search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாவூர்சத்திரம் அருகே மின் தட்டுபாட்டை போக்க அதே இடத்தில்  மின்மாற்றியை வைக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கோரிக்கை
    X

    பாவூர்சத்திரம் அருகே மின் தட்டுபாட்டை போக்க அதே இடத்தில் மின்மாற்றியை வைக்க வேண்டும் - மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கோரிக்கை

    • மின் மாற்றியை மின்சார வாரியம் தற்காலிகமாக வேறு இடத்தில் மாற்றம் செய்து வைத்தது.
    • அந்த மின் மாற்றியில் இருந்து கொடுக்கப்பட்ட 1600 இணைப்புகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்காமல் பெருமளவில் மின் அழுத்தம் கிடைக்காத நிலைகள் ஏற்பட்டு வருகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சியில் 7-வது வார்டில் உள்ள ஊரணியில் கீழ்புறத்தில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின்மாற்றி இயங்கி வந்தது.

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊரணியின் கீழ்புறம் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இந்த நிலையில் மின்மாற்றி கீழே சரிந்து விழாமல் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான சேதங்களும் ஏற்படவில்லை.

    இருப்பினும் மின்மாற்றி கீழே விழும் நிலையில் இருந்து வந்தது. உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள் இடத்தை பார்வையிட்டு ஊராட்சியின் மூலமாக ஊரணியின் கீழ்புறம் உள்ள சுவரை போர்க்கால அடிப்படையில் கட்டிக் கொடுத்திட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதன் பின்னர் ஒருசில குழப்பத்தால் அந்தபணிகள் தடை செய்யப்பட்டது. அதன்பின்பு மின்மாற்றி கீழே விழுந்து உயிர் சேதங்கள் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக மின் மாற்றியை மின்சார வாரியம் தற்காலிகமாக வேறு இடத்தில் மாற்றம் செய்து வைத்தது.

    இந்த மின்மாற்றியை தற்போது இடம் மாற்றம் செய்து வைத்துள்ளதால் அந்த மின் மாற்றியில் இருந்து கொடுக்கப்பட்ட 1600 இணைப்புகளுக்கு முறையாக மின்சாரம் கிடைக்காமல் பெருமளவில் மின் அழுத்தம் கிடைக்காத நிலைகள் ஏற்பட்டு வருகிறது.

    பலமுறை மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள், பொதுமக்கள், பீடி தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வரு கின்றனர். எனவே மின்மாற்றியை ஏற்கனவே இருந்து வந்துள்ள இடத்தில் வைத்து ஆவுடையானூர் பகுதியில் மின் அழுத்தம் குறைவும், மின் வெட்டும் ஏற்படாமல் இருக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும் என கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சார்பில் மாவட்ட நிர்வாகத்திற்கும், மின்சார துறைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×