search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானூர் அருகே தலை மீது பஸ் ஏறியதில் வாலிபர் பலி
    X

    வானூர் அருகே தலை மீது பஸ் ஏறியதில் வாலிபர் பலி

    • வானூர் அருகே தலை மீது பஸ் ஏறியதில் வாலிபர் பலியானார்.
    • சேதுராப்பட்டில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் உள்ள கடைத்தெருவிற்கு சென்றுள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே சேதுராப்பட்டு பகுதியை சேர்ந்தவர் சூரியகாந்த் (வயது 49) .இவரது மகன் புதுவையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். சூரியகாந்த் ஒடிசா மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக சூரியகாந்த் ஓடிசாவில் இருந்து சேதுராபட்டியில் உள்ள தனது மகன் வீட்டிற்கு வந்துள்ளார். இதனையடுத்து சூரியகாந்த் மோட்டார் சைக்கிளில் சேதுராப்பட்டில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட் ரோட்டில் உள்ள கடைத்தெருவிற்கு சென்றுள்ளார். அப்போது கூட்ரோடு பகுதிகளில் சாலைகளில் அதிகமான கால்நடைகள் சுற்றித்திரிந்தது. இந்த கால்நடைகளை அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர். இதனால் கூட்ரோடு பகுதியின் சாலைகளில் அதிகமான அளவில் கால்நடைகள் குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது.

    அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த சூரியகாந்த் எதிர்பாராத விதமாக சாலையின் அருகே நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதனை அடுத்து பின்னால் வந்த தனியார் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் இவரது தலை மீது ஏறி இறங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் சூரியகாந்தி தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த ஆரோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×