என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    2026 தேர்தலில் பணத்தை வண்டி வண்டியாக கொட்டப்போகிறார்கள் - விஜய்
    X

    2026 தேர்தலில் பணத்தை வண்டி வண்டியாக கொட்டப்போகிறார்கள் - விஜய்

    • இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்ந்தெடுக்கக் சொல்லுங்கள்.
    • பணம் கொடுத்தாலும் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும்.

    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகளை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் நேரில் அழைத்து பாராட்டி, பரிசளித்து வருகிறார். 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடக்க உள்ளது.

    முதல் கட்ட பரிசளிப்பு விழா மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. விருது வழங்கும் விழாவில் பங்கேற்று மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் த.வெ.க. தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

    * படிப்பு சாதனை தான். ஒரே படிப்பில் மட்டும் மனதை போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள்.

    * நீட் மட்டும் தானா உலகமா? நீட்டை தாண்டி இந்த உலகம் மிக மிக பெரியது.

    * ஜனநாயகக் கடமை ஆற்றுங்கள்.

    * வீட்டில் உள்ள எல்லோரையும் ஜனநாயகக் கடமையாற்றக் கூற சொல்லுங்கள்.

    * இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்ந்தெடுக்கக் சொல்லுங்கள்.

    * காசு வாங்கி விட்டு ஓட்டுப்போடும் கல்ச்சரை ஊக்கப்படுத்தாதீர்கள்.

    * அடுத்த தேர்தலில் பணத்தை வண்டி வண்டியாக கொட்டப்போகிறார்கள்.

    * பணம் கொடுத்தாலும் என்ன செய்ய வேண்டும் என உங்களுக்குத் தெரியும்.

    * சாதி, மத பிரிவினை சிந்தனை உங்களை பிரிவுபடுத்த விடாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×