என் மலர்
சென்னை
- 10 மசோதாக்களையும் நிறைவேற்றுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர்
- இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்தார். அந்த வகையில் 10 மசோதாக்கள் கிடப்பில் போடப்பட்டன.
இதற்கிடையே 2 மசோதாக்களை அவர் ஜனாதிபதி பார்வைக்கு அனுப்பி வைத்திருந்தார். இதை எதிர்த்து தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்து சமீபத்தில் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டனர். தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நீண்டகாலம் நிலுவையில் வைத்திருந்தது சட்ட விரோதம் என்று தீர்ப்பு அளித்தனர்.
அதோடு ஆளுநர் வசம் உள்ள 10 மசோதாக்களையும் அரசிதழில் வெளியிட்டு நிறைவேற்றலாம் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு மூலம் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கைகளில் தமிழ்நாடு அரசுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்தது. 415 பக்கங்கள் கொண்ட அந்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து 10 மசோதாக்களையும் நிறைவேற்றுவது தொடர்பாக கடந்த சில தினங்களாக தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். தற்போது அந்த மசோதாக்களை தமிழ்நாடு அரசு சட்டமாக்கி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
10 மசோதாக்களையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது
இதனை அடுத்து, தமிழ்நாடு அரசு அம்மசோதாக்களை அனுப்பிய 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் 18-ந் தேதியில் ஆளுநர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அரசிதழில் தெரிவித்துள்ளது.
இந்த தீர்ப்புகள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதன் மூலம் இந்த தீர்ப்பு உடனடியாக சட்டமானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14.
- அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும், அறிவுப் பரப்பும், எண்ணுந்தொறும் உள்ளம் சிலிர்க்கும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. "சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்" என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.
பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14. ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுள் ஒருவராகப் பிறந்து, மதி நுட்பத்தால், பல்வேறு துறைகளில் மேன்மையான பட்டங்களைப் பெற்று, உலக நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் மிகப்பெரும் தன்மைகளை எல்லாம் ஆராய்ந்து, இந்திய மாநிலங்களின் ஒன்றியத்திற்கான அரசமைப்புச் சட்டத்தை, நெகிழ்ச்சி உடையதாகவும், அதே நேரத்தில் இறுக்கமானதாகவும் உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும், அறிவுப் பரப்பும், எண்ணுந்தொறும் உள்ளம் சிலிர்க்கும். அறிவின் வாராத வெற்றிகள் இல்லை என்பதை நிலைநாட்டியவர்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகளை ம.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நேற்று கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 745-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 3-ந்தேதி வரை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், அன்றைய தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதன் பின்னரும் விலை அதிகரிக்கும் என்ற அச்சத்தை கொடுத்த நிலை மாறி, மறுநாளில் இருந்து தங்கம் விலை மளமளவென சரியத் தொடங்கியது. அதன்படி, கடந்த 4-ந்தேதியில் இருந்து 8-ந்தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.335-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 680-ம் அதிரடியாக குறைந்து சற்று நிம்மதியை அளித்தது. ஆனால் அது நீடிக்கவில்லை.
நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.150-ம், சவரனுக்கு ரூ.1,200-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று கிராமுக்கு ரூ.185-ம், சவரனுக்கு ரூ.1,480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 745-க்கும், ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்திய வரலாற்றில் முதல் முறையாக தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,770-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.70,160-க்கும் விற்பனையாகிறது.
இதன் மூலம் 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.4,360 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 110 ரூபாய்க்கும் கிலோவுக்கு இரண்டாயிரம் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
11-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,960
10-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480
09-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,280
08-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.65,800
07-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,280
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
11-04-2025- ஒரு கிராம் ரூ.108
10-04-2025- ஒரு கிராம் ரூ.107
09-04-2025- ஒரு கிராம் ரூ.104
08-04-2025- ஒரு கிராம் ரூ.102
07-04-2025- ஒரு கிராம் ரூ.103
- சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. - கே.கே.ஆர். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.
