என் மலர்
சென்னை
- சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னை:
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு களஆய்வு மேற்கொண்டார்.
திரு.வி.க.நகர் பஸ் நிலையம், அகரம், ஜெகநாதன் தெருவில் கட்டப்பட்டு வரும் ரத்த சுத்திகரிப்பு மையம், பெரியார் நகர் பஸ் நிலையம், பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய நவீன சந்தை மற்றும் பேப்பர் மில்ஸ் சாலையில் கட்டப்பட்டு வரும் புதிய வட்டாட்சியர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர் காகர்லா உஷா சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, அரசு உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அமைச்சர் சேகர் பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 13 பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
மகாபலிபுரம், செங்கல்பட்டு, ஆவடி மற்றும் தி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் மேம்படுத்தப்பட்டு வரும் பஸ் நிலையங்கள் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் முத்திரைகளாக உருவாக்கப்பட்டு வருகிறது.
பெரியார் நகர் மற்றும் திரு.வி.க. நகர் பஸ் நிலையங்களை மேம்படுத்தும் பணி துவக்கப்பட்டு அடுத்த மாதம் ஜூலை இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களுக்கு கட்டணம் இல்லாமல் டயாலிசிஸ் சென்டர் உருவாக்கப்பட்டு துறைமுகம் மற்றும் கொளத்தூரில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணிகள் அனைத்தும் நிறைவேறும் பொழுது வடசென்னை மக்களின் தேவைகள் ஓரளவுக்கு பூர்த்தி ஆகி இருக்கும்.
குத்தம்பாக்கம் பஸ் நிலையம் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பணிகள் தீவிரபடுத்தப்பட்டு இருக்கிறது.
தி.மு.க. அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் 50 கூட நிறைவேற்றவில்லை என்று அண்ணாமலை கூறுவது, தூங்குபவர்களை எழுப்பலாம் தூங்குபவர்களைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது, அண்ணாமலையை மேடை ஏற சொல்லுங்கள் சொன்னதை எத்தனை செய்துள்ளோம் சொல்லாததை எத்தனை செய்துள்ளோம் என்று பட்டியலிடுகிறோம், குறை சொல்லக்கூடிய தளத்தில் இருப்பவர்கள் குறை சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள். அரசியல் களம் வேண்டும் என்பதற்காக இது போன்ற குற்றச்சாட்டுகளை அண்ணாமலை போன்றோர் சொல்லிக் கொண்டு உள்ளார்கள், நடுநிலையாளர்கள் இந்த ஆட்சியை பாராட்டுகிறார்கள், வசை பாடியவர்கள் கூட இந்த ஆட்சியை வாழ்த்துகிறார்கள்.
முடிச்சூர் பஸ் நிலையத்தை பொறுத்தவரையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. கூடிய விரைவில் வழக்கை இறுதிக்கு கொண்டு வந்து முடிச்சூர் பஸ் நிலையத்தை ஆம்னி பஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் பயன்படுத்தும் அளவிற்கு மேம்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
- காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
சென்னையில் நடந்து வரும் மெட்ரோ ரெயில் கட்டுமானப் பணிகளின் போது, ராமாபுரம் அருகே இணைப்பு பாலம் சரிந்து விழுந்ததில் அவ்வழியே பைக்கில் சென்று கொண்டிருந்த இளைஞர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்ததாகவும் மேலும் சிலர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கிறது.
உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து நலமுடன் வீடு திரும்ப இறைவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- மகேஸ்வரி நகர், திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் .
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (14.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அஸ்தினாபுரம்: ஆர்.பி. சாலை பகுதி, வேல்முருகன் தெரு, வினோபாஜி நகர், மகேஸ்வரி நகர், திருமலை நகர் மற்றும் சரஸ்வதி நகர் ஆகிய பகுதிகளில் நாளை மின் தடை செய்யப்படுகிறது.
- அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள்.
- அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசு.
