என் மலர்
நீங்கள் தேடியது "திமுக பொதுக்குழு கூட்டம்"
- தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்!
- களம்2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-
பொதுக்குழுவா கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது. திமுகபொதுக்குழு2025!
கலைஞர்102-ஐ செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்!
தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம்2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சொகுசு காரில் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.
- ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது.
மதுரை:
மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
முதல்வர் வருகிறார் என்றால் போக்குவரத்து நிறுத்தம் செய்வது சகஜம் தானே, மதுரையில் முதல்வர் வருகைக்காக 3 மணி நேர போக்குவரத்து தடை செய்தார்கள். நடந்து செல்பவர்கள் கூட முதல்வரை காண வரவில்லை. 10 தொகுதியில் வெற்றி பெறுவோம் என அமைச்சர் மூர்த்தி கூறுகிறார். வாயில் வேண்டுமானால் சொல்லலாம், ஆனால் மக்கள் நினைக்க வேண்டுமே?
மக்கள் நினைத்திருந்தால் லட்சக்கணக்கானோர் கூடியிருப்பார்கள். முதல்வர் ரோடு-ஷோ இன்னொரு சித்திரை திருவிழாவாக மாறியிருக்கும். ரோடு-ஷோவிற்கு செயற்கையாக மக்கள் கூட்டப்பட்ட கூட்டம், தானா சேர்ந்த கூட்டம் அல்ல. மக்களுக்கான திட்டத்தை கொடுங்கள். திட்டங்கள் குறித்து பொதுவெளியில் விவாதிக்க நான் தயார்.
முதல்வர் தமிழ்நாட்டில் தானே இருக்கிறார். அவர் சென்னை கூவம் கால்வாயை பார்த்ததே இல்லையா? மதுரக்காரர்கள் எதை செய்தாலும் சற்று வித்தியாசமாக செய்கிறார்கள். மதுரையில சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. அதில் தான் நாம் நடந்து செல்கிறோம். நடந்து சென்றால் கூட வரி விதிக்கும் அளவுக்கு வரி மேல் வரி போடுகிறார்கள். சொகுசு காரில் முதலமைச்சர் வரும்போது மட்டும் புதிய சாலைகள் போடப்பட்டுள்ளது.
பந்தல்குடி கால்வாயை பொருத்தவரை ஒருபுறம் இஸ்லாமியர்களும், மற்றொருபுறம் பட்டியலின மக்களும் வாழ்கிறார்கள். இந்த கால்வாயில் திரை அமைத்தது குறித்து நான் விமர்சனம் செய்தேன். என்னை தி.மு.க.வினர் விமர்சனம் செய்தார்கள். தெர்மாகோல் விஞ்ஞானியே நீ என்ன செய்தாய் என குறிப்பிட்டிருந்தார்கள். எங்க காலத்தில் சாக்கடை நீரை உறிஞ்சி சுத்தம் செய்வதற்கு இரண்டரை கோடி மதிப்பீட்டில் மறுசுழற்சி செய்து சாக்கடை நீர் தேங்காத அளவிற்கு மழைநீர் மட்டும் செல்வதற்கு வழிவகை செய்து கழிவுநீர் வைகையில் கலக்காமல் செய்தோம்.
ஆட்சி மாற்றம் ஆன பிறகு மேம்பாலம் கட்டுவதற்காக இரண்டரை கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மறுசுழற்சி திட்டம் முழுவதுமாக நிறுத்தப்பட்டுள்ளது. முதல்வர் பந்தல்குடி கால்வாய் சாக்கடையை பார்த்து விடக்கூடாது என திரைசீலைகள் அமைக்கப்பட்டது. முதல்வர் பார்த்து விடக்கூடாது என்பதற்காக அலங்கார தோரணம் கட்டினார்கள். இதைப் பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தி நாங்கள் பல வருடமாக இங்கேதான் வாழ்கிறோம் என சண்டை போட்ட பிறகு அகற்றினார்கள்.
