என் மலர்
சென்னை
- 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
சென்னை:
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் இன்று தொடங்குகிறது.
முதல் கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை பயிற்சி போன்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
- ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஒத்திவைப்பு.
- விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வரும் 9ம் தேதி தொடங்கப்படுகிறது.
ஜனவரி 11, 12 தேதிகளில் நடைபெற இருந்த வேட்பாளர் நேர்காணல் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கோரி விருப்ப மனு அளித்தவரகளுக்கான நேர்காணல் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 11, 12ம் தேதிகளில் நடைபெற இருந்த அதிமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் ஜனவரி 12, 24 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுடனான நேர்காணல் வரும் 9ம் தேதி தொடங்கப்படுகிறது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் ஜனவரி 9ம் தேதி முதல் 24ம் தேதி வரை நேர்காணல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

- மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
- பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற யாத்திரையின் நிறைவு விழா பொதுக்கூட்டம் திருக்கோகர்ணத்தில் பாலன் நகர் அருகே பள்ளத்திவயல் பகுதியில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெறுகிறது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்று பேசுகிறார்.
இன்று மாலை புதுக்கோட்டையில் நடைபெறும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனின் பரப்புரை பயண நிறைவு விழாவில் அமித் ஷா பங்கேற்க உள்ள நிலையில், தமிழகம் வந்தனைந்தார். அவருக்கு பாஜக நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாடு பாஜக-க்கான மண் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் கூறிய அவர்," தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் பாஜகவுக்கு தமிழ் மண்ணில் இடம் அளிக்க மாட்டார்கள்" என்றார்.
- பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிட அரசு.
- தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு.
பொங்கல் பரிசுத் தொகை அறிவிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
இதுகுறித்து மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வொரு இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கும் தைப் பொங்கல்!
உள்ளத்தில் பொங்கும் மகிழ்ச்சி இல்லத்தில் கொண்டாட்டமாக நிறைய, தமிழ்நாட்டிலுள்ள 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.3000 வழங்குகிறது நமது திராவிட அரசு!
பொங்கலோ பொங்கல்!
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
- அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தெற்கு கேரள கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், பூமத்திய ரேகையை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை முதல் 10-ந்தேதி வரை கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இதனிடையே இன்று முதல் 7-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று முதல் 8-ந்தேதிவரை தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர்.
- தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை.
சென்னை :
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழர் திருநாளாம் தைப்பொங்கலையொட்டி அரிசி குடும்ப அட்டை வைத்திருக்கும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் தலா ரூ.3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. திமுக ஆட்சியில் மக்கள் அனுபவித்து வரும் துயரங்களை ஓரளவாவது தணிக்கும் வகையில், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பணத்தில் ஒரு பகுதி அவர்களுக்கு வழங்கப்படுவது சரியானதே.
கடந்த ஆண்டும் இதே காலத்தில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டது. ஆனால், மக்களுக்கு ஒரு பைசா கூட பொங்கல் பரிசாக திமுக அரசு வழங்கவில்லை. ஆனால், இப்போது வழங்குகிறது. திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்தே அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியம் கோரி போராடி வருகின்றனர். ஆனால், அவர்களை திரும்பிக் கூட பார்க்காத திமுக அரசு, இப்போது அவர்களை ஏமாற்றும் வகையில் ஒரு மோசடி ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருக்கிறது.
இன்னும் 50 நாள்களில் அறிவிக்கப்படவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியடைந்து விடுவோம் என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கும் திமுக அரசு, அதிலிருந்து தப்புவதற்காகவே இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டு மக்கள் தாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவில் இருந்து பின்வாங்கப் போவதில்லை. அவர்கள் நிச்சயமாக வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்துவார்கள் என்று கூறியுள்ளார்.
- பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு உடன் மூவாயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்தார்.
பொங்கல் பரிசை சுமூகமாக விநியோகிக்க டோக்கன் முறையில் பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
சென்னையில் வீடு, வீடாக சென்று பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். டோக்கனில் பொங்கல் பரிசு தொகை பெறும் நேரம், தேதியுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி, நேரத்தில் சென்று பொங்கல் பரிசை பெற்றுக்கொள்ளலாம்.
- 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளார்.
தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனின் பிரசார நிறைவு விழாவில் பங்கேற்க, புதுக்கோட்டைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வருகிறார். இதனை தொடர்ந்து, கூட்டணி, தேர்தல் வியூகம் குறித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், புதுக்கோட்டை வருகை குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எக்ஸ் தள பக்கத்தில் தமிழில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழக மக்கள் திமுக அரசின் அதிகப்படியான ஊழல் மற்றும் பொய் வாக்குறுதிகளால் சலிப்படைந்துள்ளனர். 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' பேரணி மாநிலம் முழுவதும் தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது, பல லட்சக்கணக்கான மக்களை இப்பேரணி இணைக்கிறது.
இன்று அதன் நிறைவு விழாவையொட்டி, தமிழ்நாட்டின் புதுக்கோட்டையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் துடிப்பான நிர்வாகிகளுடன் உரையாற்ற உள்ளதாக கூறியுள்ளார்.
- 2.23 கோடி குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.3000 வழங்கப்படுகிறது.
- இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ளவர்களும் பயன்பெறுவர்
சென்னை:
பொங்கல் பண்டிகையையையொட்டி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி பிணி போக்கும் விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரிய உன்னத விழா பொங்கல் திருநாள் ஆகும்.
பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடிட தமிழ்நாடு அரசு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கிட முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்துள்ளார்கள். இதன்மூலம் 2,22,91,710 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் பயன்பெறுவர்.
மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள வேட்டி, சேலைகள் அனைத்தும் எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் விழாவை மேலும் சிறப்பாக கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் அனைத்து குடும்பங்களுக்கும் பொங்கல் ரொக்கப் பரிசாக ரூ.3000/- வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார். பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ரொக்கப் பரிசு மொத்தம் ரூ.6936,17,47,959/- செலவில் வழங்கப்படும்.
பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
- இந்த யாத்திரையின் பல தருணங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பெருமையடைந்தேன்.
- நிறைவு விழாவிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வருகை தரவிருப்பது நமக்கான ஆகச்சிறந்த பாராட்டு பத்திரம்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
தி.மு.க.வை ஆட்சி அரியணையில் இருந்து இறக்கி தமிழகத்தை மீட்டெடுக்கும் நமது வேள்விப் பயணமான "தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" என்ற யாத்திரையின் நிறைவு விழாவிற்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மனதார வரவேற்கிறேன்.
இப்பெருவிழவில் பெருந்திரளாக கலந்து கொள்ளுமாறு நமது தாமரை சொந்தங்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மக்கள் மனமெங்கும் நிறைந்திருக்கும் மீனாட்சி அம்மனின் அருளாசியோடும் தமிழகத்தை ஆட்டிப் படைக்கும் தி.மு.க.விற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற குறிக்கோளோடும். கடந்த அக்டோபர் மாதம் 12-ந்தேதியன்று சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த மதுரை மண்ணில் இருந்து நமது வேள்வி யாத்திரையைத் தொடங்கினோம். தி.மு.க. அரசின் கோரப் பிடியில் சிக்கி நிலைகுலைந்து கிடக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கவே இந்த யாத்திரைக்குத் "தமிழகம் தலைநிமிர தமிழனின் பயணம்" எனப் பெயர் சூட்டினோம்.
கடந்த 84 நாட்களில் சுமார் 2400 கி.மீ-க்கும் அதிகமாகப் பயணித்து. 52 அமைப்பு மாவட்டங்களுக்கும் 33 அலுவல் மாவட்டங்களுக்கும் சென்று மக்களிடம் நேரடியாக உரையாடி இருக்கிறோம். நம்மை முடக்க நினைத்த தி.மு.க. அரசின் அத்தனை அடக்கு முறைகளையும் முறியடித்து கிட்டத்தட்ட 47-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களையும் 34-க்கும் மேற்பட்ட கிராம சபைக் கூட்டங்களையும் நடத்தி உள்ளோம்.
