என் மலர்
சென்னை
- கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே விசாரிக்க முடிவு செய்தது.
- வழக்குகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம் என ஒரு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சென்னை:
கரூரில், கடந்த செப்டம்பர் 27-ந் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 41 பேர் பலியாகினர். இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோரிய வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக்கோரிய வழக்கை சென்னை ஐகோர்ட்டு இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை செய்ய உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வே விசாரிக்க முடிவு செய்தது.
இந்த வழக்குகள் எல்லாம், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவத்சவா, நீதிபதி ஜி.அருள் முருகன் அடங்கிய அமர்வில் இன்று காலையில் முதல் வழக்குகளாக விசாரணைக்கு வந்தன.
முதல் வழக்காக கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், முன் ஜாமின் கோரிய மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்த மனுவை மனுதாரர் தரப்பு வக்கீல் வாபஸ் பெறுவதாக கூறியதை ஏற்று, அந்த மனு வாபஸ் பெற அனுமதிக்கப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டன.
அதேபோல, கரூர் சம்பவம் காரணமாக, மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி மதுரையைச் சேர்ந்த கே.ராஜன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு, விஜய் பிரசாரக் கூட்டங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறி, த.வெ.க. தரப்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டு, நிலுவையில் இருந்த வழக்கு, அரசியல் கட்சித் தலைவர்களின் பிரசாரத்தின்போது, டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பது, தீ விபத்து தடுப்பு கண்காணிப்பு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்குவதை கட்டாயமாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு,
கரூர் துயர சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க. நிர்வாகிகள் கைது செய்யப்பட்டபோது, நேபாளம், இலங்கை போல், தமிழகத்தில் புரட்சி வெடிக்கும் என சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டு, வன்முறையை தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி, த.வெ.க. தேர்தல் பிரசார பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தாக்கல் செய்த வழக்கு, கரூர் துயர சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக் கோரி பா.ஜ.க. கவுன்சிலர் உமா ஆனந்தன் வழக்கு விசாரணைக்கு உகந்ததா, இல்லையா? என்பதை முடிவு செய்யும் வழக்கு என்று பல வழக்குகள் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்குகளை எல்லாம் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றக்கோரி மனு தாக்கல் செய்ய உள்ளோம் என ஒரு மனுதாரர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்குகளை எல்லாம் 3 வாரத்துக்கு தள்ளிவைத்தும், அரசு தரப்பில் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
- திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும்.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, காஞ்சிபுரத்திற்கு இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூரில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- என் மகனுக்கு 5 வயது இருக்கும்போதே மனைவிக்கு கண் தெரியாமல் போனது.
- நிகழ்ச்சி ரத்தானதாக என்னிடம் சொல்லிவிட்டு என் மனைவியை அழைத்து வந்து உள்ளார்கள்.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து அவர்கள் நேற்று இரவு மாமல்லபுரம் வந்தடைந்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானி தாலுகாவை சேர்ந்த கந்தசாமி என்பவரின் மகன் மோகன் (19) கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். மோகனின் தந்தையை த.வெ.க.வினர் அழைத்து வராத நிலையில் அவர் தனியாக மகாபலிபுரம் வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சென்னை மாமல்லபுரத்தில் த.வெ.க. தலைவர் விஜயை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு என் மனைவி, உறவினர்களை அழைத்து வந்துள்ளார்கள். பெத்த அப்பனான என்னை கூட்டிக்கொண்டு வரவில்லை.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல என்னை அனுமதிக்கவில்லை. கட்சிக்காரர்கள் சொன்னால்தான் உள்ளே செல்ல அனுமதிக்க முடியும் என்று சொல்லி விட்டார்கள். மாவட்ட செயலாளருக்கு போன் செய்தால் அந்த மாதிரி கூட்டமே நடக்கவில்லை என்று சொல்கிறார்.
