search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குப்பை கிடங்கை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்
    X

    சாலை மறியல் நடந்தது.

    குப்பை கிடங்கை அகற்ற கோரி பொதுமக்கள் சாலை மறியல்

    • புகைமூட்டம் ஏற்படுவதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி

    பாபநாசம்:

    தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலதுறை எஸ்பிஜி மிஷின் தெரு அருகில் குப்பை கிடங்கு உள்ளது. பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் தெருக்களில் உள்ள குப்பைகளை சேகரித்து இங்கு கொட்டப்படுகிறது.

    இந்த குப்பை கிடங்கில் அடிக்கடி தீ விபத்து ஏற்பட்டு புகைமூட்டம் ஏற்படுவதால் அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் திடீரென தஞ்சை- கும்பகோணம் சாலையில் திருப்பாலைத்துறை மெயின் ரோட்டில் குப்பை கிடங்கை அகற்ற கோரி கோஷங்கள் எழுப்பி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் பேரூராட்சி உறுப்பினர்கள் கீர்த்திவாசன், பிரேம்நாத், பைரன், பாலகிருஷ்ணன் உட்பட அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பேரூராட்சி தலைவர் பூங்குழலி கபிலன், செயல் அலுவலர் குமரேசன், இன்ஸ்பெக்டர் கலைவாணி, சப்இன்ஸ்பெக்டர் குமார் உள்ளிட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவ ர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப ட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×