என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வானூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குபோட்டு தற்கொலை
- வானூர் அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே பூத்துறை ஓம் சக்தி நகரை சேர்ந்த ஆபிரகாம் (வயது 24). மினி லாரி டிரைவர். இவரின் மனைவி புதுச்சேரியை சேர்ந்த ஜோதி என்கிற சிவஜோதி (20). இவர்கள் இருவரும் 2 வருடங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலை யில் கணவன் மனைவி யிடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்துள்ள தாக தெரிகிறது. நேற்றும் கணவன்- மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது.
இதனால் மன உளைச்சலில் இருந்த ஜோதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்த வீட்டின் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தது இது குறித்து ஆரோவில் போலீசில் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையி லான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.