என் மலர்
சென்னை
- நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
- அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.
நீட் தேர்வு குறித்து கருத்து தெரிவித்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ராஜீவ் காந்தி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை விஜய் அவர்களே.
நீட் மட்டும்தான் உலகம்னு இங்க யாரும் சொல்லல… நீட் தாண்டி மிகப்பெரிய வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஆனால், நீட் என்ற பெயரில் எங்கள் பிள்ளைகள் தாங்கள் ஆசைப்படும் கல்வியை பெறுவதில் சமவாய்ப்பை மறுக்கும் ஆர்.எஸ்.எஸ்-இன் அயோக்கியத்தனத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். அதை எதிர்த்துத்தான் தொடர்ந்து திராவிட மாடல் அரசு சட்டப்போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது.
கல்வியில் எங்கள் பிள்ளைகளுக்கான சமநீதி மறுக்கப்படும்வரை அதற்கு எதிரான எங்களின் குரல் ஓங்கி ஒலிக்கும்.
ஆனால், எல்லோரும் மருத்துவம் படிச்சா யாரு நோயாளியா இருப்பாங்கன்னு கேக்குற தற்குறி சீமானின் குரலாகவும், எல்லோரும் படிச்சா யாரு மத்த வேலைகளைப் பார்ப்பது என்ற சங் பரிவாரின் சிந்தனையாகவும் உங்கள் குரல் ஒலிக்கத் தொடங்கியிருப்பதன்மூலம் நீங்களும் அந்த அயோக்கியக் கூட்டத்தின் அங்கம் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டீர் விஜய் அவர்களே.
உங்களைப் போலச் சந்தர்ப்பவாத அரசியலுக்கான பகடைக்காயாக மாணவர்களைப் பயன்படுத்தும் அயோக்கியர்களுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமை எனப் புரியப் போவதில்லை.
உங்களின் தற்குறித்தனம் இன்னும் இன்னும் இந்த இளைய சமூகத்தின்முன் அம்பலப்படுவதைப் பார்க்கத்தான் போகிறோம்…
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ.2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
- அனைத்து தங்க நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் செயல்படும் நிதி சேவைகள் துறை, தங்கக்கடன் பெறும் நடைமுறைகள் குறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்ட வரைவுத் தரநெறிகளை முறைப்படுத்த வேண்டி பரிந்துரைகள் வழங்கியிருப்பது வரவேற்கத்தக்கது.
புதிய ஒழுங்குமுறை விதிமுறைகளிலிருந்து ரூ.2 லட்சத்திற்கு கீழ் கடன் பெறும் சிறு தொகை கடன் பெறுநர்களை விலக்க பரிந்துரை செய்திருக்கிறது.
இருப்பினும் விவசாயிகள், சிறு வியாபாரிகள் மற்றும் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள மக்கள், தங்களின் அவசரத் தேவைகள், மருத்துவ மற்றும் கல்வி நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய ஒன்றாக தங்க நகைக்கடன்கள் இருப்பதால், அனைத்து தங்க நகைக்கடன்களுக்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
ஏழை மற்றும் நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக்கடன்கள் இருப்பதால், மத்திய நிதி சேவைகள் துறை வழங்கியுள்ள இந்த முக்கிய பரிந்துரைகளுக்கு ரிசர்வ் வங்கி பரிசீலிப்பதுடன், தங்க நகைக்கடன்களுக்கான பழைய நடைமுறையையே தொடர வேண்டுமென அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- சென்னையை பொறுத்தவரையில் கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைக் பெய்தது.
சென்னையில் பாரிமுனை, எழும்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் சென்னை உள்பட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் கிண்டி, மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், அடையாறு, மெரினா, பட்டினம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.
- திருப்பூா், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
- புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென்னிந்திய கடலோரப் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, இன்று முதல் வருகிற 4-ந்தேதி வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்ட மலைப் பகுதிகளிலும், நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மேலும், திருப்பூா், திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் இன்று இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் சென்னை மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் காற்றுடன் மழை பெய்தது.
நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், எழும்பூர், வானகரம், போரூர், மதுரவாயல், ஐயப்பன்தாங்கல், திருவேற்காடு, கோலடி பகுதிகளில் திடீரென மழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
- பெற்றோர்களே... உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதிலும் கட்டாயப்படுத்தாதீர்கள்.