சென்னை:
தி.மு.க. மாணவர் அணி செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கீழடி என்கிற பெயரே பா.ஜ.க அரசுக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது. கீழடி ஆய்வை மேற்கொள்ளவே நீதிமன்றத்தை நாடவேண்டியிருந்தது. அகழாய்வை மேற்கொண்ட அதிகாரிகள் பா.ஜ.க-வின் குரலாக ஒலிக்கவில்லை என்பதற்காக அவர்கள் தூக்கி எறியப்பட்டார்கள். கடந்தகால அடிமை எடப்பாடி அரசும் பா.ஜ.க-வினரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு கீழடி அகழாய்வைக் கிடப்பில் போட்டது. தமிழ்நாட்டில் கழகத் தலைவர் தலைமையிலான அரசு அமைந்ததும் கீழடி அகழாய்வுக்குப் புத்துயிர் கொடுத்ததோடு துரிதமாக பலகட்ட ஆய்வுகள் நடத்தி அருங்காட்சியகத்தையும் கட்டியெழுப்பினார்.
அறிவியல்பூர்வமாக கீழடி அகழாய்வுகள் நிரூபிக்கப்பட்ட பிறகும் அதை ஏற்று ஆய்வை வெளியிட மறுக்கும் தமிழர் விரோத பா.ஜ.க அரசைக் கண்டித்து வருகிற ஜூன் 18ஆம் தேதி காலை 10 மணிக்கு தி.மு.க. மாணவர் அணி சார்பில், "மதுரை, வீரகனூர் சுற்றுச்சாலை"யில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாநில நிர்வாகிகள் - மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் ஒன் டூ ஒன் பேசுவோம் எனக் கூறியிருந்தார்.
- முதற்கட்டமாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் வெற்றிக்கான வியூக வகுப்பில் தி.மு.க. தீவிரமாக இருக்கிறது.
ஜூன் முதல் வாரம் முதல் தொகுதி வாரியாக தி.மு.க. நிர்வாகிகளை சந்திக்க இருப்பதாக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. நிர்வாகிகளை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார்.
மதுரையில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஜூன் முதல் வாரத்தில் ஒன் டூ ஒன் பேசுவோம் எனக் கூறியிருந்த நிலையில், இன்று முதற்கட்டமாக சிதம்பரம், விழுப்புரம், உசிலம்பட்டி தொகுதி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.
- நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
தங்கம் விலை கடந்த 6-ந்தேதி வரை விலை உயர்ந்து வந்து, பின்னர் குறையத் தொடங்கியது. கடந்த 10-ந்தேதி வரை விலை சரிந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் முதல் மீண்டும் ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கியுள்ளது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 20-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்று மாலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 195 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,295-க்கும் சவரனுக்கு 1,560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,360-க்கு விற்பனையாகிறது. 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 120 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி ரூ. 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
12-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,800
11-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
10-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
09-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,640
08-06-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,840
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
12-06-2025- ஒரு கிராம் ரூ.119
11-06-2025- ஒரு கிராம் ரூ.119
10-06-2025- ஒரு கிராம் ரூ.119
09-06-2025- ஒரு கிராம் ரூ.118
08-06-2025- ஒரு கிராம் ரூ.117
- 6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சென்னை:
திருமணமான பெண்கள் அனைவருமே தாய்மைக்கு ஏங்குகிறார்கள். கர்ப்பிணியாகி, குழந்தையை பெற்றெடுத்த பின்னர், குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டி வளர்க்கவும் விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் வேலைக்கு போகும் பெண்களாக இருந்தால் சரியான நேரத்திற்கு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியாமல் தவித்துப்போகிறார்கள். அந்த வகையில், தமிழ்நாட்டில் ஏறக்குறைய 40 சதவீத தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை என்று மகப்பேறு டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக, சென்னை எழும்பூர் மகப்பேறு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
குழந்தை பிறந்த முதல் 6 மாதத்திற்கு தாய்ப்பாலை தவிர குழந்தைகளுக்கு தண்ணீர் போன்ற வேறு எந்த உணவும் கொடுக்கக் கூடாது. குழந்தை பிறந்து சில மாதங்களில் பெண்கள் வேலைக்கு செல்வதால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை.
தமிழ்நாட்டில் 40 சதவீதத்திற்கும் மேற்பட்ட தாய்மார்கள் குழந்தை பிறந்த 6 மாதத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பதில்லை.
இதனால் எளிதில் குழந்தைகளுக்கு நோய் தொற்று ஏற்படுகிறது. சரியான தாய்ப்பால் கிடைக்காததால் 5 வயதுக்கும் கீழ் உள்ள குழந்தைகளின் இறப்பு விகிதம் அதிகரித்து வருகிறது.
