என் மலர்
சென்னை
- தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு.
- எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சரவையை பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது.
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன எனச் சொல்லியிருக்கிறார்.
தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி சாத்தியமே இல்லை என்ற அடிப்படக் கோட்பாடு எல்லாக் கட்சித் தலைவர்களிடம் உண்டு.
2026-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கட்சி தோற்றாலும் பரவாயில்லை. தன் மீதும் தன் மகன் மீதும் சம்பந்தி மீதும் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ நடவடிக்கைகள் பாய்ந்துவிடக் கூடாது எனக் கட்சியை பாஜகவிடம் அடகு வைத்த, கூட்டணிக்கு சம்மதித்த எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பாதாள வீழ்ச்சியின் கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது.
தொடர்ந்து 10 தேர்தல்களில் தோற்ற கைராசிக்காரர்தான், ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன என ஜோசியம் சொல்கிறார்.
தொடர் தோல்விகளைச் சந்திப்பதில் புரட்சி செய்த, தோல்விப் புரட்சியாளர்தான் எடப்பாடி பழனிசாமி. தன் கைக்குக் கிடைத்த கட்சியைச் சீரழித்துச் சின்னாபின்னமாக்கி, தோல்வியில் சாதனை சரித்திரம் படைத்துவரும் 'தோல்வி'சாமி அதிமுகவை பாதாள வீழ்ச்சிக்கு கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.
செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் பற்றியெல்லாம் பேசப் எடப்பாடி பழனிசாமிக்கு அருகதையே இல்லை. தன்னுடைய ஆட்சியில் அமைச்சரவை மாற்றம் செய்யாமல் ஆட்சி செய்தாரா? தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் பதவியை எதற்காகப் பறித்தீர்கள்? பொதுச் சொத்துக்குச் சேதம் ஏற்படுத்திய வழக்கில் தண்டனை பெற்றதற்காக பாலகிருஷ்ண ரெட்டி அமைச்சர் பதவியை இழக்கவில்லையா? இதையெல்லாம் பழனிசாமி மறந்துவிட்டாரா?.
தெர்மாகோல் தொடங்கி சோப்பு நுரை வரை எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் உள்ள மந்திரிகள் உதிர்த்த உளறல் முத்துக்களை எல்லாம் தொகுத்தால், அது ஒரு வரலாற்று ஆவணம்; முதல்-அமைச்சர் முன்பே மேடையில் அடித்துக்கொண்ட காட்சிகள் எல்லாம் காவியம். இப்படி மங்குனி மந்திரிசபையை நடத்திவிட்டு, தார்மீகப் பொறுப்புடன் நடக்கும் திமுக அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?
எடப்பாடி பழனிசாமி ஆட்சி ஊழல் நிறைந்தது' என்று சொல்லிப் போராட்டத்துக்குத் தேதி குறித்த 11 எம்.எல்.ஏ.க்களை வைத்து இரட்டை இலையை முடக்கிய பன்னீர்செல்வத்துக்கு, துணை முதல்-அமைச்சர் அளித்த பழனிசாமி எல்லாம் தலைவர் மு.க.ஸ்டாலினின் அமைச்சரவையைப் பற்றிப் பேச அருகதை இல்லாதவர்.
எம்.ஜி.ஆரோ ஜெயலலிதாவோ, கட்சிக்காரர் தவறு செய்தால் அவரின் கட்சிப் பதவியை, அமைச்சர் பதவியைப் பறிப்பார்கள்; இல்லை கட்சியை விட்டே நீக்குவார்கள். ஆனால் எம்.எல்.ஏ பதவியைப் பறித்ததில்லை. அந்த மாபாதகத்தைச் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. தன் ஆட்சியைக் காப்பாற்ற அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 18 பேரைத் தகுதிநீக்கம் செய்தார். அந்த எடப்பாடி பழனிசாமி திமுக அமைச்சரவையை பற்றிப் பேசாமல் இருப்பதுதான் அவருக்கு நல்லது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.
- இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில்," தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அஜித் குமார் அவர்கள் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்" என்றார்.
- பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம்.
- மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் ஓட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கென தலா 3 ரெயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரெயில்கள் தயாரிக்கப்படுகின்றன. இதற்கான ஒப்பந்தம் BEML நிறுவனத்திற்கு ரூ.3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம், பூந்தமல்லி- போரூர் இடையே கடந்த மாதம் ஓட்டுனர் இல்லாமல் ரெயிலை இயக்கி முதல்கட்ட சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
மேலும், பூந்தமல்லி பணிமனை - முல்லை தோட்டம் இடையே சுமார் 2.5 கி.மீ. தூரத்திற்கு முதற்கட்ட சோதனை ஓட்டம், கடந்த மார்ச் 20-ந் தேதி வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் பூந்தமல்லி - போரூர் தடத்தில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரெயிலின் 2-வது கட்ட சோதனை ஓட்டம் இன்று மாலை நடைபெற்றது.
அதன்படி, பூந்தமல்லி- போரூர் இடையே 9.1 கிலோ மீட்டர் தொலைவிலான 2ம் கட்ட ஓட்டுநர் இல்லா சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவுபெற்றது. இந்த மெட்ரோ ரெயில் 35- 40 கி.மீ வேகத்தில் ரெயில் இயக்கப்பட்டது.
- சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.
- மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படி உத்தரவு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் மே 3ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மே 3ம் தேதி காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பொதுச் செலயாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
மேலும், மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்படியும் அவர் கேட்டுக்கொண்டார்.
- நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
- சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த நீதிபதி உள்பட 77 நீதிபதிகள் பணி இடமாற்றம் செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் அல்லி அறிவித்துள்ளார்.
அதன்படி, பொள்ளாச்சி பாலியல் வழக்கை விசாரித்த கோவை மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தின தேவி, கரூர் குடும்ப நல நீதிமன்றத்திற்கு மற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி இளவழகன் கரூர் மாவட்ட நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக இருந்த எழில்வேலன், சேலம் மாவட்ட கூடுதல் நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
- மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.
- வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அமைச்சரவையில் 6வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் இருந்து மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார்.
இதேபோல், வனத்துறை அமைச்சராக இருந்த பொன்முடியும், அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்களுக்கு, செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரத்துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் முத்துச்சாமிக்கு மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பொன்முடி வகித்த வனத்துறை, அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக கைத்தறித்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் மனோ தங்கராஜ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். மனோ தங்கராஜூக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலாகா குறித்து அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், கிண்டி ராஜ்பவனில் நடைபெற்று வரும் பதவியேற்பு விழாவில் மனோ தங்கராஜ் அமைச்சராக பதவி ஏற்றார்.
மனோ தங்கராஜூக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர் மனோ தங்கராஜூக்கு பால்வளத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பால்வளத் துறையை கவனித்துக் கொண்ட நிலையில் மீண்டும் அதே இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
- ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார்.
- மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு 17% உயர் ரத்த அழுத்தம், 16.7% நீரிழிவு நோயும் கட்டுப்பாடு.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம் குறித்து ஆங்கில நாளேடு வெளியிட்ட செய்தியை சுட்டிக்காட்டி முதலமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மக்களைதேடிமருத்துவம் வெறும் சுகாதாரப் பராமரிப்பை வழங்குவதோடு மட்டுமல்லாமல் - அது பலனையும் அளித்து வருகிறது.
மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம், தமிழ்நாடு 17% உயர் ரத்த அழுத்தம், 16.7% நீரிழிவு நோயும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து பொது சுகாதார வெற்றி எவ்வாறு அளவிடப்படுகிறது என்பதை மறுவடிவமைக்கிறது.
மக்களவை தேடி மருத்துவம் திட்டத்தில் அவர்களுக்காகக் காத்திருக்காமல் மக்களைச் தேடிச் சென்றடைவதன் மூலம் வெற்றிப்பெற்றுள்ளோம். இத்திட்டம் இந்தியா முழுவதும் பொது சுகாதாரத்திற்கான அடையாளமாக மாறியுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
- போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரம் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
அதிமுக ஆட்சியில் எங்கும் குட்கா, எங்கும் போதைப்பொருள் என்ற நிலை இருந்தது.