- பறவையை போல் நம்பிக்கையுடனும், தைரியமுடனும் பறக்க வேண்டும்.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாணவ- மாணவிகளின் கல்வி ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 2 ஆண்டுகளாக 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார். மாநில அளவில் முதலிடம் பிடிப்பவர் மாணவராக இருந்தால் வைர மோதிரமும், மாணவியாக இருந்தால் வைர கம்மலும் வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் மாணவ-மாணவிகளுக்கு 2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா மற்றும் பரிசளிப்பு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள 4 பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ஓட்டலில் உள்ள அரங்கத்தில் இன்று நடைபெற்றது.
விழாவில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை பெரம்பலூர், வேலூர் உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் உள்ள மாணவ- மாணவிகள் 600 பேர் பங்கேற்றனர்.
10-ம் வகுப்பு, பிளஸ்- 2 தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள், மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ-மாணவிகள், அதிக மதிப்பெண் பெற்ற மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகள், வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள சாதனை படைத்த மாணவ- மாணவிகள் தங்களது பெற்றோருடன் விழாவில் பங்கேற்றனர். விழாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை 7 மணியில் இருந்தே மாணவ-மாணவிகள் வரத் தொடங்கினார்கள். அவர்கள் வைத்திருந்த அடையாள அட்டையை ஸ்கேன் செய்து உள்ளே அனுப்பினார்கள். ஒவ்வொரு மாணவ-மாணவிகளுடனும் அவர்களின் பெற்றோரும் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
உள்ளே சென்ற மாணவ-மாணவிகளுக்கு தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் நொறுக்குதீனி மற்றும் குடிநீர் பாட்டில் வழங்கி உள்ளே அனுப்பி வைத்தார்.
காலை 9 மணிக்குள் அனைத்து மாணவ-மாணவிகளும் இருக்கைகளில் அமர வைக்கப்பட்டனர்.
விழாவில் பங்கேற்பதற்காக விஜய் காலை 8.30 மணிக்கு தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டார். காலை 9 மணிக்கு அவர் விழா நடைபெறும் ஓட்டலை வந்தடைந்தார்.
காலை 10 மணிக்கு விஜய் விழா நடைபெறும் அரங்கத்துக்குள் வந்தார். அப்போது அரங்கத்தின் இருபுறமும் இருந்த மாணவ-மாணவிகளை பார்த்து அவர் உற்சாகமாக கை அசைத்தபடியே வந்தார்.
பின்னர் அரங்கத்தின் முன்பகுதிக்கு வந்த விஜய் சிறிது நேரம் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவிகளுடன் அமர்ந்திருந்தார். பின்னர் மாற்றுத் திறனாளி மாணவர்களிடம் கலந்துரையாடினார்.
இதையடுத்து தமிழ்த்தாய் வாழ்த்துடன் மாணவ-மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா தொடங்கியது. பின்னர் மேடைக்கு வந்த விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது. த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் வரவேற்புரை நிகழ்த்தினார்.
பின்னர் விழாவில் விஜய் பேசியதாவது:-
உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக மிக மகிழ்ச்சி. நீங்கள் சிறந்த சாதனை படைத்ததற்காக வாழ்த்துக்கள். படிப்பில் சாதிக்க வேண்டும்தான். படிப்பும் சாதனைதான். அதை நான் மறுக்கவில்லை. அதற்காக ஒரே ஒரு படிப்பில் மட்டும் நாம் சாதித்தே ஆக வேண்டும் என்று நினைப்பது சாதனை கிடையாது.
ஒரே விஷயத்தை பற்றி திரும்ப திரும்ப யோசித்து அழுத்தத்தை ஏற்றிக் கொள்ளாதீர்கள். அவ்வளவு மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டிய விஷயம் ஒன்றுமே கிடையாது.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் நீட் மட்டும் தான் உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் ரொம்ப ரொம்ப பெரியது. அதில் நீங்கள் சாதிக்க வேண்டியது பல விஷயங்கள் இருக்கிறது.
அதனால் இப்போதே உங்கள் மனதை ரொம்ப வலிமையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் மனதை ஜனநாயகமாக வைத்துக் கொள்ள கற்றுக் கொள்ளுங்கள். ஏனென்றால் ஜனநாயகம் என்று ஒன்று இருந்தால்தான் இந்த உலகமும் சரி இந்த உலகத்தில் உள்ள எல்லா துறையும் சரி சுதந்திரமாக இருக்க முடியும்.
