search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாநகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்
    X

    கொரோனா தொற்று கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுக்கூட்டம்

    தஞ்சை மாநகராட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம்

    • வருகிற 10-ந் தேதி தஞ்சை மாநகரில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மாநகர பகுதிகளில் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் யாருக்காவது இருந்தால் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.

    இவர்களின் வசதிக்காக வருகிற 10-ந் தேதி தஞ்சை மாநகரில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 10-ந் தேதி நடைபெறும் முகாமில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா–மொழி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்கின்றனர். மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×