என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலுநாச்சியார் சிலை"

    • தமிழ்நாட்டின் வரலாற்று ஆளுமைகளுக்கு விஜய் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறார்.
    • கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் இந்தியப் பெண் அரசி. இவரது பிறந்தநாள் (ஜனவரி 3) ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வீரமங்கை வேலுநாச்சியாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகத்தில் உள்ள வீரமங்கை வேலுநாச்சியார் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.

    தமிழக வெற்றிக் கழகத்தை (TVK) தொடங்கிய பிறகு, தமிழ்நாட்டின் வரலாற்று ஆளுமைகளுக்கு விஜய் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகிறார். இது அவரது கட்சியின் கொள்கை மற்றும் தமிழ் அடையாளத்தை முன்னிறுத்தும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

    காமராஜர், அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களுக்குப் பிறகு, விடுதலைப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாருக்கு விஜய் மரியாதை செலுத்தியது, அவர் பெண்ணுரிமை மற்றும் வீர வரலாற்றிற்கு அளிக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

    இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி, தாய் மண்ணை மீட்ட முதல் இந்தியப் பெண் போராளி! சமூக சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த எழுச்சிக் கனல்! எம் கொள்கைத் தலைவர், வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.

    தமிழ் மண்ணுக்குப் பெருமை சேர்த்த வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் வழியில், மக்கள் விரோத ஆட்சியாளர்களை விரட்டி, மக்கள் விரும்பும் மக்களாட்சியை அமைக்க உறுதியேற்போம்!

    இவ்வாறு கூறினார்.


    • கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் வேலுநாச்சியார் சிலை நிறுவப்பட்டது.
    • வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

    சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் வீரமங்கை வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

     

    கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் ரூ.50 லட்ச செலவில் நிறுவப்பட்ட வேலுநாச்சியார் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து அமைச்சர்கள், மேயர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    • சிவகங்கையில் வேலுநாச்சியார் சிலைக்கு நகரசபை தலைவர் மரியாதை செலுத்தப்பட்டது.
    • பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    சிவகங்கை

    சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 226-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. நகர் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரை ஆனந்தன் தலைமை தாங்கினார்.

    அவரது தலைமையில் தி.மு.க.வினர் வேலு நாச்சியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சி லர்கள் கார்த்திகேயன், ராமதாஸ், விஜயக்குமார், சரவணன், ராஜபாண்டி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அவரது வாரிசான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

    இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கருணாகரன் அருள்ஸ்டிபன், கோபி, சிவாஜி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர் சங்கர்ரா மநாதன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சதிஷ்.மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

    ×