அது மட்டுமல்ல ஒரு முறையான ஜனநாயகம் இருந்தாலே மேலும் எல்லோருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்கும். அதனுடைய முதல்படியாக உங்கள் வீட்டில் உள்ள எல்லோரிடமும் சொல்லுங்கள். அவர்களின் ஜனநாயக கடமையை ஒழுங்காக செய்ய சொல்லுங்கள்.
ஜனநாயக கடமையை சரியாக செய்வது என்றால் அது ஒன்றும் பெரிய விஷயம் கிடையாது. அது சாதாரணமான விஷயம்தான். நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்கள் யார் என்று பார்த்து அவர்களை தேர்ந்தெடுக்க சொல்லுங்கள். அவ்வளவுதான். இது மிகவும் எளிது. இதுதான் அந்த கடமை.
நான் 2 வருடத்துக்கு முன்பே இதே மாணவர்களுக்கான நிகழ்ச்சியில் சொல்லி இருந்தேன். காசு கொடுத்து ஓட்டு வாங்கி ஜெயித்து விடலாம் என்று நினைக்கிறார்கள் இல்லையா? அந்த கலாச்சாரத்தை யாரும் ஊக்கப்படுத்தாதீர்கள். யாரும் காசு வாங்காதீர்கள். உங்கள் பெற்றோரிடமும் எடுத்து சொல்லுங்கள் என்று சொல்லி இருந்தேன். அதை அப்படியே பின்பற்றுங்கள்.
ஆனால் நீங்கள் வேண்டுமானால் அடுத்த வருடம் என்ன நடக்கப் போகிறது என்று பாருங்கள். வண்டி வண்டியாக கொண்டு வந்து கொட்டப் போகிறார்கள். அது அத்தனையும் உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம்தான். என்ன பண்ண போகிறீர்கள்? என்ன பண்ணனும் என்று உங்களுக்கு சரியாக தெரியும். அதை நான் சொல்லித்தான் புரிய வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
பெற்றோர்களே... உங்களிடம் ஒரு சின்ன வேண்டுகோள்... உங்கள் குழந்தைகளின் விஷயத்தில் எதிலும் கட்டாயப்படுத்தாதீர்கள். அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்து இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ற மாதிரி வழி நடத்துங்கள். நான் கண்டிப்பாக சொல்கிறேன், எத்தனை தடைகள் வந்தாலும் அவரவர்களுக்கு பிடித்த விஷயங்களில், அவரவர்களுக்கு பிடித்த துறையில் அவர்கள் கண்டிப்பாக சாதித்து காட்டுவார்கள்.
இன்னொரு முக்கியமான விஷயத்தை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது என்னவென்றால், சாதி மதத்தை வைத்து, இந்த பிரிவினையை வளர்க்கிற சிந்தனை பக்கமே போய் விடாதீர்கள். அந்த சிந்தனை உங்களையோ அல்லது உங்கள் மனதையோ தொந்தரவு கொடுக்கிற அளவுக்கு எதற்கு இடம் கொடுக்காதீர்கள்.
விவசாயிகள் சாதி, மதம் பார்த்தா பொருளை விளைய வைக்கிறார்கள்? தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்தா பொருட்கள் உற்பத்தியில் ஈடுபடுகிறார்கள்? இவ்வளவு ஏன்... இயற்கை அம்சங்களான வெயில், மழையில் சாதி இருக்கிறதா, மதம் இருக்கிறதா? போதைப் பொருட்களை நாம் எப்படி அறவே ஒதுக்கி வைக்கிறோமோ அதே போல் இந்த சாதி மதத்தையும் கட்டுப்பாட்டுடன் ரொம்ப தூரமா? எவ்வளவு தூரமா ஒதுக்கி வைக்கிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அதை தூரமா ஒதுக்கி வைத்து விடுங்கள். அதுதான் எல்லோருக்குமே நல்லது.
சமீப காலமாக பார்த்தால் தந்தை பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சி செய்கிறார்கள். ஒன்றிய சிவில் சர்வீஸ் தேர்வில் கூட சாதி சாயம் பூசுவது போல ஒரு கேள்வி கேட்டுள்ளார்கள். இதையெல்லாம் வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்த விசயத்தில் எது சரி, எது தவறு என்பதை ஆராய்ந்து பார்த்தாலே போதும் ஒரு குழப்பம் இல்லாத தெளிவான வாழ்க்கையை வாழலாம்.
