search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே  அருணாபேரி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் திருவிழா
    X

    சாஸ்தா கோவில் திருவிழாவில் பக்தர்கள் ஊர்வலம் வந்த காட்சி.


    பாவூர்சத்திரம் அருகே அருணாபேரி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் திருவிழா

    • காலையில் குற்றால தீர்த்தம் எடுத்து வந்து கணபதி ஹோமத்துடன் சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருணாபேரி மரத்தடி மேகம் திரை கொண்ட சாஸ்தா கோவில் திருவிழா நேற்று காலை தொடங்கியது. காலையில் குற்றால தீர்த்தம் எடுத்து வந்து கணபதி ஹோமத்துடன் சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து பரிவார தேவதைகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. மாலையில் கீழப்பாவூரில் இருந்து மண்ணால் செய்யப்பட்ட குதிரையில் சாஸ்தா ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை மலைய நாடார் குடும்பத்தை சேர்ந்த பக்தர்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி அருணாபேரி வந்தனர்.

    அங்குள்ள முத்தாரம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்ற பின் மேளதாளத்துடன் ஊர்வலமாக மரத்தடி மேகம் திரைகொண்ட சாஸ்தா கோவிலை வந்தடைந்தார். வழிநெடுக நின்ற பக்தர்கள் மாலை அணிவித்து சாஸ்தாவை வழிபட்டனர். இரவு சாமக் கொடையில் இரண்டு செட் வில்லிசை, இரண்டு செட் கச்சேரி, பட்டிமன்றம், இரண்டு கரகாட்டம் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

    இன்று அதிகாலையில் சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 10 மணி அளவில் பொங்கல் இடுதல் மற்றும் கிடா வெட்டுதல் திருவிழா நடைபெறுகிறது. இத்திருவிழாவில் சாஸ்தா கோவில் வரி தாரர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.

    இவர்கள் அனைவரும் திருவிழாவுக்காக கோவிலை சுற்றி குடும்பத்துடன் தங்கி திருவிழாவை காண்பதற்காக தனித்தனி குடில்களை அமைத்து இருந்தனர்.

    மேலும் இத்திருவிழாவை காண்பதற்கு பாவூர்சத்திரம், சுரண்டை, கீழப்பாவூர், சாலைப்புதூர், அடைக்கலப்பட்டணம், நாகல்குளம் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை மலைய நாடார் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

    Next Story
    ×