திரைச்சீலைகள் அமைக்கப்பட்டதற்கு மாவட்ட கலெக்டர் ஒரு விளக்கம் கொடுத்தார். யார் கட்டினார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார். இது மாதிரியான ஒரு மாவட்ட கலெக்டரை நான் பார்த்ததே இல்லை. எதிர்க்கட்சி என்றால் பேசத்தானே செய்வார்கள்.
ஒரு முறைக்கு மறுமுறை ஆட்சிக்கு வராத சுவாரசியம் தி.மு.க.விற்கு இருக்கிறது. அதற்கான ஒரு சான்று, மதுரையில் பொதுக்குழு கூட்டினால் எப்பவும் வந்ததில்லை. கலைஞர் இருந்தபோதும் வந்ததில்லை. தி.மு.க.வில் தலைவர் எம்.ஜி.ஆர். இருந்தவரை ஆட்சிக்கு வந்தார்கள். தி.மு.க.வை விட்டு எம்.ஜி.ஆர். வெளியே வந்த பிறகு 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததே இல்லை.
மதுரையில் தி.மு.க.பொதுக்குழு எப்போதெல்லாம் கூடுகிறதோ, அப்போதெல்லாம் அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. 1977-ல் நடந்த பொதுக்குழு அதன் பிறகு 12 ஆண்டுகள் அ.தி.மு.க ஆட்சி தான் வந்தது. தி.மு.க.விற்கு வனவாசம் தான். இதனால் தான் மதுரைக்காரர்கள் என்றாலே தி.மு.க. தலைமைக்கு பிடிக்காது. யாரோ சொல்லி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள். மாற்றுத்திறனாளி ஒருவர் உலகக் கோப்பை வாங்கியதாக மாவட்ட கலெக்டர் முதல் முதல்வர் வரை ஏமாற்றியது போல பொதுக்குழு கூட்டத்தை மதுரையில் நடத்தி முதல்வரை ஏமாற்றி இருக்கிறார்கள்.
தி.மு.க.வின் பொதுக்குழுவில் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் இருப்பதை நேற்றுதான் நான் பார்த்தேன். மதுரையில் பொதுக்குழு நடத்தி தனக்கு தானே சூனியம் வைத்துக் கொண்ட தி.மு.க. இனிமேல் 10 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. முதல்வர் ஏதோ அ.தி.மு.க. பொதுச்செயலாளரை திட்டுகிறார். திட்டதிட்ட திண்டுக்கல் நாங்க. எங்க பொதுச்செயலாளர் அவ்வளவு பவர்புல்லாக இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.
- 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
கோவையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்ததாக மதுரை பொதுக்குழுவில் திமுக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது
அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, யாருக்கும் எப்போதும் துரோகம் இழைத்ததில்லை. திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.
4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.
16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபேது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை.
மதுரையில் கால்வாயை திரைச்சீலை வைத்து மறைத்துவைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடக்கிறது.
தூர்வாரப்படாததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடினர். கால்வாய் தூர்வாரப்படாதது அவர்களுக்கே பிடிக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஏழை - எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு, தங்க நகையை அடமானம் வைத்தே கடன் பெற்று வருகிறார்கள்.
- நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது.
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்.
கூடிக் கலைவதல்ல கழகத்தின் நிகழ்வுகள். திசைவழியைத் தீர்மானிக்கும் செயல்பாடுகளைத் திட்டமிடும் களமாகவே திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு நிகழ்வும் அமைகின்றது. இதுதான் இந்த இயக்கத்தின் முக்கால் நூற்றாண்டு கால வரலாறு. கழகம் என்ன முடிவெடுக்கும் என்பதை உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மாற்று இயக்கத்தினரும் உற்று நோக்குகின்ற சூழலில்தான் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த கூடல் மாநகராம் மதுரையில் கழகப் பொதுக்குழு கூடுகிறது.
