வேலுநாச்சியார் சிலைக்கு நகரசபை தலைவர் மரியாதை

சிவகங்கையில் வேலுநாச்சியார் சிலைக்கு நகரசபை தலைவர் மரியாதை செலுத்தப்பட்டது. பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.
வேலுநாச்சியார் சிலைக்கு நகரசபை தலைவர் மரியாதை
Published on

சிவகங்கை

சிவகங்கையில் வீரமங்கை வேலு நாச்சியாரின் 226-வது நினைவேந்தல் நிகழ்ச்சி நடந்தது. தி.மு.க. நகர் செயலாளரும், நகர் மன்ற தலைவருமான துரை ஆனந்தன் தலைமை தாங்கினார்.

அவரது தலைமையில் தி.மு.க.வினர் வேலு நாச்சியாரின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில் நகர் மன்ற துணை தலைவர் கார்கண்ணன், கவுன்சி லர்கள் கார்த்திகேயன், ராமதாஸ், விஜயக்குமார், சரவணன், ராஜபாண்டி, மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

முன்னதாக அவரது வாரிசான சிவகங்கை ராணி மதுராந்தகி நாச்சியார் நினைவிடத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து, அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் முன்னாள் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், நாகராஜன், நகர செயலாளர் ராஜா ஆகியோர் வேலு நாச்சியார் சிலைக்கு மாலை அணிவித்து, நினைவிடத்தில் மலர் அஞ்சலி செலுத்தினர்.

இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலா ளர்கள் கருணாகரன் அருள்ஸ்டிபன், கோபி, சிவாஜி, தகவல் தொழில்நுட்ப மண்டல இணை செயலாளர் தமிழ்செல்வன், கூட்டுறவு வங்கி தலைவர் சங்கர்ரா மநாதன், பாசறை மாவட்ட இணைச்செயலாளர் சதிஷ்.மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ஜ.க, காங்கிரஸ், நாம் தமிழர், மற்றும் சமுதாய அமைப்பினரும் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com