என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அம்பை அருகே குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இளம்பெண் பலி - போலீசார் விசாரணை
  X

  அம்பை அருகே குழந்தை பிறந்த சிறிது நேரத்தில் இளம்பெண் பலி - போலீசார் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுபா பிரசவத்திற்காக அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
  • சிகிச்சை பலனளிக்காமல் சுபா பரிதாபமாக உயிரிழந்தார்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை அருகே உள்ள தெற்கு பாப்பான்குளத்தை சேர்ந்தவர் சுபா ( வயது 29).

  இளம்பெண்

  இவருக்கும் விருதுநகரை சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுபா நாகர்கோவிலில் உள்ள சித்த மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வந்தார். இதனால் அவர்கள் அங்கே வீடு எடுத்து குடியிருந்து வந்தனர். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த சுபா பிரசவத்திற்காக அம்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.

  திடீரென அவருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டது. இதைதொடர்ந்து அவர் அம்பை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்.

  ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சுபா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×