என் மலர்
சென்னை
- மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மகாராஷ்டிர கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணனை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பலம் அதிகமாக இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணன் எளிதில் வெற்றி பெறுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு பிறகு பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா ஆளுநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கிய நிலையில், தமிழர் ஒருவருக்கு ஆளுநர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
சென்னை:
புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய அடுத்த மாதம் 9-ந்தேதி தேர்தல் நடக்கிறது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் தமிழகத்தை சேர்ந்த மகாராஷ்டிர மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
அவர் 21-ந்தேதி (வியா ழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் யாரை களம் இறக்குவது என்று இந்தியா கூட்டணி ஆலோசனை நடத்தி வருகிறது. இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. ஆனால் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்று தெரிய வந்துள்ளது.
எனவே இந்தியா கூட்டணி சார்பில் வேட்பாளராக யார் அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் மொத்தம் 872 எம்.பி.க்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்களில் 392 எம்.பி.க்களின் ஆதரவை பெறுபவர் புதிய துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்படுவார்.
தற்போது பாராளுமன்ற இரு அவைகளிலும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிர்க்கட்சிகளை விட சுமார் 40 எம்.பி.க்கள் அதிகம் உள்ளனர். எனவே சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று துணை ஜனாதிபதி ஆவது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் வாக்குகள் பெற வைப்பதற்காக மத்திய மந்திரிகள் இன்று ஆதரவு திரட்டும் பணிகளில் ஈடுபட்டனர். அதன்படி மத்திய மந்திரி ராஜ்நாத்சிங், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவர், "சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு தி.மு.க. எம்.பி.க்கள் ஆதரவு கொடுக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்தார். இதே போன்று ஒடிசா மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நவீன் பட்நாயக்கிடமும் மத்திய மந்திரி ராஜ்நாத்சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவு திரட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
- தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
- இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும்.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழகத்திலுள்ள இண்டி கூட்டணிக் கட்சித் தலைவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள்!
தமிழகத்தில் இருந்து பலமான தேசியக்குரல் அதிகாரமிக்கதாக இருக்க வேண்டுமென நினைத்து தற்போது துணைக்குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழக மண்ணின் மைந்தரும், மகாராஷ்ட்டிர ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராகியுள்ளது வரலாற்று சிறப்புமிக்க தருணம்.
ஒரு தமிழருக்கு கிடைக்கவிருக்கும் மாபெரும் பெருமையை, அரசியல் எல்லைகளைத் தாண்டி எல்லோரும் ஆதரித்தோம் என்று வரலாற்றில் பேசப்பட்டால், அது ஒரு ஆரோக்கியமான அரசியலை ஊக்குவிக்கும்.
இதற்கு இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகளும் ஆதரவு தருவது சிறப்பானதாக இருக்கும்.
ஆகவே, கட்சி வித்தியாசங்களைத் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் களைந்து தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு தருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது.
- தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், ''அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும்; எனவே அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது" என்று சில தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சொல்லப்பட்ட காலமும், சூழலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது; எல்லா தொழிலும் எல்லா சமூகத்தினராலும் செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்க வேண்டும்; அவர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஆனால், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 12 நாள்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது முன் வைக்கப்படாத இந்த யோசனைகள், தூய்மைப் பணியாளர்களின் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர்களின் மீது அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருக்கும் நிலையில் எழுப்பப்படுவது தான் வினோதமாக உள்ளது. மக்களின் கோபத்திலிருந்து அரசைக் காப்பாற்றுவதற்காக இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது பணியாளர்களின் நுரையீரலை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, அது கண்ணியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்காது. அதனால் அவர்கள் தொடர்ந்து தூய்மைப் பணி செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. ஆனால், அதற்கு முன்பாக தூய்மைப் பணியில் இருந்து மீட்கப்படும் பணியாளர்களுக்காக என்னென்ன மாற்றுப் பணிகள் வழங்கப்படவுள்ளன என்பதை அரசு வரையறுக்க வேண்டும்.
எடுத்துக்காட்டாக, ஒரு தூய்மைப் பணியாளர் 5 அல்லது 7 ஆண்டுகள் பணி செய்த பின் அப்பணியில் இருந்து மீட்கப்படும்போது அவருக்கு அரசுத் துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்ற நிரந்தரப் பணி வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இயல்பாக கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை விட கூடுதலாக 50% மானியத்துடன் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கி தொழில் முனைவோர் ஆக்குதல் போன்ற மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அதை செய்யாமல் தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அவர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.
தூய்மைப்பணியாளர்களுக்கு இத்தகைய மாற்று வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டாலும் கூட, அவர்கள் பணி செய்யும் காலத்தில் நிலையான பணியாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் பிற உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரஜினிகாந்த் தற்போது வரை 171 படங்களில் நடித்துள்ளார்.
- ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் அடியெடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். கே.பாலச்சந்தர் இயக்கத்தில் 1975-ம் ஆண்டு வெளியான 'அபூர்வ ராகங்கள்' திரைப்படம் மூலமாக திரையுலகில் கால்பதித்த அவர், தற்போது வரை 171 படங்களில் நடித்துள்ளார். அவரின் 171-வது திரைப்படமான கூலி கடந்த வாரம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் திரைத்துறையில் 50 ஆண்டுகள் நிறைவு செய்ததையடுத்து அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்தின் சந்தித்துள்ளார்.
