என் மலர்
சென்னை
- ஏழை - எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு, தங்க நகையை அடமானம் வைத்தே கடன் பெற்று வருகிறார்கள்.
- நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
கூடிக் கலைவதல்ல கழகத்தின் நிகழ்வுகள். திசைவழியைத் தீர்மானிக்கும் செயல்பாடுகளைத் திட்டமிடும் களமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைகின்றது. இதுதான் இந்த இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. கழகம் என்ன முடிவெடுக்கும் என்பதை உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மாற்று இயக்கத்தினரும் உற்று நோக்குகின்ற சூழலில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கூடல் மாநகராம் மதுரையில் கழகப் பொதுக்குழு கூடுகிறது.
பேரறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையில் இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாநிலக் கட்சி என்ற நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம், பொதுக்குழு - செயற்குழு - மாநாடு என எதுவாக இருந்தாலும் அது கொள்கை சார்ந்த நோக்கத்துடன் நடத்தப்பட்டு, அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்வடிவம் பெறுவதால்தான்.
கட்சியைத் தொடங்கிய நாளிலேயே "களத்திற்கு வா போராடலாம் - சிறையை நிரப்பலாம்" என்று கழகத் தொண்டர்களை அழைத்தார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. பதவி சுகத்திற்காகவே கட்சி தொடங்குபவர்கள், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கட்சியையே அடமானம் வைத்தவர்கள் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில், சிறைவாசத்தைச் சிரித்த முகத்துடன் ஏற்று, நெருக்கடி நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கடந்த வெற்றிகரமான இயக்கமாகச் செம்மாந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மகத்தான இயக்கத்தைக் கட்டிக்காத்த உடன்பிறப்புகளாம் உங்களை வழிநடத்தும் தலைவனாக எனக்கு நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பை, மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் பயன்படுத்தி வருகிறேன்.
உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தஞ்சையில் கழகத்தின் விவசாய அணி சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து விவசாயச் சங்கங்களையும் இணைத்து, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக்கடன் நிபந்தனைகளை உடனே கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக உள்ள கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் வேளாண் பெருங்குடி மக்கள் அணி அணியாய்த் திரண்டு ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் கண்டனக் குரலை எழுப்புகிறார்கள்.
ஏழை - எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு, தங்க நகையை அடமானம் வைத்தே கடன் பெற்று வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகளால் வங்கிகளில் நகைக் கடன் பெறுவதில் மிகப்பெரும் நெருக்கடியை ஏழை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தனியார் கடன் நிறுவனங்களை அவர்கள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிக வட்டி, வட்டிக்கு வட்டி என்ற நிலைக்கு ஏழைகள் ஆளாவதும், அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த தங்க நகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அடமானம் பெற்று, தங்களை வளர்த்துக் கொள்ளவுமான நிலையை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள நிலையில், மக்களை வாட்டி வதைக்கும் இந்த நிபந்தனைகளைக் கைவிட வேண்டுமெனத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறேன். கடிதத்தில் நான் வைத்துள்ள கோரிக்கைக் குரலுடன், கழகத்தின் சார்பில் கண்டனக் குரலையும் விவசாயிகள் ஒருங்கிணைந்து எழுப்புகிறார்கள்.
மக்கள் நலனே நமது நோக்கம். ஒன்றிய பா.ஜ.க. அரசு நாட்டு மக்களின் நிலை பற்றிச் சிந்திக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நகைக்கடன் நிபந்தனைகள் வரை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் தொடுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை அந்தத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பெரியகருப்பன் அவர்கள், "ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது" என அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசு வஞ்சித்தாலும், ஏழை - எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும்.
முந்தைய ஆட்சியாளர்கள்போல பதவிக்காக, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுத்தாலும், அண்ணா தந்த இருமொழிக் கொள்கையே இங்கே நிலைத்திருக்கும் என்ற உறுதியுடன் மாநில அரசின் நிதியில் கல்விக்குச் செலவிடுகிறோம். நகைக்கடன் நிபந்தனைகளால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மக்கள் நாட முடியாத நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்பாடு.
இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. அவர்களின் மனம் நம் பக்கம் உள்ள நிலையில், தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது. உடன்பிறப்புகளால் தலைவர் பொறுப்பை ஏற்றது முதல், எதிர்கொண்ட தேர்தல் களங்கள் அனைத்திலும் கழகம் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது. சளைக்காத உழைப்பும், சரியான வியூகமும்தான் நம் வெற்றிக்கு அடிப்படை.
திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான கடமை என்ன? நம் இலட்சியப் பயணத்தின் இலக்கு எது? என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது. கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்.
வீரமும் பாசமும் நிறைந்த மதுரை மண்ணில் பொதுக்குழுவா, மாநாடா என வியக்கின்ற வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான திரு.பி.மூர்த்தி அவர்கள். மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.சேடப்பட்டி மு.மணிமாறன் ஆகியோர் உடனிருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தென்மாவட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பொதுக்குழு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். பொதுக்குழு நடைபெறும் அரங்கம், அதற்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவருந்தும் இடம், தங்குமிடங்கள் என ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் அமைத்துள்ளதை நாள்தோறும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறார்கள். காட்சிகளையும் படங்களையும் வாட்ஸ்அப் மூலம் பார்த்து உரிய திருத்தங்களையும் தெரிவித்துள்ளேன். கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியதுடன், எனக்கும் அது பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 1 காலை 9 மணிக்குப் பொதுக்குழு தொடங்குகிறது. அதற்கேற்ப பொதுக்குழு உறுப்பினர்களான உடன்பிறப்புகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உரிமை மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காலை 8 மணிக்கே அரங்கத்திற்கு வருகை தந்து, கழகப் பொதுச்செயலாளர் தங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைக் காட்டி, பதிவு செய்துகொண்டு, அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியான நேரத்தில் பொதுக்குழு தொடங்கிட உடன்பிறப்புகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.
பொதுக்குழு உறுப்பினர்களின் மனம் திறந்த கருத்துகள், கழக முன்னோடிகளின் உணர்ச்சிமிகு உரைகள், இந்திய அரசியலையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கவிருக்கும் தீர்மானங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய உரை என மதுரை பொதுக்குழு செறிவான நிகழ்ச்சி நிரலுடன் நடைபெறவிருக்கிறது.
2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளைத் தீர்மானித்திடவும், அதனை ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கழக உடன்பிறப்புகளைப் பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம்! பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- ஏற்கெனவே கைதான 11 பேர் அக்குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரை அப்பாவிகளா ? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.
- நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டிக்கொள்வது, 'கேப்பையில் நெய் வடிகிறது' என்பது போலத்தான்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, கொலை குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க போலி குற்றவாளிகளை காவல்துறை கைது செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கே உள்ள காவல்துறையினர் அரும்பாடுபட்டு உண்மைக் குற்றவாளிகளைப் பிடிப்பது சகஜமான ஒன்றாகும். ஆனால் தமிழ்நாட்டில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், கொலைக் குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உண்மைக் குற்றவாளிகளை தப்பவிட்டுவிட்டு, அவார கதியில் குற்றங்களுக்கு சம்பந்தம் இல்லாதவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கும் போக்கு நடைபெற்று வருவது கொடூரத்தின் உச்சமாகும்.
தமிழகத்தில் ஸ்டாலின் மாடல் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, போதைப் பொருட்கள் கடத்தல், சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவது. அவர்களில் ஒருசிலர் உயிரிழப்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. குறிப்பாக, தனியாக வசிக்கும் வயது முதிர்ந்தவர்கள் கொல்லப்படுவதும், அவர்களிடமிருந்து நகைகள் உட்பட விலை உயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு சம்பலம் நிகழும்போதும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடிவருவதாக ஸ்டாலின் மாடல் அரசின் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்று பலமுறை நான் சட்டமன்றத்தில், இந்த அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறேன். ஆனால், பொம்மை முதலமைச்சர் எனக்கு பதில் அளிப்பதைத் தவிர, முதியவர்கள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதியவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஈரோடு மாவட்டம், சிவகிரியில் வயதான தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. தொடர்ந்து, சிவகிரி சம்பவத்தில் கொலையாளிகள் 3 பேரையும், அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை வாங்கியதாக ஒருவரையும் காவல்துறை கைது செய்ததாக, இவ்வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட விசாரணை அதிகாரி தெரிவித்ததாகச் செய்திகள் கூறுகின்றன. மேலும், கைது செய்யப்பட்ட மூன்று குற்றவாளிகளும் ஏற்கெனவே, கடந்த பல ஆண்டுகளாக ஆங்காங்கே நடைபெற்ற 12 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டதாகவும், அதில் 19 பேர் கொல்லப்பட்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர் என்றும் செய்திகள் வந்துள்ளன.
