search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சாய ஆலை துறையினருக்கு வருமான வரி விழிப்புணர்வு கருத்தரங்கம்

    வியாபாரம் சார்ந்த சலுகைகளுக்கும் ஒரு சதவீதம் வரி பிடித்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் பெத்திசெட்டிபுரத்தில் உள்ள சாய ஆலை உரிமையாளர் சங்க அரங்கில் வருமான வரி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க தலைவர் காந்திராஜன் தலைமை தாங்கினார். பொருளாளர் மாதேஸ்வ–ரன், துணை செயலாளர் சுதாகரன் முன்னிலை வகித்தனர்.

    ஆடிட்டர் செந்தில்குமார் பேசும்போது, தொழிலாளர்களுக்கு வழங்கும் சம்ப–ளம், ஜாப்ஒர்க் கட்டணம், சுத்திகரிப்பு கட்டணங்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்து உரிய காலத்துக்குள் சாய ஆலைத்துறையினர் செலுத்த வேண்டும்.

    இதன்மூலம் அபராதம் போன்ற வருமான வரித்துறையின் நடவடிக்கைகளுக்கு உள்ளாகாமல் தப்பித்துக்கொள்ளலாம். பட்ஜெட்டில் சில அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. நிலம், கட்டிடங்கள் வாங்கும்போது ரூ.50 லட்சத்துக்கு மேல் பத்திரப்பதிவு அல்லது வழிகாட்டி மதிப்பு இருந்தால் ஒரு சதவீ–தம் வருமான வரி செலுத்த வேண்டும்.

    இதேபோல் வியாபாரம் சார்ந்த சலுகைகளுக்கும் ஒரு சதவீதம் வரி பிடித்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. வியாபார நிமித்தமான சலுகைகளுக்கு 1 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்யப்படுகிறது. சாய ஆலைத்துறையினர் வருமான வரி குறித்து நன்கு அறிந்து விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார்.

    Next Story
    ×