ரஜினியின் 50 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினார். மேலும் அரசியல் நிகழ்வுகள் குறித்து இருவரும் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
சென்னை:
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.
கடந்த வாரத்தில் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 வரை குறைந்துள்ளது.
இந்நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையாகிறது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.74 ஆயிரத்து 200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9,275-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி விலை 127 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 27 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
17-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
16-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200
15-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,240
14-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
13-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
17-08-2025- ஒரு கிராம் ரூ.127
16-08-2025- ஒரு கிராம் ரூ.127
15-08-2025- ஒரு கிராம் ரூ.127
14-08-2025- ஒரு கிராம் ரூ.127
13-08-2025- ஒரு கிராம் ரூ.126
- தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும்.
- மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 21-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.
இந்நிலையில் த.வெ.க. தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கடிதம் எழுதி உள்ளார். அதில்,
என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு,
வணக்கம்.
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு குறித்த இரண்டாவது கடிதம் இது.
மக்களுடன் மக்களாக இணைந்து நிற்கும் மகத்தான மக்களரசியல் இயக்கமான த.வெ.க. மீதான தமிழ்நாட்டு மக்களின் பேரன்பும் பேராதரவும் தேர்தல் அரசியல் களத்தில் விரைவில் நிரூபிக்கப்படப் போகிறது. நமது கனவு நனவாக, இலக்கை எட்ட, புரட்டிப் போடப் போகும் புரட்சி நிகழ, இன்னும் சில மாதங்களே உள்ளன.
1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவுகளை, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் இந்த மண்ணில் காணப் போகிறோம். மாபெரும் மக்கள் சக்தியான நீங்கள், இந்தத் திருப்புமுனைத் தருணத்தை நிரூபிக்கப் போவது நிச்சயம். இதை 32 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் இயக்கமாக இருந்து, தினம் தினம் மக்கள் மனம் அறிந்து உணர்ந்து வரும் நாம் சொல்வதில் அடர்ந்த, ஆழ்ந்த உண்மை இருப்பதை அனைவரும் அறியத்தான் போகின்றனர்.
தமிழக மக்களை உயிராகப் போற்றி மதிக்கும் இந்த விஜய் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். உங்கள் மீதான உள்ளன்பு மிக்க அக்கறையின் காரணமாக இப்போது ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறார்கள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர், நம் கழக மாநாட்டை வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு உரிமை கலந்த அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
மாநாட்டுக்கு வரும்போதும், மாநாடு நிறைவடைந்து ஊருக்குத் திரும்பும்போதும் நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒழுங்கையும் பாதுகாப்பையும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்க வேண்டும். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.
மக்கள் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட 'மனசாட்சி உள்ள மக்களாட்சி' என்னும் உன்னதமான அரசியல் அதிகார இலக்கை நோக்கி உறுதியுடன் பயணிக்கிறோம். மகத்தான தேர்தல் அரசியல் வரலாறு மீண்டும் நம் தமிழ்நாட்டு மண்ணில், நம்மால் நிகழப் போவது நிஜம். எனவே, அத்தகைய மாபெரும் அரசியல் விளைவை நிச்சயமாக நிகழ்த்திக் காட்டும் பேரறிவிப்பாக நமது மாநில மாநாட்டை மாற்றிக் காட்டுவோம்.
உங்கள் ஒவ்வொருவருக்காகவும் உணர்வு ததும்பும் மதுரை மண்ணில், இதயம் திறந்து இரண்டு கைகளை விரித்துக் காத்திருப்பேன்.
உங்கள் விஜய், உரிமையுடன் அழைக்கிறேன். மதுரை பாரப்பத்தியில் கூடுவோம். தேர்தல் அரசியல் போர் உத்தியில் வெல்வோம்.
நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சிலர் தங்கள் தாய்மொழியான தமிழை பேசுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை.
- ஒழுங்கான்னா எப்படி பேசுவாங்க... என்று கேட்கிறான்.
தாய்மொழியில் கல்வி கற்பது ஒருவரின் சிந்தனைத் திறனை வளர்க்க உதவுகிறது. ஏனெனில் ஒருவரின் சிந்தனை தாய்மொழியில் தான் ஆழமாக வேரூன்றுகிறது. தாய்மொழியில் பேசுவது ஒருவருடன் எளிதாக தொடர்பு கொள்ள உதவுகிறது. அது ஒருவரை ஒரு சமூகத்துடன் இணைக்கிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில் தனியார் பள்ளிகளின் மூலம் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கப்படுகிறது. மாணவர்களுக்கு அவர்களின் தாய்மொழியாக இல்லாவிட்டால், ஆங்கில வழிக் கல்வியானது கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்முறைகளில் முதன்மை மொழியாக பயன்படுத்தப்படுகிறது.