குற்றவாளிகள் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் 12 சம்பவங்களில் 2022-ல் சென்னிமலையில் உப்பிலிபாளையம் தோட்ட வீட்டில் வசித்த வயதான தம்பதி துரைசாமி-ஜெயமணி ஆகியோரையும் 2023-ல் சென்னிமலை ஒட்டன்குட்டை களியாங்காட்டுதோட்டத்தில் வசித்த முத்துசாமி-சாமியாத்தாள் தம்பதிகள் ஆகியோரையும் தாக்கிக் கொன்று கொள்ளையடித்த சம்பவம் மற்றும் 2024 நவம்பர் மாதம் திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையம் தோட்ட வீட்டில் இருந்த தெய்வசிகாமணி-அலமேலு தம்பதியினரும் அவரது மகன் செந்தில்குமார் ஆகிய மூவரையும் இந்த கும்பல் கொலை செய்துள்ளதாகவும் தெரிய வருகிறது.
ஆனால் தமிழகக் காவல்துறை, சென்னிமலையில், 2022-ல் நடைபெற்ற உப்பிலிபாளையம் கொலைச் சம்பவம் மற்றும் 2023-ல் ஒட்டன்குட்டை கொலைச் சம்பவங்களில் விசாரணை நடத்தி, ஏற்கெனவே 11 பேரை கைது செய்து இவர்கள்தான் கொலையாளிகள் என்று குற்றஞ்சாட்டி சிறையில் அடைத்துள்ளனர். அப்படியென்றால், இவ்விரண்டு வழக்குகளிலும் ஏற்கெனவே கைதான 11 பேர் அக்குற்றச் சம்பவங்களைப் பொறுத்தவரை அப்பாவிகளா ? என்ற மில்லியன் டாலர் கேள்வி எழுகிறது.
பல்வேறு குற்ற நிகழ்வுகளில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாத பொம்மை முதலமைச்சரின் கீழ் செயல்படும் காவல்துறையினர் வழக்கை விரைவில் முடிக்க வேண்டும் என்று சம்பந்தமில்லாதவர்கள் மீது குற்றத்தைச் சுமத்தி வழக்குகளை முடிக்கப் பார்த்துள்ளது இதன்மூலம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. மேலும், இதுபோன்ற செயல்களினால் இந்த வழக்குகள் விசாரணைக்கு வரும்போது உண்மைக் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்தும், தண்டனையில் இருந்தும் தப்பிக்க வழிவகை ஏற்படும்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், உண்மைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்படவில்லை என்று அவரது மனைவியே கூறும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்க முடியாத நிலையில், திருச்சி அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சி.பி.ஐ-யிடமிருந்து இந்த விடியா ஆட்சியாளர்கள் தங்கள் கைகளில் எடுத்து ஒருசில ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகளை நெருங்கக்கூட முடியாத நிலையில், எங்கள் ஆட்சியில் காவல் துறையினர் குற்றங்களை விரைந்து விசாரித்து உண்மைக் குற்றவாளிகளைக் கைது செய்து நீதியின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தருகிறோம்' என்று நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் ஸ்டாலின் மார்தட்டிக்கொள்வது, 'கேப்பையில் நெய் வடிகிறது' என்பது போலத்தான்.
சிவகிரி சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள், அவர்களே ஒப்புக்கொண்ட குற்றங்களில், வேறு பலரைக் கைதுசெய்து சிறையில் அடைத்த இந்த ஏமாற்று மாடல் அரசின் காவல்துறை, இன்னும் எத்தனைக் குற்ற வழக்குகளில் உண்மைக் குற்றவாளிகளுக்குப் பதிலாக சம்பந்தமில்லாதவர்களைக் கைதுசெய்து வழக்குகளை முடித்து வைத்துள்ளது என்ற விவரங்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மலரும்போது வெளிக்கொண்டுவரப்படும். திமுக ஆட்சியாளர்களின் கைக்காட்டுதலுக்கு அடிபணிந்து தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
- 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி சோபியாவுக்கு வைர காதணி பரிசாக அளித்தார்.