6 மாதத்திற்கு பின்னர் தாய்ப்பாலுடன் மற்ற உணவுகளும் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.ஆனால் தாய்ப்பாலுக்கு பதில் வேறு உணவுகள் கொடுக்கும்போது குழந்தைகளுக்கு ஆஸ்துமா, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.
தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவத்தையும், மகத்துவத்தையும் உணர்த்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலக தாய்ப்பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்மார்களுக்கு கருப்பை விரைவில் சுருங்குதல் மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவது குறைதல் போன்ற நன்மைகளும் உள்ளன. தமிழ்நாட்டில் தாய்ப்பால் வங்கி அனைத்து மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ளன.
தாய் அல்லது குழந்தைகளுக்கு உடல் நலம் சரியில்லாத நேரத்தில் டாக்டர்களின் அறிவுறுத்தலின் பேரில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வங்கியில் இருந்து பதப்படுத்தப்பட்ட தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. தாய்ப்பாலை ஒப்பிடுகையில், தாய்ப்பால் வங்கியில் உள்ள பதப்படுத்தப்பட்ட தாய்ப்பாலில் சத்துக்கள் குறைவாகவே உள்ளது. எனவே அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பாலை கட்டாயம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- 1000 பக்தர்களை 5 கட்டமாக அறுபடை வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அழைத்து செல்கிறது.
- இந்த ஆண்டு அறுபடை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்க்கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப்பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை ஆகியவற்றிற்கு ஒவ்வொரு ஆண்டும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை தரிசனத்திற்காக கட்டணமில்லாமல் இந்து சமய அறநிலையத்துறை அழைத்து செல்கிறது.
1000 பக்தர்களை 5 கட்டமாக அறுபடை வீடுகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை அழைத்து செல்கிறது. ஒவ்வொரு கட்டத்திலும், 200 பக்தர்கள் இந்த கட்டணமில்லா பயண தரிசனத்திற்கு செல்லப்படுவார்கள். கடந்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரம் பக்தர்கள் அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர். பயணம் மேற்கொண்ட பக்தர்களுக்கு உணவு, தண்ணீர் உள்ளிட்ட பயண பை வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு அறுபடை செல்லும் பயணிகளின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக ரூ.2.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டணமில்லா பயணத்திற்கு தேர்வு செய்யப்படும் பக்தர்களின் பயண தேவைக்கான அடிப்படை தேவைகள் இந்த நிதியில் நிவர்த்தி செய்யப்படும்.
இந்த ஆண்டிற்கான முதற்கட்ட அறுபடை தரிசன பயணம் அடுத்த மாதம் (ஜூலை) தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஜூலை முதல் வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் இதற்கான அறிவிப்பு வெளியாகும். அந்த இணையதளத்திலேயே கட்டணமில்லா அறுபடை தரிசனத்திற்கு செல்ல விரும்புபவர்கள் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
பக்தர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு உயர்த்தப்பட்டு இருப்பதால் ஒவ்வொரு கட்டத்திலும் 400 பக்தர்களை அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கண்டிப்பாக அவர்கள் 60 வயதை பூர்த்தி செய்து இருக்க வேண்டும்.
அறுபடை தரிசனத்தை தொடர்ந்து, ஆடி மாதத்தில் அம்மன் கோவில் ஆன்மிக தரிசன பயணமும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்கள் தரிசன பயணமும் தொடங்க இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
- எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.
சென்னை:
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறுவதால் எழும்பூர்-புதுச்சேரி இடையிலான பயணிகள் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எழும்பூரிலிருந்து புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 4-ந் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும். இந்த ரெயில் சென்னை பூங்கா மற்றும் கோட்டை ரெயில் நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும். இதே போல, புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் பயணிகள் ரெயில் ஆகஸ்டு 3-ந் தேதி வரை எழும்பூருக்கு பதிலாக சென்னை கடற்கரை சென்றடையும்.
