search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஊழியர்களுக்கு வருகிற 25-ந்தேதி பூஸ்டர் தடுப்பூசி
    X

    அரசு ஊழியர்களுக்கு வருகிற 25-ந்தேதி பூஸ்டர் தடுப்பூசி

    • கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3-ம் தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது.
    • கோவாக்சின் பொறுத்தவரை முதல் டோஸ் செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதங்களுக்கு பின் பூஸ்டர் டோஸ் ெசலுத்திக் கொள்ளலாம்.

    சேலம்:

    சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் கீழ் பணிபுரியும் அலுவலர்களுக்கு 3-ம் தடுப்பூசியான பூஸ்டர் டோஸ் செலுத்தப்பட உள்ளது. அதற்கான முகாம் கலெக்டர் அலுவலக தரைத்தளத்தின் பிரதான நுழைவுவாயில் அருகே வருகிற 25-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்க உள்ளது. இலவசமாக செலுத்தப்படும் தடுப்பூசியை அலுவலர்கள் செலுத்தி கொள்ளலாம்.

    கோவிஷீல்டு தடுப்பூசியை பொறுத்தவரை முதல் ேடாஸ் செலுத்தி 84 நாளுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதம் முடிந்த அனைவரும் பூஸ்டர் டோஸ் செலுத்தி கொள்ளலாம். கோவாக்சின் பொறுத்தவரை முதல் டோஸ் செலுத்தி 28 நாட்களுக்கு பிறகு 2-ம் டோஸ் செலுத்தி 6 மாதங்களுக்கு பின் பூஸ்டர் டோஸ் ெசலுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான ஆவணத்தை தவறாமல் எடுத்து வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×