- 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவுக்கு வைர காதணி பரிசாக வழங்கி கவுரவித்தார்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.
முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார்.
மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை இருக்கக்கூடாது. போதைப்பொருளை போன்று சாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் எதுவாக இருந்தாலும் அறிவியல்பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும் என்று மாணவர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார்.
இதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரிசளித்தார்.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி சோபியாவுக்கு வைர காதணி பரிசாக அளித்தார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவுக்கு வைர காதணி பரிசாக வழங்கி கவுரவித்தார்.
10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட அளவில் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார்.
- மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்கிறார்.
- புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி ராமதாஸ் வழங்குகிறார்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் மீது நிறுவனர் ராமதாஸ் சரமாரியாக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்களுக்கு சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அன்படி, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ம.க. நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். இதற்காக பா.ம.க. நிர்வாகிகள் தனியார் மண்டபத்தை நோக்கி படையெடுத்து வரத் தொடங்கி உள்ளனர்.
இதனால் திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டம் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனைக் காணும்போது பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணிக்கு ஆதரவாக உள்ளதாக கூறப்படுகிறது.
மாநில மாவட்ட நிர்வாகிகளுடன் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வியூகம், கூட்டணி, மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்வது குறித்து ஆலோசனை செய்கிறார். இதன்பின் புதிய உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை அன்புமணி ராமதாஸ் வழங்குகிறார்.
- சாதி, மதத்தை ஒதுக்கி வையுங்கள்.
- விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சாதி, மத பாகுபாடு காட்டுவதில்லை.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.
முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* சாதி, மத பிரிவினை சிந்தனை உங்களை பிரிவுபடுத்த விடாதீர்கள்.
* போதைப்பொருளை போன்று சாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும்.
* மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை இருக்கக்கூடாது.
* ஒன்றிய அரசின் யுபிஎஸ்சி தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதிச்சாயம்.
* பெரியாருக்கே சாதிச்சாயம் பூச முயற்சிக்கிறார்கள்.
* இயற்கையின் அம்சங்களான வெயிலும் மழையும் சாதி, மதம் பார்த்தா வருகிறது.
* விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களுக்கு சாதி, மத பாகுபாடு காட்டுவதில்லை.
* நேர்மறை சிந்தனையுடன் மாணவர்கள் பயணிக்க வேண்டும்.
* எதுவாக இருந்தாலும் அறிவியல்பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும்.
* நம்பிக்கையுடன் இருங்கள், நல்லதே நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வெள்ளி விலையில் 8-வது நாளாக மாற்றமில்லை.
- ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்து காணப்படுகிறது.
கடந்த 2 நாட்கள் குறைந்து விற்பனையான தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,920-க்கும் சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.71,360-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் 8-வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
29-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
28-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,480
27-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,960
26-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,600
25-05-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,920
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
29-05-2025- ஒரு கிராம் ரூ.111
28-05-2025- ஒரு கிராம் ரூ.111
27-05-2025- ஒரு கிராம் ரூ.111
26-05-2025- ஒரு கிராம் ரூ.111
25-05-2025- ஒரு கிராம் ரூ.111
- இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்ந்தெடுக்கக் சொல்லுங்கள்.
- பணம் கொடுத்தாலும் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.
முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
* படிப்பு சாதனை தான். ஒரே படிப்பில் மட்டும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.
* நீட் மட்டும் தானா உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் மிக மிக பெரியது.
* ஜனநாயகக் கடமை ஆற்றுங்கள்.
* வீட்டில் உள்ள எல்லோரையும் ஜனநாயகக் கடமையாற்றக் கூற சொல்லுங்கள்.
* இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்ந்தெடுக்கக் சொல்லுங்கள்.
* காசு வாங்கி விட்டு ஓட்டுப்போடும் கல்ச்சரை ஊக்கப்படுத்தாதீர்கள்.
