என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    த.வெ.க.வில் இணையும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி! - பொதுச்செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு?
    X

    த.வெ.க.வில் இணையும் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி! - பொதுச்செயலாளர் பதவி வழங்க வாய்ப்பு?

    • தேர்தல் பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.
    • அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார் அருண்ராஜ்.

    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி உள்ள நடிகர் விஜய் முதல் முறையாக வருகிற சட்டசபை தேர்தலை எதிர்கொள்கிறார். இதனால் பூத் கமிட்டி மாநாடு, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

    இதனிடையே, தமிழக வெற்றிக் கழகத்தில் முன்னாள் ஐ.ஆர்.எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்த அருண்ராஜ் விரைவில் விஜயை சந்தித்து த.வெ.க.வில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.

    த.வெ.க.வில் அருண் ராஜ்-க்கு இணை பொதுச்செயலாளர் அல்லது துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    முன்னதாக, விஜய் கட்சிய தொடங்கிய ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து அருண்ராஜ் அவருக்கு ஆலோசனை அளித்து வந்ததாக கூறப்படுகிறது.

    Next Story
    ×