என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்த விஜய்
    X

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்த விஜய்

    • 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி சோபியாவுக்கு வைர காதணி பரிசாக அளித்தார்.
    • 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவுக்கு வைர காதணி பரிசாக வழங்கி கவுரவித்தார்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.

    முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார்.

    மாணவர்களிடம் சாதி, மத சிந்தனை இருக்கக்கூடாது. போதைப்பொருளை போன்று சாதி, மதத்தையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றும் எதுவாக இருந்தாலும் அறிவியல்பூர்வமாக மாணவர்கள் அணுக வேண்டும் என்று மாணவர்களுக்கு விஜய் அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை பாராட்டி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பரிசளித்தார்.

    10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 500க்கு 499 மதிப்பெண் பெற்ற அரியலூர் மாணவி சோபியாவுக்கு வைர காதணி பரிசாக அளித்தார். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 599 மதிப்பெண் பெற்ற மாணவி ஓவியாவுக்கு வைர காதணி பரிசாக வழங்கி கவுரவித்தார்.

    10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட அளவில் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விஜய் பரிசு வழங்கினார்.

    Next Story
    ×