என் மனைவிக்கு கண் தெரியாது. கல்யாணம் நடந்து 35 வருஷம் ஆகிறது. 13 வருஷமாக அவருக்கு கண் தெரிவதில்லை. என் மகனுக்கு 5 வயது இருக்கும்போதே மனைவிக்கு கண் தெரியாமல் போனது. அப்போது இருந்தே நான் தான் எல்லாமே பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.
இந்த பணம் வந்தவுடன் மனைவியின் உறவினர்கள் அவர்கள் கையாள்வதற்காக என்னை ஒதுக்கிவிட்டு, எனக்கு தெரியாமல் மனைவியை அழைத்து வந்து விட்டார்கள்.
நிகழ்ச்சி ரத்தானதாக என்னிடம் சொல்லிவிட்டு என் மனைவியை அழைத்து வந்து உள்ளார்கள். இப்போது நான் தனியாக பஸ் பிடித்து வந்துள்ளேன். என்னை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. கட்சிகாரர்கள் சொல்ல வேண்டும் என்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்த மோகன் என்பவரின் தந்தையை ஓட்டலுக்குள் அனுமதிக்காததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஓட்டல் வாசலில் காத்திருந்த கந்தசாமி, அவர் எடுத்து வந்த மகனின் இறப்பு சான்றிதழை காட்டிய பின்பு அவருக்கு உள்ளே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. த.வெ.க.வினர் அவரை உள்ளே அழைத்து சென்றனர்.
- பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது.
- உயர்ந்த சிந்தனை தான் வெற்றி பெற உதவும். நேர்மை தான் அறிவை அளவிட உதவும்.
பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதையடுத்து மாணவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* பட்டம் பெற்ற மாணவர்களுக்கு இன்று மிக முக்கியமான நாள்.
* பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனம் இந்திய அளவில் தனக்கென்று தனி இடம் பிடித்துள்ளது.
* பாரதிதாசன் பல்கலையில் பயின்ற மாணவர்கள் சமுதாயத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளனர்.
* உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
* ஒருகாலத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் இன்று படித்து முன்னேற காரணம் திராவிட இயக்கம்.
* உயர்கல்விக்கு என ஏராளமான திட்டங்களை கொண்டு வந்தவர் கலைஞர் கருணாநிதி.
* கல்விக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு.
* உலகம் எந்த வேகத்தில் மாற்றமடைகிறதோ அந்த வேகத்திற்கு ஈடு கொடுத்து நாமும் ஓட வேண்டும்.
* தலைமைத்துவம் என்பது ஒருவர் ஏற்படுத்தும் தாக்கம் தான்.
* அடுத்து நடக்கப் போவதை கவனிப்பவர்கள் தான் எந்த துறையிலும் நிலைத்து நிற்க முடியும்.
* சிறப்பான திட்டமிடல் இல்லாமல் எந்த செயலிலும் இறங்க கூடாது என்கிறார் வள்ளுவர்.
* எங்கு சென்றாலும் அன்போடு, அறத்தோடு செயல்பட வேண்டும்.
* சோதனையான காலத்திலும் நேர்மை, நம்பிக்கை, பொறுமையை கைவிட கூடாது.
* உயர்ந்த சிந்தனை தான் வெற்றி பெற உதவும். நேர்மை தான் அறிவை அளவிட உதவும்.
* வெற்றி பெறும் மாணவர்கள் தங்களுக்கு பின்னால் படித்து வரும் மாணவர்களை கைதூக்கி விட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டசபையில் எப்படி பேச வேண்டும் என எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர்.
- தி.மு.க.வும் - காங்கிரசும் தற்போது கொள்கை உறவுகளாக பயணிக்கிறோம்.
சென்னை தேனாம்பேட்டையில் விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கரின் இல்லத் திருமணம் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மணமக்களை வாழ்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தி.மு.க. ஆட்சியில் தான் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
* சட்டசபையில் எப்படி பேச வேண்டும் என எனக்கு பாடம் எடுத்தவர் சொக்கர்.
* என் மீது அன்பு கொண்டவர் ராகுல்.