எதற்கும் ரொம்ப உணர்ச்சி வசப்படாதீர்கள். அவ்வளவு மதிப்பு எல்லாம் இல்லை. தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ரீதியாகவே சிந்தியுங்கள். ஏனென்றால் ஏற்கனவே வந்து விட்ட செயற்கை நுண்ணறிவு உலகத்தை எதிர்கொள்ள அதுதான் ஒரே வழி.
வானம் பரந்ததாகவும், அகலமாகவும் இருக்கிறது. உங்களுக்கும் வலுவான இறக்கைகள் உள்ளன. எனவே நண்பர்களே நீங்கள் மன உறுதியுடன் இருக்க வேண்டும். பறவையை போல் நம்பிக்கையுடனும், தைரியமுடனும் பறக்க வேண்டும்.
எவ்வளவோ பண்ணி விட்டோம். இதை பண்ண மாட்டோமா? எவ்வளவோ பார்த்து விட்டோம். இதை பார்க்க மாட்டோமா? என்கிற நேர்மறை சிந்தனையுடன் பயணியுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு விஜய் பேசினார்.

10-ம் வகுப்பில் 500-க்கு 499 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த அரியலூர் மாவட்ட மாணவி சோபியா மற்றும் பிளஸ்-2 தேர்வில் 600-க்கு 599 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஓவியாஞ்சலி ஆகியோருக்கு வைர கம்மலை விஜய் பரிசாக வழங்கினார்.
பின்னர் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு விஜய் பரிசு வழங்கினார். அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

மேலும் மாற்றுத்திறனாளிகளில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கும் ரூ.5 ஆயிரம் காசோலை மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை விஜய் வழங்கினார்.
பரிசுகளை பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் விஜய் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
600 மாணவ-மாணவிகளுக்கும் விஜய் நேரில் பரிசு வழங்கி உற்சாகப்படுத்தினார். விருது பெற்ற மாணவ-மாணவிகளிடம் தனித்தனியாக பேசிய விஜய், இதேபோல் நன்றாக படித்து தொடர்ந்து முன்னேறி வாழ்க்கையில் சாதிக்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தினார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் மதியம் 21 வகையான அறுசுவை உணவுகள் வழங்கப்பட்டது.
மீதமுள்ள தொகுதிகளில் சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கான 2-ம் கட்ட பரிசளிப்பு விழா அடுத்த வாரமும், 3-ம் கட்ட பரிசளிப்பு விழா அதற்கடுத்த வாரமும் நடைபெற உள்ளது.
- இப்போது தான் சில விஷயங்களில் சுதந்திரமாக செயல்படுகிறேன்.
- தயங்காமல் தைரியமாக செல்லுங்கள், தைரியமாக பணியாற்றுங்கள், களம் நம்முடையது.
சென்னை:
பா.ம.க. நிர்வாகிகளுடன் அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்ட செயலாளர்களை அழைத்து அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்தார். இதையடுத்து நிர்வாகிகள் மத்தியில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது:-
* பா.ம.க.வில் சில குழப்பங்கள் நிலவுகின்றன. அவை விரைவில் சரியாகும்.
* நாம் எவ்வளவோ அவமானங்களை சந்தித்துள்ளோம், இதையும் கடந்துசெல்வோம்.
* நமக்கான கொள்கைகளை வகுத்தவர் அய்யா ராமதாஸ், அவர் வழியில் நாம் நடக்க வேண்டும்.
* பா.ம.க.வில் இருந்து நிர்வாகிகளை நீக்கவோ, நியமிக்கவோ தலைவரான எனக்கே முழு அதிகாரம் உண்டு. நிறுவனருக்கு அல்ல.
* உலகத்திலேயே எனக்கு மிகவும் பிடித்தது என் அம்மா தான், அவர் மீது சிறு துரும்பு கூட படவிடமாட்டேன்.
* இப்போது தான் சில விஷயங்களில் சுதந்திரமாக செயல்படுகிறேன்.
* தயங்காமல் தைரியமாக செல்லுங்கள், தைரியமாக பணியாற்றுங்கள், களம் நம்முடையது.
* இதுபோன்று காலங்கள் வந்துபோகும்... விரைவில் எல்லாம் சரியாகும் என்றார்.
- காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே செயல்படுத்தப்பட்டது.
- திங்கட்கிழமைகளில் வழங்கப்படும் அரிசி அல்லது ரவை உப்புமா வகைகளுக்குப் பதிலாக பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.
சென்னை:
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை செயலர் ஜெயஸ்ரீ முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் முதல்வரின் காலை உணவுத் திட்டம் முதல் கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி பகுதிகளில் பயிலும் 1.14 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவர்களிடையே செயல்படுத்தப்பட்டது. பின்னர் இந்த திட்டம் நகரப் பகுதிகள், ஊரக பகுதிகளில் செயல்படும் அனைத்து அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் ஆகியவற்றில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டது.
காலை உணவுத் திட்டத்தில் உள்ள உணவு வகைகள் அவ்வப்போது ஊட்டச்சத்து வல்லுநர் குழு மற்றும் திட்டத்தைச் செயல்படுத்தும் நிறுவனங்களால் ஆய்வுக் உட்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது வாரந்தோறும் திங்கட்கிழமை வழங்கப்படும் உப்புமா வகைகளுக்குப் பதிலாக பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கலாம் என வல்லுநர் குழுவும், திட்டச் செயலாக்க நிறுவனமும் அரசுக்கு பரிந்துரையை வழங்கின.
இதனால் அரசுக்கு ரூ.7.80 கோடி கூடுதலாக செலவு ஏற்படும். ஆனாலும் இதைச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே முதல்வரின் காலை உணவுத் திட்டத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் வழங்கப்படும் அரிசி அல்லது ரவை உப்புமா வகைகளுக்குப் பதிலாக பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ராமதாசின் நடவடிக்கைகளுக்கு நேர்மாறாக அறிவிப்புகளை வெளியிட தொடங்கி உள்ளார்.
- விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் மயிலம் சிவக்குமார் நீக்கம்.
சென்னை:
பா.ம.க. பொருளாளர் பொறுப்பில் இருந்து திலகபாமாவை நீக்கியதாகவும் அவருக்கு பதிலாக சையது மன்சூர் உசைன் என்பவரை ராமதாஸ் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க.வின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவித்துள்ள அன்புமணி, பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் திலகபாமாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குப்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
சற்று முன்னதாக பேசிய அன்புமணி, சமூக நீதி போராளி ராமதாஸ் கட்சி தொடங்கினார், அவரது கொள்கையை நிலைநிறுத்த களத்தில் இறங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், ராமதாசின் நடவடிக்கைகளுக்கு நேர்மாறாக அறிவிப்புகளை வெளியிட தொடங்கி உள்ளார்.
இதற்கிடையே, விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் மயிலம் சிவக்குமாரை நீக்கியும் புதிய மாவட்ட செயலாளராக புகழேந்தியை நியமித்தும் பா.ம.க. தலைவர் என குறிப்பிட்டு ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ராமதாஸ்- அன்புமணி இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் பா.ம.க. இரண்டாக உடைந்தது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
- பதவி இன்று வரும் போகும், அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன்.
- பட்டாளி மக்கள் கட்சி என்பது நான் அல்ல, நீங்கள் தான்.
சென்னை:
சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 23 மாவட்ட நிர்வாகிகளுடன் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபடுகிறார். இதற்கு முன்பாக கட்சியில் புதிதாக இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை அன்புமணி வழங்கினார். உறுப்பினர் அட்டையில் பா.ம.க. பொருளாளர் என்ற இடத்தில் திலகபாமா கையெழுத்திட்டு உள்ளார்.
ஒருபுறம், அன்புமணிக்கு ஆதரவான திலகபாமா உள்ளிட்ட நிர்வாகிகளை நிறுவனர் ராமதாஸ் நீக்கி அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் பா.ம.க. இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று பா.ம.க. செயல்தலைவர் அன்புமணி என்று ராமதாஸ் அறிவித்த நிலையில், இன்று நிர்வாகிகளுடனா ஆலோசனை கூட்டத்தில் பா.ம.க.வின் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என அன்புமணி ராமதாஸ் பேசினார். மேலும் அவர் கூறுகையில்,
* பதவி இன்று வரும் போகும், அடிமட்ட தொண்டனாக செயல்படுவேன்.
* பட்டாளி மக்கள் கட்சி என்பது நான் அல்ல, நீங்கள் தான்.