- 3 பேரிடம் இருந்தும் 11 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சி.எஸ்.கே. - கே.கே.ஆர். போட்டி டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்ற 3 கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 3 பேரிடம் இருந்தும் 11 ஐ.பி.எல். டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறக் கூடாது என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
- வருகிற தேர்தலில் அமையும் கூட்டணியை பொறுத்து அவரது அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறக் கூடாது என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் வேறு விதமாக ஒரு கணக்கை போட்டு வைத்திருப்பதாகவும், அந்த பாதையில் ரகசியமாக காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
அதாவது எதிர்காலத்தில் உதவும் எனக்கருதி புதிதாக ஒரு கட்சியை தொடங்க தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்து இருப்பதாக தெரிகிறது. அவரது ஆதரவாளர் ஒருவர் விண்ணப்பம் அளித்திருப்பதாகவும், அந்தக் கட்சிக்கு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.
வருகிற தேர்தலில் அமையும் கூட்டணியை பொறுத்து அவரது அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது.
- கோடையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை பீர் விற்பனை நன்றாகவே இருக்கும்.
சென்னை:
தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4,777 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் சராசரியாக தினமும் 1.60 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகின்றன. அதில் 85 லட்சம் பெட்டிகள் பீர் பாட்டில்கள் ஆகும். கோடை காலம் என்றாலே பீர் விற்பனை அதிகமாக இருக்கும். மதுபிரியர்கள் குளிர்ச்சியான பீர் கேட்பதால், அனைத்து கடைகளிலும் குளிர்சாதன பெட்டியில் போதிய அளவு பீர் பாட்டில்கள் இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது. அதாவது முந்தைய ஆண்டுடன் ஏப்ரல் முதல் வாரத்தில் ஒப்பிடும்போது சுமார் 12 சதவீதம் அளவுக்கு தமிழகம் முழுவதும் பீர் விற்பனை குறைந்து விட்டது என்றும், குறிப்பாக சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், தஞ்சை ஆகிய மண்டலங்களில் மட்டும் 24 சதவீதம் அளவிற்கு பீர் விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும் அவர்கள், விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கோடையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை பீர் விற்பனை நன்றாகவே இருக்கும். மழை பெய்யும் நாட்களில் விற்பனை சரியும் என்றனர்.
மேலும் பீர் விற்பனையை அதிகரிக்கும் விதமாக ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மது தயாரிக்கும் நிறுவனத்தின் 'பிளாக் பஸ்டர்' என்ற பீர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலத்தின் 'பிளாக் போர்ட்' மற்றும் 'உட்பெக்கர்' ஆகிய இரண்டு வகை பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது தவிர மேலும் ஒரு வகை பீர் அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
- கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது.
- ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சி.எஸ்.கே. அணி தொடர்ந்து 5 முறை தோல்வி அடைந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், எந்த ஒரு தனி நபரும் விளையாட்டை விட பெரிது அல்ல என தோனியை மறைமுகமாக விமர்சித்து நடிகர் விஷ்ணு விஷால் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விஷ்ணு விஷால் எக்ஸ் பக்கத்தில், நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்கவேண்டும். எந்த ஒரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கசைப் பார்ப்பது போல உள்ளது. எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல என பதிவிட்டுள்ளார்.
- பேட்டிங்கின்போது நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை.
- எங்களுக்கு பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை என்றார் தோனி.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர். தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்விக்குப் பிறகு சென்னை அணி கேப்டன் எம்.எஸ்.தோனி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த சில நாட்களாகவே எங்களுக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. நிறைய சவால்கள் இருக்கிறது. அதையெல்லாம் சமாளித்துதான் ஆக வேண்டும்.
நாங்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. பேட்டிங்கின்போது பந்து கொஞ்சம் நின்றுதான் வந்தது. நாங்கள் பவுலிங் செய்கையில் அவர்களுக்கும் அப்படித்தான் இருந்தது. எங்களுக்கு பார்ட்னர்ஷிப்களே அமையவில்லை.
நாங்கள் சில போட்டிகளில் நன்றாக ஆடியிருக்கிறோம். எங்களது அணுகுமுறையை வேறு அணிகளோடு ஒப்பிட வேண்டாம் என நினைக்கிறேன்.