உயர் பதவியில் இருந்த காவலர்கள் கூட சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
தமிழகத்தில் 96 ஆயிரம் கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.
போதைப்பொருள் ஒழிப்பில் இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் சிறந்த மாநிலமாக உள்ளது.
குட்கா விற்கும் கடைகளை மூடி வருகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும்.
- செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும்.
செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யக்கோரிய மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அந்த வகையில் புதிய கட்டுப்பாடு தேவையில்லை என நீதிபதிகள் தரப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, விசாரணை முடியும் வரை செந்தில் பாலாஜி அமைச்சராகவோ அல்லது எந்த அரசு பதவிகளும் வழங்கக்கூடாது. டெல்லி முதல்வர் தலைமைச் செயலகம் செல்லக்கூடாது என உத்தரவிட்டதை போல செந்தில் பாலாஜிக்கும் உத்தரவிட வேண்டும். பண மோசடி வழக்கில் விசாரணையை விரைந்து நடத்த உத்தரவிட வேண்டும். செந்தில் பாலாஜிக்கு கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு செந்தில் பாலாஜி தரப்பில்,"அமலாக்கத்துறையின் வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரை எந்த பதவியும் வகிக்கக் கூடாதா? மீண்டும் அமைச்சராக முடியாது என உச்சநீதிமன்றம் கூற அதிகாரம் இல்லை" என்று கேள்வி எழுப்பப்பட்டது.
மேலும், " லஞ்ச வழக்கில் விசாரணை முடியாமல் பண மோசடி வழக்கு விசாரணையை எப்படி தொடங்க முடியும் ? செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராக பதவியேற்றால் அவரின் ஜாமீனை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தை மனுதாரர் அணுகலாம் என்று நீதிபதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
- சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்.
ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி வரை வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வருகிற 1-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தெரிவிக்கிறார்.
- மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் புதிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார்.
சென்னை:
தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் கடந்த மாதம் (மார்ச்) 14-ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம் பட்ஜெட்டும், அதற்கு மறுநாள் (15-ந்தேதி) வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது.
அதன் பிறகு இரு பட்ஜெட் மீதான விவாதம் 5 நாட்கள் நடைபெற்றது.
இதன் தொடர்ச்சியாக மார்ச் 24-ந்தேதி முதல் சட்டசபைக் கூட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒவ் வொரு துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப் பட்டு அதன் மீது விவாதமும் அமைச்சர்களின் பதிலுரையும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மீட்பு பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார். இதன் மீது சட்டசபையில் ஒவ்வொரு கட்சி எம்.எல்.ஏ.க்களும் பேசினார்கள். அவ்வப்போது குறுக்கிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
இந்த மானியக் கோரிக்கைகளுக்கான விரிவான பதிலுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தெரிவிக்கிறார். அப்போது காவல் துறை தீயணைப்பு துறைக்கான புதிய அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.
சட்டசபைக் கூட்டத் தொடரில் வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 5 ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்ட மசோதாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்திருந்தார்.
அதே போல் மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணையின்றி சிறையில் அடைக்கும் புதிய மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்திருந்தார்.
இதே போல் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, முத்துசாமி, மூர்த்தி கோவி. செழியன் ஆகியோரும் சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கான மசோதாவும் இன்று அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த மசோதாக்கள் அனைத்தும் நாளை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படுகின்றன. அத்துடன் சட்டசபைக் கூட்டம் நாளை முடிவடைகிறது.
- துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.
- தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளை, கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டினார்.
இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
* பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டக்கூடாது.
* அ.தி.மு.க. ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.
* அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சியே சாட்சி.
* துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.
* இந்த ஆட்சியை பற்றி குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.
* தமிழ்நாட்டை புலம்ப வைத்ததுதான் அ.தி.மு.க. ஆட்சியுடைய சாதனை
* தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
* ஏ மற்றும் ஏ பிளஸ் ரவுடிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
* தி.மு.க. ஆட்சி குறித்து பேச அ.தி.மு.க.விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






