search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆலங்குளத்தில்  வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு
    X

    போலீசார் மற்றும் சிவகார்த்திகேயன் நற்பணி மன்றதினர் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்திய காட்சி


    ஆலங்குளத்தில் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு

    • முகப்பு விளக்கில் கரும்பு நிற ஸ்டிக்கர் ஒட்டாததால் எதிர்வரும் வாகன ஒட்டிகளுக்கு அதிக விபத்துகள் ஏற்பட காரணமாகிறது.
    • முகப்பு விளக்குகளில் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு .

    ஆலங்குளம்:

    ஆலங்குளத்தில் காவல்துறையுடன் சேர்ந்து சிவகார்திகேயன் நற்பணி மன்றத்தினர் வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாகனத்தின் முகப்பு விளக்கில் கரும்பு நிற ஸ்டிக்கர் ஒட்டாததால் எதிர்வரும் வாகன ஒட்டிகளுக்கு இடையூராக இருந்து அதிக விபத்துகள் ஏற்பட காரணமாகிறது. இதனை தவிர்க்கும் விதமாக ஆலங்குளம் போலீசாருடன் இணைந்து சிவகார்திகேயன் நற்பணி மன்றத்தினர் முகப்பு விளக்குகளில் ஸ்டிக்கர் ஒட்டாத வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி வாகன ஒட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த விழிப்புணர்வு நிகழ்வினை ஆலங்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ் தொடங்கி வைத்தார். சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் சிவகார்திகேயன் நற்பணி மன்ற தலைவர் ராஜா, பசுமை இயக்க தலைவர் சாமுவேல் பிரபு, பூ உலலை காப்போம் மன்றத்தின் ஆலோசகர் இளங்கோ , மன்ற செயலாளர் தர்மேந்திரன், பொறுப்பாளர்கள் சங்கர், முருகன் மற்றும் மன்ற உறுப்பினர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    Next Story
    ×