பேரறிஞர் அண்ணா தலைமையில் உருவாகி, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் தலைமையில் இரும்புக் கோட்டையாகக் கட்டிக்காக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம் இன்று இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத மாநிலக் கட்சி என்ற நிலையை அடைந்திருப்பதற்குக் காரணம், பொதுக்குழு - செயற்குழு - மாநாடு என எதுவாக இருந்தாலும் அது கொள்கை சார்ந்த நோக்கத்துடன் நடத்தப்பட்டு, அதற்குரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, செயல்வடிவம் பெறுவதால்தான்.
கட்சியைத் தொடங்கிய நாளிலேயே "களத்திற்கு வா போராடலாம் - சிறையை நிரப்பலாம்" என்று கழகத் தொண்டர்களை அழைத்தார் பேரறிஞர் பெருந்தகை அண்ணா. பதவி சுகத்திற்காகவே கட்சி தொடங்குபவர்கள், பதவியைக் காப்பாற்றிக் கொள்வதற்காகக் கட்சியையே அடமானம் வைத்தவர்கள் நிறைந்த இன்றைய அரசியல் சூழலில், சிறைவாசத்தைச் சிரித்த முகத்துடன் ஏற்று, நெருக்கடி நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டுக் கடந்த வெற்றிகரமான இயக்கமாகச் செம்மாந்து நிற்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த மகத்தான இயக்கத்தைக் கட்டிக்காத்த உடன்பிறப்புகளாம் உங்களை வழிநடத்தும் தலைவனாக எனக்கு நீங்கள் அளித்திருக்கும் வாய்ப்பை, மக்கள் நலன் காக்கவும் - மாநில உரிமைகளை மீட்கவும் பயன்படுத்தி வருகிறேன்.
உடன்பிறப்புகளாம் உங்களுக்கு இந்தக் கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் நேரத்தில், தஞ்சையில் கழகத்தின் விவசாய அணி சார்பில், காவிரி டெல்டா மாவட்டங்களின் அனைத்து விவசாயச் சங்கங்களையும் இணைத்து, இந்திய ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ள நகைக்கடன் நிபந்தனைகளை உடனே கைவிட வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசின் டெல்லி பிரதிநிதியாக உள்ள கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ். விஜயன் தலைமையில் வேளாண் பெருங்குடி மக்கள் அணி அணியாய்த் திரண்டு ஆர்ப்பாட்டப் போர்ப்பாட்டுடன் கண்டனக் குரலை எழுப்புகிறார்கள்.
ஏழை - எளிய மக்கள் தங்கள் அவசரத் தேவைகளுக்கு, தங்க நகையை அடமானம் வைத்தே கடன் பெற்று வருகிறார்கள். இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகளால் வங்கிகளில் நகைக் கடன் பெறுவதில் மிகப்பெரும் நெருக்கடியை ஏழை மக்கள் எதிர்கொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். தனியார் கடன் நிறுவனங்களை அவர்கள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிக வட்டி, வட்டிக்கு வட்டி என்ற நிலைக்கு ஏழைகள் ஆளாவதும், அவர்கள் சிறுகச் சிறுகச் சேர்த்த தங்க நகைகளை கார்ப்பரேட் நிறுவனங்கள் அடமானம் பெற்று, தங்களை வளர்த்துக் கொள்ளவுமான நிலையை இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கியுள்ள நிலையில், மக்களை வாட்டி வதைக்கும் இந்த நிபந்தனைகளைக் கைவிட வேண்டுமெனத் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தியிருக்கிறேன். கடிதத்தில் நான் வைத்துள்ள கோரிக்கைக் குரலுடன், கழகத்தின் சார்பில் கண்டனக் குரலையும் விவசாயிகள் ஒருங்கிணைந்து எழுப்புகிறார்கள்.
