என் மலர்
சென்னை
- சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- இத்தொகை கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.99 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இத்தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- சிடிஎச் சாலை, மேனாம்பேடு சாலை, கோச்சர் அப்பார்ட்மெண்ட், கோரமண்டல் டவுன்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (25.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகள்: எஸ்டேட் பி பிளாக், புதிய டைனி செக்டர், பழைய டைனி செக்டர், 1வது மெயின் ரோடு, ஏடிசி சாலை, 2வது குறுக்குத் தெரு, 3வது தெரு செக்டர்-II, 2வது மெயின் ரோடு பகுதி, சிடிஎச் சாலை, மேனாம்பேடு சாலை, கோச்சர் அப்பார்ட்மெண்ட், கோரமண்டல் டவுன், 7வது மற்றும் 8வது தெரு, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம், குக்சன் சாலை, 7வது தெரு செக்டர் 3, ஆவின் சாலை கூட்டுப் பகுதி, சிட்கோ தொழிற்பேட்டை வடக்கு கட்டம் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னை எழும்பூரில் உள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
- ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 44-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
சி.பா.ஆதித்தனார் சிலைக்கு 'மாலைமுரசு' நிர்வாக இயக்குனர் இரா. கண்ணன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும தலைவர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், 'தினத்தந்தி' குழும இயக்குனர் பா.சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மாலை அணிவித்து வணங்கினர்.

அதனைத் தொடர்ந்து தினத்தந்தி, மாலைமலர், தந்தி டி.வி., டி.டி.நெக்ஸ்ட், ராணி, ராணி முத்து, ராணி பிரிண்டர்ஸ், ஹலோ எப்.எம்., சுபஸ்ரீ, இந்தியா கேப்ஸ், ஏ.எம்.என். டி.வி., கோகுலம் கதிர், பாரோஸ் ஓட்டல் ஆகியவற்றின் நிர்வாகிகளும், ஊழியர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் அஞ்சலி செலுத்தியவர்கள் விவரம் வருமாறு:-
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனித நேய அறக்கட்டளை தலைவரு மான சைதை துரைசாமி, தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளர் தளபதி பாஸ்கர், ஜி.கே.தாஸ், சிவாஜிநாதன், ஆர்.டி.குமார், ம.தி.மு.க. நிர்வாகிகள் ஜீவன், கழக குமார், மாவை மகேந்திரன், சுப்பிரமணி, லோகு, ராஜேந்திரன், செல்வபாண்டியன், ஆவடி அந்திரிதாஸ், கருணாகரன், தென்றல் நிசார், தாமோதரன், பூங்காநகர் ராமதாஸ்,
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் அய்யனார், மண்டல செயலாளர் டால் பின் ரவி, மாவட்ட செயலாளர் ஆனந்தகுமார், அன்பு தென்னரசு, சுமித்ரா, கவுசல்யா, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாரா யணன், நிர்வாகிகள் பாஸ்கர், வில்லியம்ஸ், ராஜேஷ், மாசிலாமணி, தாஸ், சதீஷ், சங்கர பாண்டி யன், அருண்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், செயல் தலைவர் ஏ.ரவிக்குமார், நிர்வாகிகள் பழனி, சுதர்சன், லோகநாதன், ராதா கிருஷ்ணன், சீனிவாசன், ஆனந்தன், முருகப்பெருமான், சங்கர், தீர்த்தகிரி, ஸ்ரீராம், வினோத்குமார், வெங்கடேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
- கேரளா கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா ஆகிய இடங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.
- மத்திய அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
கேரளா கடலோர பகுதிகள், தெற்கு கர்நாடகா மற்றும் கொங்கன், கோவா ஆகிய இடங்களில் இன்று அதிகனமழை பெய்யும்.
தமிழ்நாடு, வடக்கு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் மிக கனமழையும், குஜராத்தில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மத்திய அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி கொங்கன் கடற்கரை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடக்கும் என்று தெரிவித்து உள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை அடுத்து தமிழகம், புதுச்சேரியில் 9 இடங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
சென்னை, காட்டுப்பள்ளி, எண்ணூர், கடலூர், நாகை, பாம்பன், தூத்துக்குடி, புதுச்சேரி, காரைக்காலிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
- தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவோடு கூட்டணி வைத்தற்குக் காரணம் பழனிசாமியின் குடும்பம்தானே!