* தொண்டர்கள் இல்லை என்றால் பட்டாளி மக்கள் கட்சி இல்லை என்பதை உணர வேண்டும்.
* சமூக நீதி போராளி ராமதாஸ் கட்சி தொடங்கினார், அவரது கொள்கையை நிலைநிறுத்த களத்தில் இறங்குவோம்.
* இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகள் நாங்கள். பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தற்போது இங்கு உள்ளனர்.
* சிறப்பு சந்திப்பு ஒன்று விரைவில் நடைபெறும் என்றார்.
- அன்புமணிக்கே பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
- புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை அன்புமணி வழங்குகிறார்.
சென்னை:
பா.ம.க.வில் தந்தை- மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் அக்கட்சி நிர்வாகிகள் யார் பக்கம் செல்வது என்று தெரியாமல் தவிப்பதாக கூறப்படும் நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் அன்புமணி விடுத்த அழைப்பை ஏற்று அவரது தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் பங்கேற்க சோழிங்கநல்லூரை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர். இதனால் அன்புமணிக்கே பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
இதனிடையே, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ம.க. நிர்வாகிகள் உடன் அன்புமணி ராமதாஸ் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ஆலோசனைக்கு பிறகு புதிதாக கட்சியில் இணைந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை அன்புமணி வழங்குகிறார்.
இதற்கிடையே, திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. கௌரவத் தலைவர் ஜி.கே.மணி, தீரன் உள்ளிட்டோர் உடன் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆலோசனை செய்து வருகிறார். இந்த ஆலோசனையில் அன்புமணிக்கு ஆதரவு தரும் மாவட்ட செயலாளர்களை மாற்றுவது தொடர்பாக ராமதாஸ் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இதனால், பா.ம.க. இரண்டாக உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், பா.ம.க.வின் பொருளாளராக இருந்த திலகபாமாவை நீக்கி சையது மன்சூர் உசைனை ராமதாஸ் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 41 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தனித்தனியே சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார்.
- வருகின்ற சட்டசபை தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
சென்னை :
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று 2-வது நாளாக ஆலோசனை நடத்தி வருகிறார். திருப்பூர், கோவை, நீலகிரி, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூ, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த ஆலோசனையில், அ.தி.மு.க. சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் களமிறங்கப்போவது யார்? என்பது தொடர்பாக 41 மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுடன் தனித்தனியே சந்தித்து எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். மேலும் வருகின்ற சட்டசபை தேர்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கி வருகிறார்.
பூத் கமிட்டி அமைப்பது முக்கியம் என்று அறிவுறுத்தி உள்ள எடப்பாடி பழனிசாமி, விஜய் தொடர்பாக பேச அ.தி.மு.க.வினருக்கு தடை விதித்திருப்பதாகவும், தி.மு.க. மீதான விமர்சனங்களை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (31.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
பெருங்களத்தூர்: காந்தி சாலை, கிருஷ்ணா சாலை, முத்துவேலர் சாலை, என்ஜிஓ காலனி, ஆர்எம்கே நகர், பாரதி நகர், காமாட்சி நகர், சேகர் நகர், கல்கி தெரு, டேவிட் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரணியம்மன் கோவில் பின்புறம்).
முடிச்சூர்: அமுதம் நகர், ஏ.என்.காலனி, அஸ்தலட்சுமி நகர், சாஸ்திரி நகர், புவனேஸ்வரி நகர், ராயப்பா நகர், வி.எம்.கார்டன்.
நந்தம்பாக்கம்: மணப்பாக்கம் மற்றும் கொளப்பாக்கம் சாலை, காசா கிராண்டா கோட்டை மற்றும் உட்சைட், கிரிகோரி நகர், லட்சுமி நகர், இந்திரா நகர், பெல் நகர், ஸ்ரீ ராம் கார்டன், மைக்ரோமார்வெல், தர்மராஜபுரம், பிபிசிஎல் முதல், இரண்டாம் கட்டம், வல்லீஸ்வரன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.
மாடம்பாக்கம்: படுவாஞ்சேரி, அகரம், அன்னை சத்திய நகர், வெல்கம் காலனி, பிள்ளையார் கோவில் தெரு, குறிஞ்சி நகர், சாய் பாலாஜி நகர் ஆகிய இடங்களில் மின் நிறுத்தப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






