search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் காங்கிரசார் போராட்டம்-163 பேர் கைது
    X

    கோவையில் காங்கிரசார் போராட்டம்-163 பேர் கைது

    • அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்து கோவை ரெயில் முன்பு ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்ட 163 பேரை கைது செய்துள்ளனர்.

    கோவை:

    கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரியும், அமலாக்கத்துறை விசாரணையை கண்டித்தும் கோவை ரெயில் முன்பு ரெயில் மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் வக்கீல் கருப்புசாமி தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார், கவுன்சிலர்கள் சங்கர், கிருஷணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட நிர்வாகிகள் போஸ், ராம நாகராஜ், தமிழ்செல்வன், ஜெயபால், இருகூர் சுப்பிரம ணியன், சுரேஷ்குமார், தாமஸ் வர்க்கீஸ், ஈஸ்வர மூர்த்தி,மோகன்ராஜ், கே.கே.சந்தோஷ், அரிமா ஆறுமுகம், காந்தகுமார், ரங்கநாதன், சுப்பு காமராஜ், சர்க்கிள் தலைவர்கள் ஜேம்ஸ், அசோக்குமார், சேக் முகம்மது, கணேசன், ராமன், சக்திவேல், முருகன், மகிளா காங்கிரஸ் உமா மகேஸ்வரி, திலகவதி, வக்கீல்ல்கள் செந்தில், தமிழ்செல்வன், மற்றும் டென்னிஸ் செல்வராஜ், அணீஸ், ராம்நகர் சீனிவாசன், முஸ்தபா, இஸ்மத், ராமகிருஷ்ணன், சின்னசாமி, மருதாசலம், ரமேஷ்குமார், மோசஸ், சங்கனுர் கோபால், முத்துசாமி செட்டியார், சுந்தரம், சண்முகானந்தம், இளைஞர் காங்கிரஸ் வினோத், கிளிண்டன், கோவை தாமஸ், குமார், சிவபெருமாள், கிக்கிஸ் சேகர், தமிழ்மணி, சகாயம், பர்வேஸ், மெட்டல் சலீம், அஸ்மத்துல்லா, பாலு, முரளி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் 7 பெண்கள் உட்பட 63 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதே போல வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் காந்தி பார்க்கில் வடக்கு மாவட்ட தலைவர் வி.எம்.சி.மனோகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கவுன்சிலர்கள் அழகு ஜெயபால், நவீன்கு மார் முன்னிலை வகித்தனர். இதில் கலந்துகொண்ட 35 பெண்கள் உள்பட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

    இதேபோல் கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பச்சை முத்து, கவுன்சிலர் சரவணகுமார், ராம்கி உள்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×