என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மதுப்பிரியர்களை குஷிப்படுத்த 4 புதுவகை பீர் அறிமுகம் - டாஸ்மாக் ஏற்பாடு
    X

    மதுப்பிரியர்களை குஷிப்படுத்த 4 புதுவகை 'பீர்' அறிமுகம் - டாஸ்மாக் ஏற்பாடு

    • வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது.
    • கோடையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை பீர் விற்பனை நன்றாகவே இருக்கும்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசு டாஸ்மாக் நிறுவனம் மூலம் மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4,777 கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் சராசரியாக தினமும் 1.60 லட்சம் மது பெட்டிகள் விற்பனையாகின்றன. அதில் 85 லட்சம் பெட்டிகள் பீர் பாட்டில்கள் ஆகும். கோடை காலம் என்றாலே பீர் விற்பனை அதிகமாக இருக்கும். மதுபிரியர்கள் குளிர்ச்சியான பீர் கேட்பதால், அனைத்து கடைகளிலும் குளிர்சாதன பெட்டியில் போதிய அளவு பீர் பாட்டில்கள் இருப்பு வைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், வழக்கத்திற்கு மாறாக டாஸ்மாக் கடைகளில் பீர் விற்பனை குறைந்துள்ளதாக தெரிகிறது. அதாவது முந்தைய ஆண்டுடன் ஏப்ரல் முதல் வாரத்தில் ஒப்பிடும்போது சுமார் 12 சதவீதம் அளவுக்கு தமிழகம் முழுவதும் பீர் விற்பனை குறைந்து விட்டது என்றும், குறிப்பாக சேலம், நாமக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், தஞ்சை ஆகிய மண்டலங்களில் மட்டும் 24 சதவீதம் அளவிற்கு பீர் விற்பனை குறைந்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    மேலும் அவர்கள், விற்பனையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், கோடையில் ஏப்ரல் முதல் ஜூலை வரை பீர் விற்பனை நன்றாகவே இருக்கும். மழை பெய்யும் நாட்களில் விற்பனை சரியும் என்றனர்.

    மேலும் பீர் விற்பனையை அதிகரிக்கும் விதமாக ஏற்கனவே டாஸ்மாக் நிறுவனம், ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த மது தயாரிக்கும் நிறுவனத்தின் 'பிளாக் பஸ்டர்' என்ற பீர் பாட்டிலை அறிமுகம் செய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மத்திய பிரதேச மாநிலத்தின் 'பிளாக் போர்ட்' மற்றும் 'உட்பெக்கர்' ஆகிய இரண்டு வகை பீர் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அது தவிர மேலும் ஒரு வகை பீர் அறிமுகம் செய்யவும் டாஸ்மாக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    Next Story
    ×