என் மலர்
ஐ.பி.எல்.(IPL)

எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல: சென்னை அணியை சாடிய விஷ்ணு விஷால்
- கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை தோல்வி அடைந்தது.
- ஐபிஎல் தொடரில் முதல் முறையாக சி.எஸ்.கே. அணி தொடர்ந்து 5 முறை தோல்வி அடைந்துள்ளது.
சென்னை:
நடப்பு ஐபிஎல் தொடரின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், எந்த ஒரு தனி நபரும் விளையாட்டை விட பெரிது அல்ல என தோனியை மறைமுகமாக விமர்சித்து நடிகர் விஷ்ணு விஷால் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக விஷ்ணு விஷால் எக்ஸ் பக்கத்தில், நான் ஒரு கிரிக்கெட் வீரராக இருப்பதைத் தவிர்த்துவிட்டேன். நான் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வர விரும்பவில்லை. ஆனால் இது அராஜகம். ஏன் இவ்வளவு கீழ் வரிசையில் இறங்கவேண்டும். எந்த ஒரு விளையாட்டும் வெற்றி பெறுவதற்காக விளையாடப்படுவதில்லையா? இது இப்போது ஒரு சர்க்கசைப் பார்ப்பது போல உள்ளது. எந்த ஒரு தனிநபரும் விளையாட்டை விட பெரியவர் அல்ல என பதிவிட்டுள்ளார்.