இத்தகைய சூழ்நிலையில் சிலர் தங்கள் தாய்மொழியான தமிழை பேசுவதை பெரும்பாலும் விரும்புவதில்லை. அப்படி விரும்பாததற்கான காரணங்கள் பல உள்ளன. சமூக அழுத்தங்கள், ஆங்கில மொழிக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது, அல்லது பிற மொழிகளில் பேசுவதால் கிடைக்கும் சமூக அந்தஸ்து போன்ற காரணங்களால் சிலர் தமிழைப் பேசுவதை தவிர்க்கிறார்கள்.
இந்நிலையில் தமிழ்ல்ல பேசும்மா என்று ஒரு சிறுவன் அழும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
அந்த வீடியோவில், சிறுவனிடம் அவரது அம்மா..
whats your problem என்கிறார்.
சிறுவன், ஒழுங்கா பேசும்மா... தமிழ்ல்ல பேசும்மா... என்று அழுகிறான்.
அதற்கு அவனது அம்மா தொடர்ந்து ஆங்கிலத்தில் பேசுகிறார்.
ஒழுங்கான்னா எப்படி பேசுவாங்க... என்று கேட்கிறார்.
இப்படி... இப்படி பேசுமா... தமிழ்ல்ல பேசும்மா என்று சொல்கிறான்.
English-ல பேசுறது புரியவே புரியலை என்று சொல்கிறான்.
உங்க school-ல மேம் எப்படி பேசுறாங்க... என்று கேட்கிறார்.
English-ல பேசுறாங்க என்று சிறுவன் சொல்ல...
நானும் அதான் English-ல பேசுறேன் என்று சொல்கிறார்.
நீ மட்டும் இப்படியே பேசு என்கிறான்.
மேம்.. பேசும்போது English புரியுதா? என்று கேட்கிறார்.
நான் சொல்றதை கேளும்மா... தமிழ்ல்ல பேசும்மா என்று அந்த சிறுவன் தலையில் அடித்துக்கொண்டு அழும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
- பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது விடியல் பயணம்!
- விடியல் பயணத்திற்காக அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
"வீட்டவிட்டு வெளிய போயிட்டு வரணும்னாலே 50 ரூபாய் தேவை. நான் வீட்டுலயே இருந்துக்குறேன்" என்ற எண்ணத்தை - பொருளாதாரத் தடையைத் தகர்த்து, கல்விக்கான - வேலைவாய்ப்புக்கான - முன்னேற்றத்துக்கான பயணத்தைச் சாத்தியமாக்கியது விடியல் பயணம்!
நமது Dravidian Model-இன் 51 மாதங்களுக்குள் விடியல் பயணத்தின் மூலம் நமது சகோதரிகள் 50 ஆயிரம் ரூபாய் வரை சேமித்துள்ளதும் - அந்தத் திட்டத்துக்கு அரசு செலவழிப்பதும், மகளிர் முன்னேற்றத்துக்கான முதலீடு!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.
- திருவேற்காடு, பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.
நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கிண்டி, சைதப்பேட்டை, கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
மேலும், செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி, கன்னிவாக்கம், பொத்தேரி, மறைமலைநகர், சிங்கப்பெருமாள் கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது
இந்நிலையில் 13 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன்படி, நீலகிரி, கோவை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
- செங்கல்பட்டு, திருநின்றவூர், நன்மங்கலம், தாம்பரம் உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநரில் பரவலாக மழை பெய்து வருகிறது. எழும்பூர், புரசைவாக்கம், அரும்பாக்கம், கிண்டி, சைதப்பேட்டை, கோயம்பேடு, அண்ணாநகர், முகப்பேர், வளசரவாக்கம், ஈக்காட்டுத்தாங்கல் உள்பட பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.
புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல், வாகனகரம், மதுரவாயல், திருவேற்காடு, பூவிருந்தவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
மேலும்,செங்கல்பட்டு, திருநின்றவூர், நன்மங்கலம், தாம்பரம் உள்பட புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
விழுப்புரத்தில் முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- தெரு நாய்களை பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
- வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதை நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இன்று திருச்சி மற்றும் சென்னையில் இந்த முடிவை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அம்மு ராமச்சந்திரன், வாயில்லா ஜீவன் என்று நாய்களை சொல்வதற்கு காரணம் அவற்றால் பேசவோ, தனது தேவைகளை கூறவோ முடியாது என்பதற்காகக்தான். அதனால் குழைக்கவும், கடிக்கவும் தான் முடியும்.
உடம்பில் அவ்வளவு வலி மற்றும் பசியுடன் அவை இருக்கின்றன. 6 அறிவு படைத்த நமக்கே பசித்தால் கோபம் வருகிறது. அவற்றுக்கு வராதா?. அப்படி கோபத்தில் உர்ர் என்றால் உடனே குறை சொல்கிறீர்கள்.
சாலையில் அவ்வளவு வேகமாக செல்லும் யாராவது அவற்றுக்கு உதவி இருக்கிறீர்களா?.. நாய்கள் சாலையில் இல்லை என்றால் இன்னும் வேகமாக சென்று விபத்து தான் ஏற்படும்.
நாய்கள் குழந்தைகளை பாதுகாக்கின்றன. அப்படி ஏதாவது குழந்தையை கடித்திருந்தால் அதற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்தார்.