* ராகுல் காந்தி என்னை அண்ணன் என்றே அழைப்பார்.
* தி.மு.க.வும் - காங்கிரசும் தற்போது கொள்கை உறவுகளாக பயணிக்கிறோம்.
* நாட்டின் ஒற்றுமைக்காக ஒரே அணியில் பயணித்து கொண்டிருக்கிறோம்.
* ராகுலை தவிர யாரையும் நான் சகோதரர் என்று அழைத்தது இல்லை.
* தனி மனித நலனை விட நாட்டின் நலனே முக்கியம் என்று இரு கட்சிகளின் உறவு தொடர்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது.
- கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் 'வீடியோ கால்' மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். அதன்படி, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், த.வெ.க. சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. மண்டபம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மண்டபத்தின் உரிமையாளர் திடீரென விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருச்சியில் நிகழ்ச்சியை நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால் அங்கும் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
இதையடுத்து சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வகையில் விஜயின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் நிகழ்வு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ் ஓட்டலில் நடைபெற்றது. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை தனித்தனியாக சந்தித்து விஜய் ஆறுதல் கூறினார்.
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கோரிக்கையை த.வெ.க. தலைவர் விஜய் எழுத்துப்பூர்வமாக பெறுகிறார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரின் கல்விச்செலவு உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை எழுத்துப்பூர்வமாக அளிக்கின்றனர்.
- தங்கம் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
- வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை.
தங்கம் விலை கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97 ஆயிரத்து 600-க்கு விற்பனை ஆனது. இது இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சமாக இருந்தது. மேலும் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த விலையில் திடீரென்று சரியத் தொடங்கியது. கடந்த 24-ந்தேதி வரை விலை குறைந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.
இந்நிலையில் வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.91,600-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
26-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
25-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
24-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,200
23-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000
22-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
26-10-2025- ஒரு கிராம் ரூ.170
25-10-2025- ஒரு கிராம் ரூ.170
24-10-2025- ஒரு கிராம் ரூ.170
23-10-2025- ஒரு கிராம் ரூ.174
22-10-2025- ஒரு கிராம் ரூ.175
- சென்னைக்கு 560 கி.மீ தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
- மாணவர்கள் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்துக்கொண்டும் பள்ளிக்குச் சென்றனர்.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
தற்போது சென்னைக்கு 560 கி.மீ தென் கிழக்கில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளதால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே மிதமான மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.
இன்று காலை முதல் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், மாணவர்கள் ரெயின் கோட் அணிந்தும், குடை பிடித்துக்கொண்டும் பள்ளிக்குச் சென்றனர்.
- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை புயலாக வலுப்பெற்றது.
- சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 600 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் வங்கக்கடலில் மோன்தா புயல் புயல் உருவாகி உள்ள நிலையில் தமிழக துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னை, கடலூர், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், நாகை, பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னைக்கு கிழக்கே வங்கக்கடலில் 600 கி.மீ. தொலைவில் மோன்தா புயல் மையம் கொண்டுள்ளது.
- மோன்தா புயல் ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது
- புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு மோன்தா என பெயரிடப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்றும் புயல் கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கோவை, கடலூர், கள்ளக்குறிச்சி, நாகை, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, நீலகிரி, திருவண்ணாமலை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
- சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் த.வெ.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தில், பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என்றும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் விஜய் அறிவித்தார். அதன்படி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் சம்பந்தப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் 'வீடியோ கால்' மூலம் பேசி ஆறுதல் தெரிவித்த விஜய், விரைவில் தங்களை நேரில் சந்திக்கிறேன் என உறுதி அளித்தார். அதன்படி, கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார். இதற்காக கரூரில் உள்ள ஏதேனும் ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரை விஜய் சந்தித்து பேசும் வகையில், த.வெ.க. சார்பில் மண்டபம் தேடும் பணி நடந்தது. மண்டபம் உறுதி செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் மண்டபத்தின் உரிமையாளர் திடீரென விஜய்யின் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் திருச்சியில் நிகழ்ச்சியை நடத்த கட்சியினர் முடிவு செய்தனர். ஆனால் அங்கும் நிகழ்ச்சி நடத்துவதற்கு அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்தித்து பேசுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில், உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரையும் சென்னைக்கு வரவழைத்து நேரில் சந்திக்க விஜய் முடிவு செய்தார்.
