search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்த காட்சி.
    X
    சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்த காட்சி.

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே மோடியின் நோக்கம்- சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி

    8 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது.600 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது.

    திருப்பூர்:

    பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவரும் தேசிய பொதுக்குழு உறுப்பினருமான சி.பி. ராதாகிருஷ்ணன் மத்திய பா.ஜ.க. அரசின் 8 ஆண்டுகால சாதனை குறித்த கூறியிருப்பதாவது:-

    எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே மோடியின் நோக்கம். எல்லையில் இருந்த தீவிரவாதம் தற்போது ஒடுக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளில் தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. 600 பில்லியன் டாலர் அந்நிய செலாவணி அதிகரித்துள்ளது. 8 ஆண்டில் புதிதாக 6.35 லட்சம் பள்ளி துவக்கப்பட்டுள்ளது.

    ஒரே ஆண்டில் தமிழகத்திற்கு 11 அரசு மருத்துக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திரமோடி தந்துள்ளார்.15 எய்ம்ஸ் மருத்துவமனை ஒப்புதல், அதில் 10 நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த 8 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் 12 லட்சம் மருத்துவர்கள் உருவாக்கப்பட்டு உள்ளனர்.

    3.2 லட்சம் கிலோ மீட்டர் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது.316 மில்லியன் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.418 பில்லியன் டாலர் ஏற்றுமதி வர்த்தகம் செய்துள்ளது.ஆண்டுக்கு 6000 ரூபாய் விவசாயிக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 12 கோடி விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

    அதேபோல் ஏழை மக்களுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் திட்டம் இந்த ஆட்சியில்தான் வழங்கப்பட்டு வருகிறது.மோடியின் ஆட்சியில் தான் மக்கள் நலத்திட்டங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மக்களுக்கு கிடைத்து வருகிறது. வாஜ்பாயின் கனவை மோடி நிறைவேற்றி வருகிறார்.அதேபோல் தடையில்லா மின்சாரம் வழங்கும் அரசாக மோடி அரசு செயல்பட்டு வருகிறது.

    கம்யூனிஸ்டு கட்சியினருக்கு மோடி எதை செய்தாலும் அதனை குறை சொல்வது தான் அவர்களுக்கு வழக்கம். ஒரே ரேஷன் திட்டத்தைக் கொண்டு வந்தபோது அதனை குறை கூறினார்கள். ஆனால் அது இன்று சாத்தியமாகி உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×