என் மலர்
நீங்கள் தேடியது "பத்ம பூஷண்"
- அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.
- அஜித் குமார் ஃபார்முலா- 2 பந்தய வீரராக சிறந்து விளங்குகிறார்.
டெல்லியில் நேற்று நடிகர் அஜித்குமாருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்ம பூஷண் விருது வழங்கினார்.
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.
அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது கிடைத்ததை அவரது ரசிகர்கள் நேற்று கொண்டாடி மகிழ்ந்தனர். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் வாழ்த்து மழையாக பொழிந்தது.
இந்த நிலையில், அஜித் குமாருக்கு ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்
பத்ம பூஷண் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு மனமார்ந்த வாழ்த்துகள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார்.
திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் அவர் பதித்துள்ளார். ஃபார்முலா- 2 பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித் குமார் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

- பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.
- இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டும்.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு வழங்கி கவுரவித்தார்.
இந்நிலையில், நடிகர் அஜித் குமாருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில்," தன் திரைத் துறை சாதனைகளுக்காக இந்திய அரசின் உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மபூஷன் விருது பெற்றுள்ள அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நடிகர் அஜித் குமாருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "அமராவதி திரைப்படம் மூலம் அறிமுகமாகி தமிழ் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்து, கார் பந்தயம், துப்பாக்கிச் சுடுதல், பைக் சுற்றுப்பயணம் என தனக்குப் பிடித்த துறைகளிலும் தனி முத்திரை பதித்து, இன்று கலைத்துறையில் பெரும் சாதனைகள் படைத்ததற்காக மத்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றிருக்கும் அஜித் குமார் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையின் மூலம் இன்று நாட்டின் உயரிய விருதைப் பெற்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ள அஜித் குமார் அவர்கள் கலைத்துறை மட்டுமன்றி பிற துறைகளிலும் மென்மேலும் பல சாதனைகள் படைத்து இளைஞர்களுக்கு தொடர்ந்து ஒரு சிறந்த முன்மாதிரியாக விளங்க வேண்டுமென மனமார வாழ்த்துகிறேன்" என்றார்.
- பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்தது.
- மத்திய அரசின் உயரிய விருதுகளில் பத்ம பூஷன் விருது ஒன்று.
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், மத்திய அரசின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை அஜித்குமாருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இன்று வழங்கினார்.
அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான குட் பேட் அக்லி திரைப்படம் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் அஜித்குமார் உள்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.
- இதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு நடிகர் அஜித்குமார் நன்றி தெரிவித்தார்.
சென்னை:
நாட்டின் குடிமக்களுக்கான உயரிய விருதுகளாக உள்ள பத்ம விருதுகள் பற்றிய அறிவிப்பு வெளியானது. இதில், நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பத்ம பூஷண் விருது அறிவித்ததற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு தன்னுடைய மனப்பூர்வ நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக, அஜித்குமார் வெளியிட்ட எக்ஸ் வலைதள செய்தியில், இந்திய ஜனாதிபதியிடம் இருந்து மதிப்புமிக்க பத்ம விருது பெறுவதில் ஆழ்ந்த பணிவும், கவுரவமும் அடைகிறேன்.
இந்த மதிப்புமிகு கவுரவத்திற்காக நான், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு என்னுடைய மனப்பூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த அங்கீகாரம் தனிப்பட்ட நபருக்கு கிடைத்த பாராட்டு என்றில்லாமல், கூட்டு முயற்சி மற்றும் பலருடைய ஆதரவு ஆகியவற்றிற்கான நற்சான்று என பதிவிட்டுள்ளார்.
இதேபோல், திரைத்துறையினர் மற்றும் விளையாட்டுத் துறையைச் சேர்ந்த ஆதரவளித்த அனைவருக்கும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்ததுடன், ரசிகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நலம் விரும்பிகளுக்கும், அவர்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக தன்னுடைய நன்றியை தெரிவித்துக் கொண்டார்.






