என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி - இ.பி.எஸ்.-க்கு முதலமைச்சர் பதிலடி
    X

    பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி - இ.பி.எஸ்.-க்கு முதலமைச்சர் பதிலடி

    • துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.
    • தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சட்டசபையில் பேசிய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை. கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் கொள்ளை, கொலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று தி.மு.க. அரசு மீது குற்றம்சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

    * பொத்தாம் பொதுவாக எதிர்க்கட்சித் தலைவர் குற்றம் சாட்டக்கூடாது.

    * அ.தி.மு.க. ஆட்சியின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி.

    * அவமான ஆட்சிக்கும், துயரமான ஆட்சிக்கும் அ.தி.மு.க. ஆட்சியே சாட்சி.

    * துயரங்களை கொடுக்கக்கூடிய ஆட்சிக்கு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடே சாட்சி.

    * இந்த ஆட்சியை பற்றி குறை சொல்வது இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை.

    * தமிழ்நாட்டை புலம்ப வைத்ததுதான் அ.தி.மு.க. ஆட்சியுடைய சாதனை

    * தி.மு.க. ஆட்சியில் கொலை, கொள்ளைகள் குறைந்துள்ளது. 3,643 ரவுடிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    * ஏ மற்றும் ஏ பிளஸ் ரவுடிகளின் எண்ணிக்கை 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

    * தி.மு.க. ஆட்சி குறித்து பேச அ.தி.மு.க.விற்கு எந்தவிதமான தகுதியும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×