அதே போல, வருகிற 19-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை சென்னை எழும்பூருக்கு வரும் கொல்லம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-16102), மதுரை தேஜஸ் ரெயில் (22672), மன்னார்குடி மன்னை ரெயில் (16108), செந்தூர் அதிவிரைவு ரெயில் (20606), குருவாயூர் ரெயில் (16128) ஆகிய ரெயில்கள் தாம்பரத்துடன் நிறுத்தப்படும்.
மறுமார்க்கமாக, 20-ந் தேதி முதல் ஆகஸ்டு 18-ந் தேதி வரை எழும்பூரிலிருந்து கொல்லம் (16101), மதுரை (22671), மன்னார்குடி (16107), திருச்செந்தூர் (20605) மற்றும் குருவாயூருக்கு (16128) செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்திலிருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
- முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.
சென்னை:
த.வெ.க. தலைவர் விஜய் 10, 12-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கி கவுரவித்து வருகிறார்.
2025-ம் ஆண்டுக்கான கல்வி விருது வழங்கும் விழா ஏற்கனவே 2 கட்டங்களாக மாமல்லபுரத்தில் நடந்தது. கடந்த மாதம் 30-ந் தேதி நடந்த முதற்கட்ட பரிசளிப்பு விழாவில் 88 தொகுதி மாணவ, மாணவிகளுக்கும், கடந்த 4-ந்தேதி 2-ம் கட்டமாக 84 தொகுதிகளை சேர்ந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. முதலிடத்தை பெற்ற மாணவிகளுக்கு வைரக் கம்மல் பரிசாக வழங்கப்பட்டது.
தொகுதிவாரியாக 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரூ.5 ஆயிரம் ரொக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் 3-ம் கட்ட பரிசளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. த.வெ.க. தலைவர் விஜய் இன்று 3-ம் கட்டமாக பரிசு வழங்குகிறார்.
தமிழ்நாடு, புதுச்சேரியில் 51 சட்டசபை தொகுதிகள் வாரியாக மாணவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
- எரிந்த விமானம் பீனிக்ஸ் பறவையாய் மீண்டெழ முடியாது.
- நாம் மீண்டெழலாம் தவறுகளிலிருந்து என பதிவிட்டுள்ளார்.
சென்னை:
அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
கருப்புப் பெட்டி தேடுவார்கள்
விமானம் விபத்தானால்
ஒரு விமானமே
கருப்புப் பெட்டியாய்க்
கருகிக் கிடக்கையில்
எந்தக் கருப்புப் பெட்டியை
இனிமேல் தேடுவது?
பறிகொடுத்தோர்
பெருமூச்சுகள்
கரும்புகையாய்...
தீப்பிடித்த கனவுகளின்
சாம்பல்களை
அள்ளி இறைக்கிறது
ஆமதாபாத் காற்று
அவரவர் அன்னைமாரும்
கண்டறிய முடியாதே
அடையாளம் தெரியாத
சடலங்களை
புஷ்பக விமானம்
சிறகு கட்டிய
பாடையாகியது எங்ஙனம்?
கடைசி நிமிடத்தின்
கதறல் கேட்டிருந்தால்
தேவதைகள் இறந்திருக்கும்;
மரணம் முதன்முதலாய்
அழுதிருக்கும்
எரிந்த விமானம்
பீனிக்ஸ் பறவையாய்
மீண்டெழ முடியாது
நாம் மீண்டெழலாம்
தவறுகளிலிருந்து' என பதிவிட்டுள்ளார்.
- ராமாபுரம் டி.எல்.எப் அருகே மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்தது.
- இந்த விபத்தால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டமானது 116 கி.மீ. தூரத்துக்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி நெடுஞ்சாலை இடையேயான வழித்தடத்தில், கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் பூந்தமல்லி நெடுஞ்சாலை வரை மேம்பால பாதையாகவும் அமைகிறது.
இதில் பூந்தமல்லி-போரூர் இடையே ரெயில் பாதை அமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில், சென்னை போரூர் டி.எல்.எப் - எல் அண்ட் டி அருகே மெட்ரோ ரெயில் பணியின்போது இரண்டு மெட்ரோ தூண்களுக்கு இடையே தண்டவாள டிராக் சரிந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
மெட்ரோ தூண்கள் விழுந்ததில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ தூணில் இருந்து கட்டுமானம் கீழே விழுந்து விபத்துக்கு உள்ளானதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.






