search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போக்குவரத்து ெநரிசலில் சிக்கி தவிக்கும் ஆத்துப்பாலம் சாலை
    X

    போக்குவரத்து ெநரிசலில் சிக்கி தவிக்கும் ஆத்துப்பாலம் சாலை

    • நிரந்தர தீர்வு காணப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
    • மீண்டும் கனரக வாகனங்கள் இயக்கப்பட்டதால் நெரிசலில் சிக்கி தவிக்கிறது.

    குனியமுத்தூர்

    உக்கடத்தில் கடந்த சில ஆண்டுகளாக மேம்பால பணி நடைபெற்று வருவதால் பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆத்துப்பாலம் வழியாக செல்லாமல், புட்டுவிக்கி ரோடு வழியாக சென்றது.

    இதனால் கரும்புக்கடை பகுதியில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருந்தது.

    ஆனால் சில நாட்களாக மீண்டும் ஆத்துப்பாலம் வழியாக பஸ்கள் மற்றும் கனரக வாகனங்களை அனுமதித்த காரணத்தால், கரும்புக்கடை பகுதி போக்குவரத்து நெரிசலில் திணறுகிறது. ஆத்து பாலத்தில் இருந்து குளக்கரையில் போடப்பட்ட சாலை ஆரம்பிக்கும் இடம் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கின்றன.

    பாலக்காடு சாலை மற்றும் பொள்ளாச்சி சாலையில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும், இப்பகுதியை கடந்து செல்லக்கூடிய காரணத்தால், எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் இருசக்கர வாகனங்கள் சந்து பொந்துகளில் நுழைந்து செல்லும்போது, பஸ்களில் உரச கூடிய நிலையும் ஏற்படுகிறது.

    மேலும் கரும்பு கடையின் குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்லக்கூடிய குறுக்குச் சாலைகளில் இருந்து எண்ணற்ற இருசக்கர வாகனங்களும் ஆட்டோக்களும், பொதுமக்களும் வெளிவருவதால், அப்பகுதியானது வாகன ஓட்டிகளுக்கு தலைவலி நிறைந்த பகுதியாக காணப் படுகிறது.

    மேலும் கரும்புக் கடை பகுதி யில் பஸ் கள் நிறுத்தி பயணி களை ஏற்றி, இறக்கி, செல் வதால் பின் னால் வரும் வாக னங்கள் நீண்ட நேரம் காத்தி ருக்க கூடிய சூழ் நிலை ஏற்படு கிறது. எனவே சம்பந் தப்பட்ட அதிகாரி கள் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுக்கின் றனர்.

    Next Story
    ×