எங்களுடைய பலம் என்னவோ அதற்கேற்ப ஆடினால் போதும் என நினைக்கிறேன். எங்கள் அணியில் சிறப்பான ஓப்பனர்கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லா பந்துளையும் சிக்சர் அடிக்கக் கூடியவர்கள் அல்ல. ஆனால், அவர்கள் திறன்வாய்ந்த தரமான பேட்டர்கள். ஸ்கோர் போர்டை பார்த்து அழுத்தம் ஏற்றிக்கொள்ளாமல் சீரான இடைவெளியில் பவுண்டரிகளை அடித்தாலே நமக்கு தேவையான ஸ்கோர் வந்துவிடும்.
பவர்பிளேவில் 60 ரன்கள் அடிக்கவேண்டும் என்று நினைத்து ஆடக்கூடாது. ஏனென்றால் பவர்பிளேவில் விக்கெட்டுகளை அதிக அளவு இழந்துவிட்டால் பின்னர் நடு வரிசை வீரர்களுக்கு அது கடினமாக மாறிவிடும். இதன்மூலம் பின்வரிசை வீரர்களால் பெரிய ஷாட்டுகளை ஆட முடியாது என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய கொல்கத்தா 10.1 ஓவரில் 107 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் சீசனில் தொடர்ந்து 5 தோல்விகளை முதல் முறையாக சி எஸ் கே அணி பெற்று மோசமான சாதனை படைத்துள்ளது.
இதேபோல், சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து 3 முறை தோற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது.
சென்னை:
ஐபிஎல் 2025 சீசனின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.
முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கொல்கத்தா அணியின் துல்லிய பந்துவீச்சில் சென்னை வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.
பவர்பிளேயில் சிஎஸ்கே 2 விக்கெட் இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. டி காக், சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். டிகாக் 23 ரன்னில் அவுட்டானார்.
சுனில் நரைன் அதிரடியாக ஆடி 18 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.
- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
- புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி மூலம் வளம், வளர்ச்சி, வாய்ப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கைகோர்க்கும் என்ற ஒரு முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிடும் பெருமை எனக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கும் கிடைத்தது.
திமுகவின் பின்னடைவு தீய ஆட்சியிலிருந்து தமிழ்நாட்டை விடுவிப்பதற்கும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்குத் தடையாக இருந்த வரலாற்றுத் தவறுகளைச் சரிசெய்வதற்கும், உள்ளடக்கிய வளர்ச்சி, மேம்பாடு மற்றும் வாய்ப்புகளின் புதிய சகாப்தத்திற்கு அடித்தளம் அமைப்பதற்கும் இந்த கூட்டணி அதன் அசைக்க முடியாத உறுதிப்பாட்டில் ஒன்றுபட்டுள்ளது.
எனது இல்லத்தில் நடத்தப்பட்ட இரவு உணவு விருந்தை தனது முன்னிலையில் கவுரவித்ததற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களுக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
ஒன்றிணைந்து, பிரகாசமான, வலுவான மற்றும் துடிப்பான தமிழ்நாட்டை உருவாக்குவதற்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வை மற்றும் உறுதியான தீர்மானத்துடன் நாம் முன்னேறிச் செல்கிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது.
- திமுக எம்பி கனிமொழி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைச்சர் பொன்முடி கூட்டத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தி.மு.க. துணை பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்திருந்தார்.
அப்போது அவர்," அமைச்சர் பொன்முடியின் சமீபத்திய பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது. எந்த காரணத்திற்காகப் பேசப்பட்டிருந்தாலும் இப்படிப்பட்ட கொச்சையான பேச்சுகள் கண்டிக்கத்தக்கது" என்றார்.
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அதிமுக- பாஜக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அமைச்சர் பொன்முடியின் சர்ச்சை பேச்சு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கனிமொழி ஆதங்கத்துடன் பதில் அளித்தார்.
அப்போது அவர், "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத் தலைவராக அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.
ஒருவருக்கு எத்தனை முறை தண்டனை தருவது என்ற கேள்வி இருக்கிறது. எதுவாக இருந்தாலும் முதலமைச்சர்தான் முடிவு செய்ய வேண்டும்" என்றார்.






