search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொடைக்கானல் யூனியனில்  34 பள்ளிகளில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம்
    X

    காலை உணவு திட்டத்துக்காக புதிய உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல் யூனியனில் 34 பள்ளிகளில் முதல்-அமைச்சர் காலை உணவு திட்டம்

    • கொடை க்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 பள்ளிகளில் காலை உணவுத்திட்டம் முதல்கட்டமாக செயல்படு த்தப்பட உள்ளது.
    • கொடைக்கானல் யூனியனில் உள்ள பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    கொடைக்கானல்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சரின் தொலை நோக்குத் திட்டங்களில் ஒன்றான அரசுப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளில் தொடங்கப்பட உள்ளது. பள்ளி மாணவ ர்களிடையே கல்வி கற்பதை ஊக்குவித்தல், ஊட்டச்சத்து குறைபாட்டினால் எந்த ஒரு குழந்தையும் பாதிக்கப்ப டக்கூடாது.

    பள்ளி மாணவ மாணவியர்களின் ஊட்ட ச்சத்து நிலையை உயர்த்து தல், ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், மாணவர்கள் வருகையை அதிகரித்தல், வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் ஆகியவை திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் உத்தர வின்படி கொடை க்கானல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 34 பள்ளிகளில் இத்திட்டம் முதல்கட்டமாக செயல்படு த்தப்பட உள்ளது.

    சத்துணவு மையங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் இப்பணிகள் மேற்கொள்ள ப்பட தேவையான உபகர ணங்கள் மற்றும் சமையல் பொருட்கள், பாத்திரங்கள் வழங்கப்படுதல், மொபைல் செயலி மூலம் பதிவுகள் மேற்கொள்ளுதல், போன்ற விபரங்கள் குறித்து கொடைக்கானல் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் (வட்டார ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்) விஜ யசந்திரிகா,

    தாண்டிக்குடி ஊராட்சி, பட்லங்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்க ப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது பணி மேற்பார்வையாளர் நாகராஜன், ஊராட்சி செயலாளர் கண்ணன், சத்துணவு அமைப்பாளர், மற்றும் மகளிர் திட்ட தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×