காற்றுக்கு ஓய்வேது. நீருக்கு சோர்வேது என்பது போல. கொஞ்சம் கூட களைப்பு தட்டாமல் இந்த யாத்திரையின் அனைத்துப் பணிகளையும் தேனீக்களின் சுறுசுறுப்புடன் முன்னின்று செய்ததோடு எவ்வித அசம்பாவிதங்களுமின்றி இப்பயணத்தை மாபெரும் வெற்றிப் பயணமாக மாற்றி உள்ளனர் நமது கட்சி நிர்வாகிகள். நமது தொண்டர்களின் அன்பையும். நிர்வாகிகளின் கடின உழைப்பையும், மூத்த தலைவர்களின் அர்ப்பணிப்பையும் கண்டு இந்த யாத்திரையின் பல தருணங்களில் நான் உணர்ச்சிவசப்பட்டேன். பெருமையடைந்தேன். கர்வம் கொண்டேன்.
"இப்படை தோற்கின், எப்படை வெல்லும்" என்பதை நமது ஒற்றுமையின் மூலம் மீண்டுமொருமுறை நாம் நிரூபித்துள்ளதைக் கண்டு சொல்ல முடியாத ஆனந்தத்தில் திளைத்து உள்ளேன்.
இவ்வாறு நமது தாமரை சொந்தங்களின் நெஞ்சுரத்தாலும், விடா முயற்சியாலும் வரலாறு காணாத வெற்றி பயணமாக மாறிய இந்த வேள்வித் தவத்தின் நிறைவு விழாவிற்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று வருகை தரவிருப்பது நமக்கான ஆகச்சிறந்த பாராட்டு பத்திரம்.
கடந்த மூன்று மாதங்களாக ஓடி இளைத்த நமது வியர்வைத் துளிகளின் மீது சூடப்படும் மணிமகுடம் உலகம் வியக்கும் அரசியல் சாணக்கியரான அமித்ஷா கலந்து கொண்டு நம்மைச் சிறப்பிக்கும் உயர்வான அத்தருணத்தை நாம் ஆற, அமர முழுமையாக அனுபவிக்க வேண்டும்.
எனவே இன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் "தமிழகம் தலைநிமிர, தமிழனின் பயணம்" யாத்திரையின் நிறைவு விழாவில், நமது கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும், மூத்த தலைவர்களும் பெருந்திரளாகக் கலந்து கொண்டு நமது வெற்றியின் முழக்கத்தை ஊரறியச் செய்ய வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
- வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
- சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகத்தில் கடந்த நவ.4-ந்தேதி முதல் டிச.14-ந் தேதி வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்.) பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதன்படி தமிழகத்தில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில் இறந்தவர்கள் மட்டும் 26.94 லட்சம் பேர். முகவரி இல்லாத 66.44 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளான விடுமுறை நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்காக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஜனவரி 1-ந்தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் மற்றும் எஸ்.ஐ.ஆர். பணியின் போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்கள் படிவம் 6-ஐ வழங்க வேண்டும். அதில் எஸ்.ஐ.ஆர். படிவத்தில் உள்ளதை போன்றே, தங்களது அல்லது தங்கள் பெற்றோரின், 2002, 2005-ம் ஆண்டு காலகட்ட வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களை குறிப்பிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றும், இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு முகாம்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் திரண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அளித்தனர்.
வாக்காளர் சிறப்பு திருத்த பணிகளின் போது படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்ட தேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு பெயர் சேர்ப்பதற்கு கடந்த மாதம் 19-ந்தேதியில் இருந்து கடந்த 2-ந்தேதி வரையில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 559 பேர் விண்ணப்பித்திருப்பதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இருந்து 9575 பெயரை நீக்குவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாட்களில் நடைபெற்று வரும் இந்த சிறப்பு முகாம்கள் வருகிற 18-ந்தேதி வரை நடைபெறுகிறது. அடுத்த வாரம் 10, 11 ஆகிய தேதிகளிலும்,அதற்கு அடுத்த வாரம் 17, 18 ஆகிய தேதிகளிலும் இந்த முகாம்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வருகிற 18-ந்தேதிக்கு பிறகு வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பதற்கு விண்ணப்பிக்க முடியாது. இதன் பிறகு இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படுகிறது.
- உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
- அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் நாளை தொடங்குகிறது. முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.
உலகம் உங்கள் கையில் என்ற கருப்பொருளில் மொத்தம் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது. பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறை பயிற்சி போன்ற துறை சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படுகிறது.






