என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சூலூரில் மதமாற்ற முயற்சி- புகார் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்
  X

  சூலூரில் மதமாற்ற முயற்சி- புகார் கொடுத்தவருக்கு கொலை மிரட்டல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மதமாற்ற முயற்சித்தவர்கள் யார் என தெரியாததால் சந்தேகத்தின் பேரில் 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
  • கற்கள் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி, அந்த காகிதத்தை எடுத்து பார்த்தார். அதில் விரைவில் கொல்லப்படுவாய் என மிரட்டல் தொனியில் எழுதப்பட்டு இருந்தது.

  சூலூர்:

  சூலூர் அருகே பாப்ப ம்பட்டி பிரிவைச் சேர்ந்தவர் மனோன்மணி (52). இவரது வீட்டுக்கு நேற்றுமுன்தினம் 5 பேர் வந்தனர். அவர்கள் மனோன்மணியை மதமாற்றம் செய்ய முயற்சி செய்தனர்.

  இதுதொடர்பாக மனோன்மணி சூலூர் போலீஸ்நி லையத்தில் புகார் செய்தார். மதமாற்ற முயற்சித்தவர்கள் யார் என தெரியாததால் சந்தேகத்தின் பேரில் 10-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.

  இந்தநிலையில் நேற்று மனோன்மணி வீட்டில் இருந்தார். அப்போது மர்மநபர்கள் காகிதத்தில் கற்களை கட்டி வீட்டுக்குள் வீசிச் சென்றனர்.

  வீட்டுக்குள் கற்கள் விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த மனோன்மணி, அந்த காகிதத்தை எடுத்து பார்த்தார். அதில் விரைவில் கொல்லப்படுவாய் என மிரட்டல் தொனியில் எழுதப்பட்டு இருந்தது. அந்த கடிதத்தை மனோன்மணி எடுத்துக் கொண்டு போலீசில் ஒப்படைத்து மற்றொரு புகாரும் கொடுத்தார்.

  கொலை மிரட்டல் உள்ளதால் தனக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் கடிதம் வீசியவர்கள் யார் என்பது பற்றி விசாரணை நடக்கிறது.

  அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் மிரட்டல் கடிதம் வீசியவர்களின் உருவங்கள் பதிந்துள்ளதா என போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

  Next Story
  ×