என் மலர்tooltip icon

    சென்னை

    • நுரையீரல் பாதிப்புக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் ரேணுகாதேவி சிகிச்சை பெற்று வந்தார்.
    • கடந்த ஒரு மாதமாக ரேணுகாதேவி தொடர் சிகிச்சையில் இருந்தார்.

    தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவியும், தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் தாயாருமான ரேணுகாதேவி (80) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.

    நுரையீரல் பாதிப்புக்காக கடந்த சில மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக தொடர் சிகிச்சையில் இருந்தார்.

    இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை ரேணுகாதேவி காலமானார்.

    • ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்?
    • அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?

    மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஏற்கனவே குடியரசு துணைத்தலைவராக இருந்தவர் திடீரென இராஜினாமா செய்தார்.

    அதன் பிறகு அவர் பற்றிய எந்த விபரமும் கிடைக்கவில்லை. அவரை யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரும் பா.ஜ.க.வை சேர்ந்தவர்தான். அக்கட்சியால்தான் அந்நாற்காலியில் உட்கார வைக்கப்பட்டார்.

    அவ்வளவு பெரிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இருந்து பகல் 2 மணிக்கு புறப்பட்டுப் போனவர் என்னவானார் என்று இதுவரை நாட்டுக்குத் தெரியவில்லை.

    இப்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளரை வரவேற்க டில்லி விமான நிலையத்திற்கு நான்கு ஒன்றிய அமைச்சர்கள் சென்றுள்ளனர்.

    ராஜினாமா செய்த தன்கரை அனுப்பிவைக்கப் போனது எத்தனை ஒன்றிய அமைச்சர்கள்? எங்கே அனுப்பிவைத்தீர்கள்?

    அதே இடத்திற்கு புதியவரையும் அனுப்பிவைக்க மாட்டோம் என்று குறைந்தபட்சம் அவரிடமாவது சொன்னீர்களா?

    பல லட்சம் வாக்காளர்களோடு சேர்த்து குடியரசு துணைத்தலைவரையும் கண்டறியும் பொறுப்பு எதிர்கட்சிக்கு மட்டுமே உரியதாகிறது.

    ஆளையே காணோம் என்ற பதட்டத்தில் நாடு இருக்க இதில் கூசாமல் ஆதரவு கேட்கிறது ஒரு கூட்டம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும்.

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.

    மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அமைந்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு கொங்கன் - வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு -தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 22-ந்தேதி மற்றும் 23-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    வரும் 24-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.

    • பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
    • புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் உருவானது. இது நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது.

    மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அமைந்துள்ளது.

    இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து, இன்று அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் வங்கக்கடலின் வடக்குப்பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதை ஒட்டி பல்வேறு துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    • சில நேரம் சட்டத்தை மீறும் வகையில் சாகசம் செய்து போலீசிடம் சிக்கும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
    • சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பல்லாவரம்:

    இன்றைய இளைய தலைமுறையினர் சமூகவலைத்தளத்தில் லைக்குகளை அள்ளும் ஆசையில் சாகச வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதில் சில நேரம் சட்டத்தை மீறும் வகையில் சாகசம் செய்து போலீசிடம் சிக்கும் சம்பவங்களும், உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

    அந்தவகையில், ரீல்ஸ் எடுப்பதற்காக பைக்கில் அதி வேகமாக சென்ற சிறுவன் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பல்லாவரத்தில் கேடிஎம் பைக்கில் அதி வேகமாக சென்ற 17 வயது சிறுவன் மற்றொரு பைக் மீது மோதி தூக்கி வீசப்பட்டதில் அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது.
    • வெள்ளி விலை இன்று குறைந்து உள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்து, கடந்த 8-ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.75,760-க்கு விற்பனையாகி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது.

    கடந்த வாரம் முதல் தங்கம் விலை குறைந்தே காணப்பட்டது. கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 வரை குறைந்துள்ளது.

    வார தொடக்க நாளான நேற்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனையானது.

    இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ஒரு கிராம் ரூ.9,235-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    வெள்ளி விலையும் இன்று குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 126 ரூபாய்க்கும், பார் வெள்ளி 1 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    18-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200

    17-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200

    16-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,200

    15-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,240

    14-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,320

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    18-08-2025- ஒரு கிராம் ரூ.127

    17-08-2025- ஒரு கிராம் ரூ.127

    16-08-2025- ஒரு கிராம் ரூ.127

    15-08-2025- ஒரு கிராம் ரூ.127

    14-08-2025- ஒரு கிராம் ரூ.127

    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    தென்காசி, தேனி, விருதுநகர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
    • மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது.

    தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு ஆணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள்-II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) (அறிவிக்கை எண்.08/2024, நாள்.20.06.2024 மற்றும் அதன் பிற்சேர்க்கைகள்) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    மேற்குறிப்பிட்டுள்ள அறிவிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 29.08.2025 நாளன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், எண்.3, தேர்வாணையச் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்), சென்னை 600 003-ல் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட தேர்வர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான நாள், நேரம் மற்றும் இதர விவரங்கள் அடங்கிய அழைப்பாணையினை தேர்வர்கள் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in)-லிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

    மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் தேர்வர்களுக்கு அதற்கான விவரம் குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலம் மட்டுமே தெரிவிக்கப்படும். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான அழைப்பாணை தனியே அஞ்சல் மூலம் அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்படும் அனைவரும் கலந்தாய்விற்கு அனுமதிக்கப்பட்டு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதற்கான உறுதி அளிக்க இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்கள் மேற்படி சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு குறிப்பிடப்பட்ட நாள் மற்றும் நேரத்தில் கலந்துகொள்ளத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

    • அ.தி.மு.க. ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது தவறு தான்.
    • பத்திரிகையாளராக இருப்பதற்கும் தகுதி, அனுபவம் வேண்டும்.

    வி.கே.சசிகலா தனது 71-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

    தூய்மை பணியாளர்கள் விவகாரத்தில் தி.மு.க. அரசு தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

    அ.தி.மு.க. ஆட்சியில் 10 மண்டலங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்கு தனியாருக்கு டெண்டர் விடப்பட்டது தவறு தான். யார் செய்தாலும் தவறு தான்.

    தூய்மை பணியாளர் விவகாரத்தில், கடந்த 2016 தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் உரிய வழிவகை காண ஜெயலலிதா திட்டமிட்டு இருந்தார். அது குறித்து எனக்கு முழுமையாக தெரியும். ஆனால் அதன் பிறகு அவர் மறைந்து விட்டதால் பல மாற்றங்கள் ஏற்பட்டன.

    அ.தி.மு.க. இப்போ வரைக்கும் பலவீனமாகத்தான் இருக்கு. அதை மாற்றுவது தான் என்னோட வேலை என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன். நிச்சயமாக அதை செய்து தான் ஆக வேண்டும். இந்த மக்களுக்கு இதை செய்யவில்லை என்றால் மிகவும் சிரமமாகி விடும். இதை புதிதாக ஒருவர் கற்றுக்கொண்டு செய்ய முடியாது. இங்கே செய்து வைத்திருக்கும் சிக்கலை அனுபவப்பட்டவர்களால் மட்டுமே பிரிக்க முடியும். அதுதான் உண்மை.

    எல்லோரும் கேள்வி கேட்க பத்திரிகையாளர்கள் சும்மா மைக் எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள்.

    பத்திரிகையாளராக இருப்பதற்கும் தகுதி, அனுபவம் வேண்டும். நீங்களும் 10 விஷயங்களை தெரிந்துகொண்டு, நிற்கின்ற நேரத்தில் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் அப்போது தானே அது பர்பெக்டாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான்.
    • சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது.

    தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் என்பது சமூக நீதி அல்ல. குப்பை அள்ளும் பணியில் இருந்து அவர்களை மீட்டெடுப்பதே சமூக நீதி. நீங்கள் காலம் முழுக்க குப்பை அள்ளுங்கள் என கூறுவது ஏற்புடையத்தல்ல. குப்பை அள்ளும் தொழிலில் இருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் எங்களின் போராட்டம். பணி நிரந்தரம் என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்பதற்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்து இருந்தார்.

    தூய்மை பணியாளர்கள் குறித்த திருமாவளவனின் கருத்திற்கு வி.சி.க.வின் கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

    தமிழக அரசின் சட்டம் 240 நாட்கள் வேலை செய்தால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது தான். அந்த சட்டத்தை நடைமுறைப்படுத்துங்கள் என்று தான் தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. துப்புரவு பணியாளர்கள் மட்டுமல்ல, பல துறையில் ஒப்பந்த முறையில் எடுக்கப்பட்ட பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படாமல் இருக்கும் போக்கு இருக்கிறது.

    தொழிலாளர்கள், தொழிற்சங்கங்களும் சட்டபூர்வமாக வைத்திருக்கும் கோரிக்கை பணி நிரந்தரம் என்பது. திருமாவளவன் சொல்லும் கருத்து சரியானது அல்ல.

    எனக்கு தெரிந்த துப்புரவு பணியாளர் குடும்பத்தில் பிறந்த பெண், அவரது அப்பா, அம்மா நிரந்தர பணியாளர்களாக இருந்தார்கள். அதில் கிடைத்த வருமானத்தில் பி.எச்.டி. முனைவர் பட்டம் வரை படிக்க வைத்தார்கள். தற்போது அந்த பெண் கல்லூரி பேராசிரியராக இருக்கிறார்.

