என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    சுனில் நரைன் அபாரம்: 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா
    X

    சுனில் நரைன் அபாரம்: 8 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தியது கொல்கத்தா

    • டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்தது.

    சென்னை:

    ஐபிஎல் 2025 சீசனின் 25-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்தது.

    முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். கொல்கத்தா அணியின் துல்லிய பந்துவீச்சில் சென்னை வீரர்கள் விரைவில் பெவிலியன் திரும்பினர்.

    பவர்பிளேயில் சிஎஸ்கே 2 விக்கெட் இழந்து 31 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஷிவம் துபே 31 ரன்னும், விஜய் சங்கர் 29 ரன்னும் எடுத்தனர்.

    கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 104 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. டி காக், சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். டிகாக் 23 ரன்னில் அவுட்டானார்.

    சுனில் நரைன் அதிரடியாக ஆடி 18 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், கொல்கத்தா 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியது.

    Next Story
    ×