என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகத்தில் 1-ந்தேதி வரை வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
    X

    தமிழகத்தில் 1-ந்தேதி வரை வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்

    • தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. மே 28-ந்தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கும்.

    ஆனால் தற்போது அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 1-ந்தேதி வரை வெயில் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் வருகிற 3-ந்தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் உள்ள சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழகத்தில் ஒருசில இடங்களில் வருகிற 1-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரும். 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    Next Story
    ×