அதன்படி, இந்த சந்திப்பு இன்று காலை 9 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள பார் பாயிண்ட்ஸ்' ஓட்டலில் நடைபெற உள்ளது. உயிரிழந்த 41 பேரில் 31 பேர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 10 பேர் திண்டுக்கல், ஈரோடு, சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு மேற்கண்ட 4 மாவட்டங்களைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகிகளுக்கு கட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இவர்களை சென்னைக்கு அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் த.வெ.க. சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களோடு, நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 110 பேரும் தங்களது குடும்பத்தினருடன் விஜய்யை சந்திக்க உள்ளனர். உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே அறிவித்தபடி ரூ.20 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், காயம் அடைந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்ட ரூ.2 லட்சம் நிவாரண உதவி இதுவரை வழங்கப்படவில்லை. மாமல்லபுரத்தில் நடைபெறும் நிகழ்வின்போது, காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண உதவியை விஜய் நேரடியாக வழங்குகிறார்.
பாதிக்கப்பட்ட அனைவரையும் சென்னைக்கு அழைத்து வந்து, மீண்டும் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கும் வரையிலான அனைத்து செலவுகளையும் த.வெ.க. ஏற்றுக்கொண்டுள்ளது.
சென்னை மாமல்லபுரத்தில் பாதிக்கப்பட்டவர்களை இன்று நேரில் சந்திக்கும் வகையில் விஜய்யின் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு செய்ததையடுத்து நேற்று அதிகாலை முதலே கட்சியின் தொண்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தங்களது கார்களில் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று, அவர்களை கரூர் வெண்ணைமலையில் உள்ள ஒரு அரங்கில் தங்க வைத்தனர். பின்னர் அங்கு அவர்களுக்கு உணவு வழங்கிய பின், அங்கிருந்து 5 சொகுசு பஸ்களில் 36 பேரின் குடும்பத்தினரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.
பின்னர் நேற்று இரவில் அவர்கள் மாமல்லபுரம் வந்தடைந்தனர். அவர்களை விஜய் இன்று சந்தித்து ஆறுதல் கூற உள்ளார்.
- இன்று அதிகாலை 2.30 மணியளவில் மோன்தா புயல் உருவானது
- மோன்தா புயல் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவில் கரையை கடக்கவுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு தாய்லாந்து நாடு பரிந்துரைத்த மோன்தா என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மோன்தா புயல் நாளை மாலை அல்லது இரவில் தீவிர புயலாக வலுப்பெற்று ஆந்திராவின் மச்சிலிப்பட்டினம்- கலிங்கப்பட்டினம் இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது. புயல் கரையைக் கடக்கும் போது அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், மோன்தா புயலால் சென்னையின் இன்று மிதமான மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மோன்தா புயல் சென்னைக்கும் மிகவும் குளிரான வானிலையைக் கொண்டுவரும். ஆனால் இந்த புயலால் சென்னையில் மிக கனமழை பெய்யாது.
வட சென்னையில் 50-70 மிமீ வரை மழை பெய்யும். தென் சென்னையில் 10-50 மிமீ மழை பெய்யும்.
ஆந்திராவுக்கு அருகில் உள்ள கும்மிடிப்பூண்டி, பொன்னேரி மற்றும் புலிகாட் போன்ற பகுதிகளில் மட்டுமே கனமழை பெய்யும். வட சென்னையில் மட்டும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது.
இன்று காலை தொடங்கி நாள் முழுவதும் லேசான தீவிரத்துடனும் அவ்வப்போது கன மழை பெய்யும். நாளை காலைக்குள் மழை நின்றுவிடும்.