    ஒரு வேளை பணி நிரந்தரம் செய்யாமல் இருந்தால், இன்றைக்கு அவர் பேராசிரியராக இருக்கும் அந்த பெண்ணும் தூய்மை பணியாளாராக தான் இருந்திருப்பார்.

    ஆகவே பணி நிரந்தரம் அதில் கிடைக்கும் வருமானம், பணி பாதுகாப்பு ஆகிய சேர்ந்து அடுத்த தலைமுறையை இந்த பணியில் இருந்து விடுவித்து உயர்கல்வி பெறுவதற்கும், வேறு வாய்ப்பு கிடைப்பதையும் அந்த குடும்பத்திற்கு ஏற்படுத்து விடும்.

    ஆகவே இந்த பிரச்சனையை திருமாவளவன் மட்டுமல்ல அதியமான் உட்பட இத்தகைய கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். இது வந்து கொஞ்சம் கூட ஏற்கத்தக்கதல்ல.

    நாம் வந்து பரம்பரையாக அந்த குடும்பத்தில் இருக்கும் பணியை வழங்க வேண்டும் என்று யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இப்பொழுது பணி செய்து கொண்டு இருப்பவர்களுக்கு அது நிரந்தரம் செய்யப்பட வேண்டும். அதன் மூலமாக சட்டபூர்வமான பாதுகாப்பு என்பது தான் அந்த தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவது தான் நியாயமானது. ஆகவே திருமாவளவன் உள்ளிட்டவர்கள் கூறும் கருத்துகள் ஏற்புடையது அல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இரட்டை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும் பணி தொலைதூர கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
    • கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும்.

    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வி பயிலும் மாணவர்களுக்கு உதவும் வகையில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்க அனுமதிக்க திட்டமிட்டுள்ளது. இந்த கல்வியாண்டு (2025-26) முதல் திறந்த நிலை மற்றும் தொலைதூர கல்வி முறையில் பயிலும் மாணவர்கள் மேலும் ஒரு பட்டப்படிப்பை படிக்க வாய்ப்புள்ளது.

    தொலைதூர கல்வி முறையில் படிப்பவர்கள் ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்பு படிப்பதற்கான திட்டங்களில் சேர அனுமதிக்கப்படுவார்கள் என்று சென்னை பல்கலைக்கழகம் தயாரித்துள்ள இரட்டை பட்டப்படிப்புகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரைவு வழிகாட்டுதல்கள் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் ஒப்புதலுக்காக வைக்கப்படுகிறது. இந்த இரட்டை பட்டப்படிப்பானது சான்றிதழில் குறிப்பிடப்படும் என்று வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    2022-ம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் அறிவிப்பை தொடர்ந்து, அதை செயல்படுத்த சென்னை பல்கலைக்கழகம் முடிவு செய்தது. இரட்டை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான வழிகாட்டுதல்களை வகுக்கும் பணி தொலைதூர கல்வி நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறியதாவது:-

    தேசிய கல்விக் கொள்கை-2020 பரிந்துரைகளில் இரட்டை பட்டம் என்பது இடம்பெற்றுள்ளது. வணிகம், கலை மற்றும் அறிவியல் படிப்புகளை படிக்கும் மாணவர்கள் கூடுதல் பாடத்தை படிப்பதன் மூலம் தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள முடியும். பிளஸ்-2 தேர்வுகளில் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்றதால் நகரங்களில் உள்ள கல்லூரிகளில் பி.காம். சேர்க்கை மிகவும் கடினமாக உள்ளது.

    பி.ஏ. பொருளாதாரம் படிக்கும் ஒரு மாணவர் தொலைதூர கல்வி முறையில் பி.காம் படிப்பில் சேர்ந்து ஒரே நேரத்தில் 2 பட்டப்படிப்புகளை படிக்கலாம். இது அவர்களுக்கு ஆர்வமுள்ள துறையில் வேலை வாய்ப்பை பெற உதவும். இது கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயனளிக்கும். தொலைதூர கல்வி முறையில் பி.சி.ஏ. மற்றும் பி.பி.எம். பட்டம் பெறுவது கலை மற்றும் அறிவியல் மாணவர்களுக்கு மிகவும் மதிப்புமிக்கதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இைடயே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது.
    • அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும்.

    சென்னை:

    வங்கக்கடலில் நிலவிய புயல் சின்னம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் வடக்கு ஆந்திரா இைடயே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று உருவானது. இது இன்று காலை நிலவரப்படி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. மேற்கு மத்திய மற்றும் அதையொட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா மற்றும் வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடற்கரைகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அமைந்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையக் கூடும். இந்த புயல் சின்னம் நாளை (19-ந்தேதி) அதிகாலை தெற்கு ஒடிசா-வடக்கு ஆந்திரா கடற்கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்றிரவு மழை பெய்தது.

    கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் கூடலூர் பஜாரில் 14 செ.மீ. மழை பெய்துஉள்ளது. சின்னகல்லார்-9, சோலையார்-8 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    ×