மக்கள் நலனே நமது நோக்கம். ஒன்றிய பா.ஜ.க. அரசு நாட்டு மக்களின் நிலை பற்றிச் சிந்திக்காமல் பண மதிப்பிழப்பு நடவடிக்கை முதல் நகைக்கடன் நிபந்தனைகள் வரை இந்திய ரிசர்வ் வங்கி மூலம் தாக்குதல் தொடுத்து வருகிறது. தமிழ்நாட்டு மக்களை அந்தத் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் முயற்சியின் ஒரு பகுதியாக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு பெரியகருப்பன் அவர்கள், "ரிசர்வ் வங்கியின் நிபந்தனைகள் கூட்டுறவு வங்கிகளுக்குப் பொருந்தாது" என அறிவித்திருக்கிறார். ஒன்றிய அரசு வஞ்சித்தாலும், ஏழை - எளிய மக்களை மாநில அரசின் கூட்டுறவு வங்கிகள் அரவணைக்கும்.
முந்தைய ஆட்சியாளர்கள்போல பதவிக்காக, மாநில உரிமைகளை ஒன்றிய அரசிடம் அடகு வைக்கும் வழக்கம் திராவிட மாடல் அரசுக்கு இல்லை. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தர மறுத்தாலும், அண்ணா தந்த இருமொழிக் கொள்கையே இங்கே நிலைத்திருக்கும் என்ற உறுதியுடன் மாநில அரசின் நிதியில் கல்விக்குச் செலவிடுகிறோம். நகைக்கடன் நிபந்தனைகளால் நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளை மக்கள் நாட முடியாத நிலையில், கூட்டுறவு வங்கிகள் மூலம் மக்களுக்கு உதவுகிறோம். இதுதான் மக்கள் நலன் காக்கும் அரசின் செயல்பாடு. மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காத உறுதிப்பாடு.
இந்த நல்லாட்சி தொடர வேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களின் விருப்பமாக உள்ளது. அவர்களின் மனம் நம் பக்கம் உள்ள நிலையில், தேர்தல் களம் நம் வெற்றிக்கு முரசு கொட்டி அழைக்கிறது. உடன்பிறப்புகளால் தலைவர் பொறுப்பை ஏற்றது முதல், எதிர்கொண்ட தேர்தல் களங்கள் அனைத்திலும் கழகம் தொடர்ந்து வெற்றிவாகை சூடி வருகிறது. சளைக்காத உழைப்பும், சரியான வியூகமும்தான் நம் வெற்றிக்கு அடிப்படை.
திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந்து மீட்டெடுக்க முடியுமா எனக் கடுமையாக முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. தனித்தனியாகவும், கூட்டணி சேர்ந்தும், இரகசியமாக ஆலோசனைகள் நடத்தியும் எதிரணியினர் ஊடகங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் நமக்கு எதிரான பரப்புரை முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
நாம் என்ன செய்ய வேண்டும்? நமக்கான கடமை என்ன? நம் இலட்சியப் பயணத்தின் இலக்கு எது? என்பதையெல்லாம் உடன்பிறப்புகளாம் உங்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை உத்தங்குடி கலைஞர் திடலில் ஜூன் 1-ஆம் நாள் கூடுகிறது. கழகத்தின் தலைவர் என்ற முறையிலும் உங்களில் ஒருவனாகவும் பொதுக்குழு உறுப்பினர்களையும் சிறப்பு அழைப்பாளர்களையும் அன்புடன் அழைக்கின்றேன்.
வீரமும் பாசமும் நிறைந்த மதுரை மண்ணில் பொதுக்குழுவா, மாநாடா என வியக்கின்ற வகையில் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்கிறார் மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும் மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான திரு.பி.மூர்த்தி அவர்கள். மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு.கோ.தளபதி எம்.எல்.ஏ., மதுரை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.சேடப்பட்டி மு.மணிமாறன் ஆகியோர் உடனிருந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். தென்மாவட்டக் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பொதுக்குழு பணிகளில் ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். பொதுக்குழு நடைபெறும் அரங்கம், அதற்கான பாதைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், உணவருந்தும் இடம், தங்குமிடங்கள் என ஒவ்வொன்றும் தனித்தன்மையுடன் அமைத்துள்ளதை நாள்தோறும் என்னைத் தொடர்பு கொண்டு தெரிவித்து வருகிறார்கள். காட்சிகளையும் படங்களையும் வாட்ஸ்அப் மூலம் பார்த்து உரிய திருத்தங்களையும் தெரிவித்துள்ளேன். கழகத்தின் முதன்மைச் செயலாளர் மாண்புமிகு அமைச்சர் கே.என்.நேரு, மாண்புமிகு அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியதுடன், எனக்கும் அது பற்றிய விவரங்களைத் தெரிவித்துள்ளார்.
