என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கரும்பு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு
    X

    கரும்பு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

    • சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • இத்தொகை கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

    கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.99 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இதுதொடர்பாக சுற்றுலா மற்றும் சர்க்கரை துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    கூட்டுறவு, பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை வழங்க ரூ.97.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    இத்தொகை சம்பந்தப்பட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் தொடர்புடைய விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×