என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முற்றும் மோதல்: பா.ம.க. பொருளாளராக திலகபாமா தொடர்வார் - அன்புமணி
- ராமதாசின் நடவடிக்கைகளுக்கு நேர்மாறாக அறிவிப்புகளை வெளியிட தொடங்கி உள்ளார்.
- விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் மயிலம் சிவக்குமார் நீக்கம்.
சென்னை:
பா.ம.க. பொருளாளர் பொறுப்பில் இருந்து திலகபாமாவை நீக்கியதாகவும் அவருக்கு பதிலாக சையது மன்சூர் உசைன் என்பவரை ராமதாஸ் நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பா.ம.க.வின் பொருளாளராக திலகபாமா தொடர்வார் என்று அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இதனை அதிகாரப்பூர்வ கடிதத்தில் தெரிவித்துள்ள அன்புமணி, பா.ம.க.வின் அனைத்து நிலை நிர்வாகிகளும் திலகபாமாவுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குப்படி கேட்டுக்கொண்டுள்ளார்.
சற்று முன்னதாக பேசிய அன்புமணி, சமூக நீதி போராளி ராமதாஸ் கட்சி தொடங்கினார், அவரது கொள்கையை நிலைநிறுத்த களத்தில் இறங்குவோம் என்று கூறியிருந்த நிலையில், ராமதாசின் நடவடிக்கைகளுக்கு நேர்மாறாக அறிவிப்புகளை வெளியிட தொடங்கி உள்ளார்.
இதற்கிடையே, விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் மயிலம் சிவக்குமாரை நீக்கியும் புதிய மாவட்ட செயலாளராக புகழேந்தியை நியமித்தும் பா.ம.க. தலைவர் என குறிப்பிட்டு ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ராமதாஸ்- அன்புமணி இருவரும் மாறி மாறி நிர்வாகிகளை நியமித்து வருவதால் பா.ம.க. இரண்டாக உடைந்தது என அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.