தமிழக அரசியலில் ஒரு சம்பவத்தை சாதாரண காலத்தில் எதிர்க்கட்சிகள் விமர்சித்தும், அதற்கு ஆளும் கட்சிகள் பதில் அளிப்பதும் தொடர்கதை தான். ஆனால் தேர்தல் களம் நெருங்க நெருங்க இரு தரப்பில் இருந்து ஏதாவது ஒரு விஷயத்திற்கு மாறிமாறி குற்றம்சாட்டுவதும் அதற்கு சமூக வலைத்தளங்களில் காமெடி கலந்த வகையில் மீம்ஸ்கள் பரப்பப்படுவதும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், தற்போது எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சிகள் தரப்பில் விமர்சிக்கப்படும் விஷயம் தான் நிதி ஆயோக். கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டதும் அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் விமர்சித்து இருந்தார். அவர் கூறியதாவது:- "மத்திய அரசு தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதால் நிதி ஆயோக் கூட்டத்தை நான் புறக்கணிக்கிறேன்" என்று வீராவேசமாக பேசிய பொம்மை வேந்தர் மு.க.ஸ்டாலின், தற்போது நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க டெல்லிக்கு பறக்கிறாராம்!
தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு தேவை என்றால் போகாதவர், தன் குடும்பத்திற்கு ஒரு தேவை என்றதும் செல்கிறார்!
அன்று 2G-க்காக அப்பா டெல்லி சென்றார்...
இன்று... டாஸ்மாக்... தியாகி... தம்பி...
வெள்ளைக் குடைக்கு வேலை வந்துவிட்டதோ?
படுத்தே விட்டாரய்யா...
எல்லாம் "தம்பி" படுத்தும் பாடு! என்று விமர்சித்தார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதி உரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24-ஆம் தேதி டெல்லி செல்கிறேன்!
சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள் மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப் பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?
"பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடையாது" என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் 'புலிகேசி'யாக மாறி 'வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற' பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக் கொடி ஏந்தியதாகப் பேச நா கூசவில்லையா?
இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக் கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால் தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக்கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!
இன்றைக்குக் கூட, தமிழ்நாட்டின் உரிமைக்காக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளேன்.
கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்! என்று பதில் அளித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனத்துக்கு, முந்தைய மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை.
உங்கள் குடும்பம் தானே?
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? மு.க.ஸ்டாலின் அவர்களே-
அது கண்ணாடி! …
உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்?
அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு
வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் ,
உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை
தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ்
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன்
காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக
வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது
தவழ்ந்து சென்றீர்களா?
ஊர்ந்து சென்றீர்களா?
எது ஸ்டாலினின் கை? என நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு எடப்பாடி பழனிசாமி பதில் கூறியிருந்தார்.
இதனிடையே, தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், பாஜகவோடு கூட்டணி வைத்தற்குக் காரணம் பழனிசாமியின் குடும்பம்தானே! "படுத்தே விட்டாரய்யா..." என்ற சொல்லுக்கு மொத்த உருவமே கூவத்தூர் பழனிசாமி. முதலமைச்சர் நிதி ஆயோக் கூட்டத்திற்குத்தான் செல்கிறார். அமித்ஷா வீட்டுக்கு அல்ல என்ற அடிப்படை அறிவுகூட இல்லாதவர் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் என்பது சாபக்கேடு என விமர்சித்தது.

இதனை தொடர்ந்து சென்னை மத்திய பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தயாநிதி மாறன் எக்ஸ் தள பக்கத்தில் வடிவேலு பட காட்சியை பகிர்ந்து, 'மருதமலை' திரைப்படத்தில் கைதியை தப்பவிட்ட வடிவேலுவை பார்த்து அர்ஜுன், ''என்னென்னமோ பேசுவியே இப்ப பேசுடா... எதாவது பேசுடா'' என்ற காமெடிதான் இன்றைக்கு நினைவுக்கு வருகிறது.
எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து சொல்லி வரும் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதை பற்றி ஏன் பேசாமல் இருக்கிறார்? டெல்லி எஜமான் கோபித்து கொள்வார் என்ற பயமா? ED, தன் வீடு தேடி வந்து விடும் என்ற அச்சமா?
"அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மவுனமாக இருப்பது ஏன்'' எனக் கடந்த 17-ம் தேதி வீராவேசமாகக் கேட்ட சூராதி சூரர் யார்? அந்த சூனா பானாவை கண்டா வரச் சொல்லுங்க… கையோடு கூட்டி வாருங்க.
பொய்களையும் அவதூறுகளையும் வைத்தே அரசியல் செய்யும் 'பச்சைப் பொய்' பழனிசாமி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைக் கண்டு, வெட்கி தலைகுனிய வேண்டும்! பாஜகவின் அடிமையாக வாழ்ந்து, அதிமுகவை பாஜகவின் கிளைக் கழகமாக மாற்றி, கீழ்த்தரமான அரசியல் செய்து வரும் பழனிசாமியின் அருவருக்கத்தக்கப் பித்தலாட்ட அரசியல் உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் கிழித்தெறியப்பட்டிருக்கிறது.
பழனிசாமி பதில் சொல்லுவாரா... பம்மி கிடப்பாரா? என்று விமர்சித்து உள்ளார்.
இப்படி ஒருவரையொருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.
பெரும்பாலும் அரசியல் தலைவர்கள் விமர்சிக்கும் போது காமெடிக்கு புகழ்பெற்ற வடிவேலு படங்களில் வரும் காமெடி வசனங்களை வைத்தே விமர்சிக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.
- தேர்தல் பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
- அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் அருண்ராஜ்.
சென்னை:
தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் முதல் முறையாக வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார். இதனால் பூத் கமிட்டி மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த அருண்ராஜ் விரைவில் விஜயை சந்தித்து த.வெ.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.
த.வெ.க.வில் அருண் ராஜ்-க்கு இணை பொதுச்செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, விஜய் கட்சிய தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து அருண்ராஜ் அவருக்கு ஆலோசனை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.
- இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் என்ன நியாயம் இருக்கிறது.
- பஹல்காம் சுற்றுலா தலத்தில் கூடுதல் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டாமா?
சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
* பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றது ஏன்?
* இந்தியா, பாகிஸ்தான் இடையிலான போரில் என்ன நியாயம் இருக்கிறது.
* இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகளை என்ன செய்தீர்கள்?
* இந்தியாவிற்குள் புகுந்து அப்பாவி மக்களை சுடும் தைரியம் பயங்கரவாதிகளுக்கு எப்படி வந்தது?
* பயங்கரவாதிகள் குழு நாட்டுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி திரும்பி விட முடியும் என்கிற எண்ணம் எப்படி வந்தது. அந்த எண்ணமே வந்து இருக்கக்கூடாது. அவ்வளவு பாதுகாப்பாக இருப்பார்கள். நினைத்தாலே போட்டுத்தள்ளி விடுவார்கள் என்கிற பயம் இருந்திருந்தால் அந்த சிந்தனை அங்கேயே செத்து இருக்கும்.
* புல்வாமா தாக்குதல் ஒரு படிப்பினை இல்லையா. பஹல்காம் சுற்றுலா தலத்தில் கூடுதல் பாதுகாப்பு இருந்து இருக்க வேண்டாமா?
* சொந்த நாட்டு மக்களை பாதுகாக்க முடியவில்லை. புல்வாமா தாக்குதலில் 42 ராணுவ வீரர்களையே நம்மால் பாதுகாக்க முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 975-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது.
- நேற்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 21-ந்தேதி ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து இருந்தது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினமும் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில், நேற்று விலை குறைந்திருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 975-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 940-க்கும், ஒரு சவரன் ரூ.71 ஆயிரத்து 520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 50 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,990-க்கும் சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,920-க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
23-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,520
22-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,800
21-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,440
20-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.69,680
19-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
23-05-2025- ஒரு கிராம் ரூ.111
22-05-2025- ஒரு கிராம் ரூ.112
21-05-2025- ஒரு கிராம் ரூ.111
20-05-2025- ஒரு கிராம் ரூ.108
19-05-2025- ஒரு கிராம் ரூ.109
- வரும் ஆண்டுகளிலும், ஆண்டுக்கு ஒரு கோடி என்ற இலக்குடன் அனைத்து வீடுகளுக்கு இந்த இணையதள சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
- வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன.
