search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.6 கோடியில் கட்டப்பட்ட 5 இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம், உடற்பயிற்சி கூடங்கள்  - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்
    X

    தூத்துக்குடி மாநகராட்சியில் ரூ.6 கோடியில் கட்டப்பட்ட 5 இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம், உடற்பயிற்சி கூடங்கள் - கனிமொழி எம்.பி. திறந்து வைத்தார்

    • விழாவில் சிறப்பு விருதினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை திறந்து வைத்தார்.
    • திறப்பு விழாவினை தொடர்ந்து அங்கு உடனடியாக இறகு பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகராட்சி சார்பில், சீர்மிகு நகரத் திட்டத்தின்கீழ் மாநக ராட்சிக்கு உட்பட்ட 5 இடங்களில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 5 இறகுப்பந்து உள்விளை யாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்கள் திறப்பு விழா பழைய மாநகராட்சி அலுவலகம் பின்புறம் ஜி.எல்.ஆர். டேங்க் வளாகத்தில் உள்ள இறகு பந்து உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது,

    நிகழ்ச்சிக்கு தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் லட்சுமிபதி, மேயர் ஜெகன் பெரியசாமி,கமிஷனர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்,

    விழாவில் சிறப்பு விருதினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு இறகுப்பந்து உள் விளையாட்டரங்கம் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களை திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா மாநகராட்சி 4 மண்டல தலைவர்கள், மாநகர கவுன்சிலர்கள், அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவினை தொடர்ந்து அங்கு உடனடியாக இறகு பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    Next Story
    ×