* அடுத்த தேர்தலில் பணத்தை வண்டி வண்டியாக கொட்டப்போகிறார்கள்.
* பணம் கொடுத்தாலும் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும்.
* சாதி, மத பிரிவினை சிந்தனை உங்களை பிரிவுபடுத்த விடாதீர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 88 சட்டமன்ற தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கிறார்கள்.
- 600 மாணவ-மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட இருக்கிறது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது. முதல் கட்ட பரிசளிப்பு விழா இன்று மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெறுகிறது.
மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வைர கம்மலும், மாணவருக்கு வைர மோதிரமும் வழங்கப்பட உள்ளது. 2, 3-ம் இடங்களை பிடித்தவர்களுக்கு தங்க நாணயமும் வழங்கப்பட உள்ளது. அதன்படி 600 மாணவ-மாணவிகளுக்கு தங்க நாணயங்கள் வழங்கப்பட இருக்கிறது.
முதல் கட்ட பரிசளிப்பு விழாவில், அரியலூர், ராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, செங்கல்பட்டு, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 சட்டமன்ற தொகுதிகளில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்த நிலையில் கல்வி விருது வழங்கும் விழாவில் பங்கேற்க சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் இருந்து த.வெ.க. தலைவர் விஜய் புறப்பட்டு மாமல்லபுரத்தில் விழா நடைபெறும் ஓட்டலுக்கு வந்தார். விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கிற்குள் நுழைந்த விஜய், அங்கு முன்பகுதியில் அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவர்களுடன் அமர்ந்து அவர்களுடன் சிறிதுநேரம் உரையாடினார்.
இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைத்தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் உரையாடுகிறார்.
- இன்றைய முக்கிய செய்திகள்...
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- கடந்த 26-ந்தேதி 11 புதிய அரசு கல்லூரிகள் தொடங்கி வைக்கப்பட்ட நிலையில் மேலும் 4 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் புதிய கலை கல்லூரி தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
"புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முன்னோடித் திட்டங்களால் தமிழ்நாட்டில் மாணவர்களின் உயர்கல்விச் சேர்க்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அத்தேவைகளை நிறைவேற்றும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் 26-ந்தேதி அன்று தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் 2025-26-ம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, நீலகிரி மாவட்டம் குன்னூர், திண்டுக்கல் மாவட்டம் நத்தம், சென்னை மாவட்டம் ஆலந்தூர், விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர், பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் மற்றும் தூத்துக்குடி மாவட் டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வரப்பெற்ற கோரிக்கையின் அடிப்படையில் தற்போது நமது கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கல்வியாண்டில் (2025-2026) மேலும் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உயர் கல்வித்துறை சார்பில் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம்-துறையூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் தொடங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். இதனால் இப்பகுதியிலுள்ள 1,120 மாணவர்கள் உயர்கல்வி பெறுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
- கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதும், தமிழகத்திலும் தொடங்கி உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ள நிலையில் கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் காலை 10 மணி வரை நீலகிரி, கோவை உட்பட 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- காட்டாங்கொளத்தூர் பணிமனையில் வரும் ஜூன் 1-ந்தேதி பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
- செங்கல்பட்டில் இருந்து மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
சென்னை:
சென்னை எழும்பூர்-விழுப்புரம் வழித்தடத்தில் உள்ள காட்டாங்கொளத்தூர் பணிமனையில் வரும் ஜூன் 1-ந்தேதி காலை 11.45 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் (3 மணி நேரம் 30 நிமிடம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே, சில மின்சார ரெயில் சேவை மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
* சென்னை கடற்கரையில் இருந்து வரும் ஜூன் 1-ந்தேதி காலை 11, 11.45, மதியம் 12.30,1.45 ஆகிய நேரங்களில் புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரி-செங்கல்பட்டு இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்.
* சென்னை கடற்கரையில் இருந்து இதேதேதியில் மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
* செங்கல்பட்டில் இருந்து இதேதேதியில் மதியம் 12,1,1.50 மாலை 3.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில்கள் கூடுவாஞ்சேரியில் இருந்து புறப்படும்
* செங்கல்பட்டில் இருந்து இதேதேதியில் மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயில் தாம்பரத்தில் இருந்து புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






