search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாயு கசிவை தடுக்காவிட்டால் போராட்டம்- பா.ஜனதா அறிவிப்பு
    X

    வாயு கசிவை தடுக்க கோரி பா.ஜ.க.வினர் மனு

    வாயு கசிவை தடுக்காவிட்டால் போராட்டம்- பா.ஜனதா அறிவிப்பு

    • திருவொற்றியூர் முழுவதும் 5 கண்காணிப்பு கருவிகளை பொருத்தி வாயு கசிவு குறித்து கண்காணித்து வருகின்றனர்.
    • காற்றில் பரவி வருவது சல்பர் டை ஆக்சைடு என்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்

    திருவொற்றியூர்:

    திருவொற்றியூர், மணலி பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கசிவால் வடசென்னை பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கண் எரிச்சல், மயக்கம் உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்து வருகிறார்கள். திருவொற்றியூர் முழுவதும் 5 கண்காணிப்பு கருவிகளை பொருத்தி வாயு கசிவு குறித்து கண்காணித்து வருகின்றனர். எனினும் வாயு கசிவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    காற்றில் பரவி வருவது சல்பர் டை ஆக்சைடு என்று மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். ஆனால் வாயு கசிவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

    இதற்கிடையே தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயு காற்றில் பரவி பொதுமக்களுக்கு கடுமையான உடல் உபாதைகள் ஏற்படுவதாக கூறி பா.ஜனதா கட்சியினர் வடசென்னை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் நிர்வாகிகள் குமார், திருமுருகன், சிவக்குமார் ஜெகதீஷ், எஸ். கே. டி. பிரபு உள்பட 50க்கும் மேற்பட்டோர் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் உதவி கமிஷனர் சங்கரனிடம் மனு ஒன்றை அளித்தனர்.

    அதில், தொழிற்சாலைகளில் வாயு கசிவால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். வாயு கசிவை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் கூறி உள்ளனர்.

    Next Story
    ×