search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
    X

    கலெக்டர் தீபக் ஜேக்கப்.

    அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

    • இணையதளம் வழியாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
    • விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    2023-ஆம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தி லுள்ள தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் சேர்வதற்கு இணையதளம் வாயிலாக வருகிற 20-ந் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    இந்த விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

    மேலும் மாணவர்களுக்கு உதவிடும் வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் ஆகியவற்றில் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாற்றுசான்றிதழ் , மதிப்பெண் சான்றிதழ் (8-ம் வகுப்பு, 10, 12-ம் வகுப்பு ), சாதிசான்றிதழ் , முன்னுரிமை சான்றிதழ் (மாற்றுதிறனாளிகள்/விதவை/முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்/ மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையானவர்/ தாய், தந்தை இழந்த ஆதரவற்ற மாணவர்கள்), புகைப்படம் - 2 , ஆதார் கார்டு ஆகிய அசல் ஆவணங்கள் மற்றும் விண்ணப்பங்களை இலவசமாக பதிவேற்றம் செய்துக் கொள்ளலாம். ஆகஸ்ட்-2023 முதல் தொடங்கும் பல்வேறு பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத தொழிற்பிரிவுகளில் சேர்ந்து பயிற்சிபெற 8-ம் வகுப்பு தேர்ச்சி, 10ம் வகுப்புதேர்ச்சி, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். பெண்களுக்கு வயது வரம்பு இல்லை. ஆண்களுக்கு 14 முதல் 40 வயது வரை பயிற்சியில் சேரலாம். முன்னாள் இராணுவத்தினருக்கு 14 முதல் 45 வயது வரை . மாற்று திறனாளிகளுக்கு குறைந்த பட்ச வயது 14 முதல் உட்ச வரம்பு வயது இல்லை. 2020-2021 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 9-ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும், முந்தைய ஆண்டுகளில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அவர்களது 10-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 8-ம் வகுப்பு கல்வித் தகுதிக்குரிய தொழில் பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலையும் வைத்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப கட்டணம் ரூ.50 இணையதளம் வாயிலாக செலுத்த வேண்டும்.

    மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் இணையதள கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் குறித்த விவரங்கள் கடைசி தேதிக்கு பிறகு இணையதளத்தில் வெளியிடப்படும். பயிற்சியில் சேரும் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடை, காலணி, பாடப்புத்தகம், பஸ்பாஸ், வரைபடகருவிகள் மற்றும் மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ. 750வழங்கப்படும்.

    அரசுபள்ளியில் பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் உயர்கல்விதிட்டத்தின் கீழ் ரூ.1000 மாதாந்திர கூடுதல் உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு துணை இயக்குநர்/முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூர் அல்லது அருகிலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு 9994043023 , 7708709988 , 9840950504 , 9442220049 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×