீழ் மத்திய அரசு தேர்வு செய்தது.

    இதனடிப்படையில் காரியாபட்டி வட்டத்தில் வழுக்கலொட்டி, தோனு கால்,கழுவனச்சேரி, தோப்பூர், முடுக்கன்குளம், மறைக்குளம் ஆகிய கிராமங்களை தேர்வு செய்து மத்திய அரசு மூலம் தேசிய விதை உற்பத்தி நிறுவனத்திலிருந்து தாரணி என்ற விதை நிலக்கடலைகளை விவசாயிகளுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதனடிப்படையில் காரியாபட்டி வேளாண்மை அலுவலகத்தில் தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்து எங்களுக்கும் விதை நிலக் கடலை கொடுக்க வேண்டும் என்று முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    அவர்களிடம் காரியாபட்டி வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் தவசிமுத்து பேசினார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது:-

    தோப்பூர் கிராமத்தில் விவசாயிகள் நல வாழ்வு இயக்கத்தின் சார்பில் கிராம விவசாயிகளுக்கு 468 பேருக்கு நிலக்கடலை வந்துள்ளது. இந்த நிலக்கடலையை அந்த கிராமத்தில் வைத்து வழங்கப்பட்டது.

    அப்போது அதிகாரிகளுடன் பிரச்சினை செய்ததால் வேளாண்மை அலுவலகத்தில் வைத்து வழங்கப்பட்டு வருகிறது. தோப்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் வாங்கிய நபர்களே மீண்டும் வந்து விண்ணப்பம் கொடுப்பதால் தான் இதில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.

    நிலக்கடலை வேண்டும் என்று கேட்டு விண்ணப்பம் செய்யும் அனைத்தையும் வாங்கிக் கொண்டு இதில் யார் வாங்கி இருக்கிறார்களோ அவர்களின் விண்ணப்பத்தை நிராகரித்து விட்டு வாங்காத விவசாயிகளுக்கு நிலக்கடலை விதை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார்.

    பின்னர் விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். காரியாபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமைபோலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பொள்ளாச்சி அருகே மின் வாரிய அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
    பொள்ளாச்சி:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சி துணை மின் நிலைய வளாகத்தில் மின் வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் விவசாயிகள் தக்கல் முறையில் மின் இணைப்பு பெற காசோலைகளுடன் விண்ணப்பம் அளிக்க வந்து இருந்தனர்.

    சுமார் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் திரண்டு வந்திருந்தனர். ஆனால் அதிகாரிகள் 60 விவசாயிகளிடம் மட்டும் விண்ணப்பத்தை பெற்று கொண்டதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த மற்ற விவசாயிகள் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். மேலும் அதிகாரிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு உருவானது.

    தகவல் கிடைத்ததும் ஆழியாறு போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். #tamilnews
    ×