ஜூன் 1 காலை 9 மணிக்குப் பொதுக்குழு தொடங்குகிறது. அதற்கேற்ப பொதுக்குழு உறுப்பினர்களான உடன்பிறப்புகள் நல்ல முறையில் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என உரிமை மிகுந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காலை 8 மணிக்கே அரங்கத்திற்கு வருகை தந்து, கழகப் பொதுச்செயலாளர் தங்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தைக் காட்டி, பதிவு செய்துகொண்டு, அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து, சரியான நேரத்தில் பொதுக்குழு தொடங்கிட உடன்பிறப்புகள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிட வேண்டும்.
பொதுக்குழு உறுப்பினர்களின் மனம் திறந்த கருத்துகள், கழக முன்னோடிகளின் உணர்ச்சிமிகு உரைகள், இந்திய அரசியலையும் - தமிழ்நாட்டின் வளர்ச்சியையும் தீர்மானிக்கவிருக்கும் தீர்மானங்கள், அவற்றைச் செயல்படுத்துவதற்கான திட்டங்களை முன்வைக்கும் உங்களில் ஒருவனான என்னுடைய உரை என மதுரை பொதுக்குழு செறிவான நிகழ்ச்சி நிரலுடன் நடைபெறவிருக்கிறது.
2026 சட்டமன்றப் பொதுத்தேர்தல் களத்திற்கு நம்மை ஆயத்தப்படுத்திக் கொண்டு, மக்கள் நலன் காக்கும் ஆட்சி தொடர்ந்திட ஆற்ற வேண்டிய களப்பணிகளைத் தீர்மானித்திடவும், அதனை ஒவ்வொரு தொகுதியிலும் செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திடவும் கழக உடன்பிறப்புகளைப் பொதுக்குழுவில் சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். பொதுக்குழுவில் கூடிடுவோம்! பொதுத்தேர்தலில் வென்றிடுவோம்!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- பிரமாண்ட பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார்.
- தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கட்அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன.
மதுரை:
மதுரையில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. பொதுக்குழு கூட்டம் உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் நடக்கிறது. இதற்காக பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சருமான மூர்த்தி தலைமையில் நடந்து வருகிறது. இதில் பொதுக்குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், தலைமை நிர்வாகிகள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளனர்.
பொதுக்குழு நடைபெறும் பந்தலில் பிரமாண்டமான அரங்கு அமைக்கும் பணிகள் இரவு, பகலாக நடக்கிறது. குளு, குளு ஏ.சி.வசதியுடன் இருக்கைகளும், வண்ண விளக்குகளுடன் அமைகிறது. முக்கிய நிர்வாகிகள் அமரும் மேடை, முதலமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், நிர்வாகிகள் வர தனித்தனியாக வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அவர்களது பெயர்கள் பார்த்து பதிவு செய்து எளிதில் அனுமதி பெற்று பொதுக்குழு அரங்கிற்குள் செல்ல வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் பல்வேறு வகையான உணவுகள் சுமார் 3 ஆயிரம் பேர் சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. சென்னை அண்ணா அறிவாலயம் போன்ற முகப்பு தோற்றத்துடன் பொதுக்குழு நடைபெறும் அரங்கின் நுழைவு வாயில் அமைக்கப்பட்டு வருகிறது. அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினின் பிரமாண்ட கட்-அவுட்டுகளும் வைக்கப்பட உள்ளது.
