என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

6 அறிவு படைத்த நமக்கே பசித்தால் கோபம் வருகிறது.. நாய்களுக்கு வராதா? - நடிகை அம்மு ஆதங்கம்
- தெரு நாய்களை பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
- வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தெரு நாய் கடியால் டெல்லியில் நிறைய பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தெருநாய்க்கடி சம்பவங்களை தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி பர்திவாலா, மகாதேவன் அமர்வு, 8 வாரங்களுக்குள் தலைநகர் டெல்லியில் சுற்றித் திரியும் அனைத்து தெரு நாய்களையும் பிடித்து, நாய் காப்பகங்களில் அடைக்க வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
இதை நாய் பிரியர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்க்கின்றனர். இன்று திருச்சி மற்றும் சென்னையில் இந்த முடிவை கண்டித்து பேரணி நடத்தப்பட்டது.
சென்னையில் நடந்த பேரணியில் நடிகைகள் வினோதினி வைத்தியநாதன், சாயா வரலட்சுமி, அம்மு ராமச்சந்திரன், இயக்குனர் வசந்த், உட்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அம்மு ராமச்சந்திரன், வாயில்லா ஜீவன் என்று நாய்களை சொல்வதற்கு காரணம் அவற்றால் பேசவோ, தனது தேவைகளை கூறவோ முடியாது என்பதற்காகக்தான். அதனால் குழைக்கவும், கடிக்கவும் தான் முடியும்.
உடம்பில் அவ்வளவு வலி மற்றும் பசியுடன் அவை இருக்கின்றன. 6 அறிவு படைத்த நமக்கே பசித்தால் கோபம் வருகிறது. அவற்றுக்கு வராதா?. அப்படி கோபத்தில் உர்ர் என்றால் உடனே குறை சொல்கிறீர்கள்.
சாலையில் அவ்வளவு வேகமாக செல்லும் யாராவது அவற்றுக்கு உதவி இருக்கிறீர்களா?.. நாய்கள் சாலையில் இல்லை என்றால் இன்னும் வேகமாக சென்று விபத்து தான் ஏற்படும்.
நாய்கள் குழந்தைகளை பாதுகாக்கின்றன. அப்படி ஏதாவது குழந்தையை கடித்திருந்தால் அதற்கு வருந்துகிறோம்" என்று தெரிவித்தார்.






