என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்குகிறாரா?- தேர்தல் கமிஷனில் விண்ணப்பம்
    X

    ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்குகிறாரா?- தேர்தல் கமிஷனில் விண்ணப்பம்

    • கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறக் கூடாது என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.
    • வருகிற தேர்தலில் அமையும் கூட்டணியை பொறுத்து அவரது அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்த கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இடம் பெறக் கூடாது என்பதை எடப்பாடி பழனிசாமி தரப்பினர் வலியுறுத்தி வருவதாக தெரிகிறது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் வேறு விதமாக ஒரு கணக்கை போட்டு வைத்திருப்பதாகவும், அந்த பாதையில் ரகசியமாக காய் நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

    அதாவது எதிர்காலத்தில் உதவும் எனக்கருதி புதிதாக ஒரு கட்சியை தொடங்க தேர்தல் கமிஷனில் விண்ணப்பித்து இருப்பதாக தெரிகிறது. அவரது ஆதரவாளர் ஒருவர் விண்ணப்பம் அளித்திருப்பதாகவும், அந்தக் கட்சிக்கு எம்.ஜி.ஆர். அ.தி.மு.க. என பெயர் சூட்டப்பட்டு இருப்பதாகவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்தன.

    வருகிற தேர்தலில் அமையும் கூட்டணியை பொறுத்து அவரது அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×