சென்னை:
இன்றைய டிஜிட்டல் காலத்தில் இணையதளம் என்பது நம் வாழ்க்கையின் அவசியமாக மாறியுள்ளது. நகர்ப்புற மக்களுக்கு மிக அதிவேகத்தில் இணையதள வசதி கிடைக்கிறது. ஆனால் கிராமப்புறங்களில் அந்த வசதி கிடைப்பதில்லை. இந்த பாகுபாட்டை குறைத்து, அனைத்து மக்களுக்கும் அதிவேக இணைய சேவையை வழங்கும் நோக்கத்தில் மத்திய அரசு 'பாரத் நெட்' திட்டத்தின் கீழ் அனைத்து கிராமப்புறங்களுக்கும் அதிவேக இணையதள சேவை வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.
தமிழகத்தில் இந்த திட்டம், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 12 ஆயிரத்து 525 கிராம பஞ்சாயத்துகளில் 'ஆப்டிகல் பைபர் கேபிள்கள் மூலம் அதிவேக இணைய தள சேவை வழங்க திட்டமிடப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கி, தற்போது அது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
அதாவது, இந்த திட்டத்திற்காக தமிழகத்தில் சுமார் 55 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு கேபிள் பதிக்கப்பட்டு உள்ளன. மேலும் 11 ஆயிரத்து 800 கிராமங்களில் பணிகள் முழுவதும் முடிவடைந்து விட்டன. வனப்பகுதிகள் உள்ளிட்ட சில இடங்களில் அனுமதி பெற்று கேபிள் பதிப்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் அங்கு மட்டும் பணிகள் முழுமை பெறவில்லை. இருப்பினும் அடுத்த மாதத்திற்குள் அந்த பணிகளையும் முடிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இதுவரை சுமார் 4 ஆயிரம் கிராமங்களில், இணையதள சேவை வழங்குவதற்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்புகள் https://tanfinet. tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இன்னும் சில தினங்களில் மேலும் 4 ஆயிரம் கிராமங்களுக்கும், அதனைத்தொடர்ந்து மீதமுள்ள கிராமங்களுக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
தற்போதைய நிலையில், ஏஜென்சிகள் நியமனம் முடிந்து விட்டால், அரசின் அனுமதி பெற்று உடனடியாக பொதுமக்களுக்கு இணைப்பு கொடுக்கப்பட்டு விடும். அடுத்த மாதத்தில் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டுக்குள் மட்டும் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேகத்தில் இணையதள சேவை கொடுக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஆண்டுகளிலும், ஆண்டுக்கு ஒரு கோடி என்ற இலக்குடன் அனைத்து வீடுகளுக்கு இந்த இணையதள சேவை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் வீடுகள், வணிக நிறுவனங்களுக்கு ஏற்றபடி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட உள்ளது. அதாவது வீடுகளுக்கு குறைந்தபட்சமாக ரூ.199 கட்டணத்தில், 20 எம்.பி.பி.எஸ் (Mpbs) வேகத்தில் அளவில்லா இணையதள சேவை வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ரூ.399 மற்றும் ரூ.499 திட்டமும் வழங்கப்பட உள்ளது. அதில் அதற்கேற்ற வகையில் வேகம் இருக்கும்.
அதேபோல் வணிக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு ரூ.899 மற்றும் ரூ.1,199 என்ற இரு திட்டங்கள் செயல்பட உள்ளன. ஆனால் இவற்றில் மாற்றம் வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
- கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
- கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று இரவு 9 மணியில் இருந்து திடீரென இடி, பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி, கரூர், விருதுநகர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- திடீரென பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து உள்ளனர்.
சென்னையில் பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்து வருகிறது.
அதன்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளான தாம்பரம், தரமணி, வேளச்சேரி, கிண்டி, குரோம்பேட்டை, சேலையூர், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
திடீரென பெய்து வரும் கனமழையால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.
- பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
- டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் சந்திப்பு.
டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை சந்தித்துள்ளார். டெல்லி ஜன்பத்தில் உள்ள இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார்.
பிரதமர் மோடி தலைமையில் நாளை நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி சென்ற நிலையில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.
இந்நிலையில், சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
சோனியா, ராகுல் உடனான ஒவ்வொரு சந்திப்பிலும் ஒரு சிறப்பு அரவணைப்பு இருக்கிறது.
சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்தித்தது உண்மையிலேயே குடும்பத்துடன் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