அரங்கின் முன்பு 100 அடி கொடிக்கம்பம் அமைக்கப்படுகிறது. அந்த பகுதியில் பசுமையான புல்வெளிகள், பூத்துக்குலுங்கும் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. அங்கு செயற்கை நீரூற்றும் அமைக்கப்படுகிறது.
இந்த பிரமாண்ட பொதுக்குழுவில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரை வருகிறார். அதையொட்டி மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் சாலையின் இருபுறங்களில் தி.மு.க. கொடி அமைக்கப்படுகிறது. மேலும் முதலமைச்சர் பங்கேற்கும் பிரமாண்டமான ரோடு ஷோ சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடக்கிறது.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை விளக்கும் கட்அவுட்டுகள் அமைக்கப்படுகின்றன. இதையொட்டி ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலில் ரூ.50 லட்சம் மதிப்பில் அமைச்சர் மூர்த்தி ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள மேற்கூரையை முதலமைச்சர் நாளை திறந்து வைக்கிறார். பின்னர் புதிதாக திறக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில் முதலமைச்சர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்று வருகிறது. கூட்டத்துக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, பொருளாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, அந்தியூர் செல்வராஜ், ஆ.ராசா, கனிமொழி, திருச்சி சிவா.
அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ். இளங்கோவன் உள்பட மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 76 பேரும் கூட்டத்துக்கு வந்து இருந்தனர். இந்த கூட்டத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும், போன் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு வருகின்றன.
இதனை தொடர்ந்து, அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி மதுரையில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக நடைபெறும் பொதுக்கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவை தொடர்ந்து, அக்கட்சியில் தலைவர் பதவி காலியானது. இந்த பதவிக்கும், செயல் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலின் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று முன்தினம் நடந்தது. இதில் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினும், பொருளாளர் பதவிக்கு துரைமுருகனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து புறப்பட்ட மு.க.ஸ்டாலின், கோபாலபுரம் இல்லத்திற்கு சென்று தந்தை கருணாநிதியின் படத்திற்கு மரியாதை செலுத்தினார். அங்கிருந்து புறப்பட்ட அவர் காலை 9.30 மணியளவில் அறிவாலயம் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர் கலைஞர் அரங்கிற்கு வந்ததும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதில், கட்சி தலைவராக ஸ்டாலின் மற்றும் பொருளாளராக துரைமுருகன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து பொதுச்செயலாளர் க.அன்பழகன் முறைப்படி அறிவிக்க உள்ளார். தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுகிறார். அதேபோல் பொருளாளராக பதவி ஏற்கும் துரைமுருகனும் கட்சியின் பதிவேட்டில் கையெழுத்திடுகிறார். இந்த கூட்டத்துக்கு பின்னர் மு.க.ஸ்டாலினுக்கு தொண்டர்கள் வாழ்த்து தெரிவிக்கிறார்கள். #DMK #DMKGeneralCouncilMeet #MKStalin
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுவையும், 2 முறை செயற்குழுவையும் கூட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணைய விதி இருக்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜனவரி மாதம் பொதுக்குழு கூடியிருக்க வேண்டும்.
ஆனால், தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், பொதுக்குழுவை கூட்ட முடியவில்லை. இது தொடர்பாக, தேர்தல் ஆணையத்துக்கும் தி.மு.க. சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தி.மு.க. பொதுக்குழுவை கூட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் இதற்கான பணிகள் நடைபெற்று வந்தன. வழக்கமாக, இந்த மண்டபத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு, செயற்குழு கூட்டங்கள் தான் ஆண்டுதோறும் நடைபெற்று வந்திருக்கின்றன. தே.மு.தி.க.வின் பொதுக் குழுவும் நடைபெற்று இருக்கிறது.

ஆனால், தற்போது தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தி.மு.க. பொதுக்குழுவை ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட திருமண மண்டப நிர்வாகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்று தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. #DMK






