என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவில்
  X
  கோவில்

  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்.
  திருப்பரங்குன்றம்

  திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் விழாக்களில்   பிரசித்தி பெற்றது. வைகாசி விசாக திருவிழா. இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற ஜூன் 12-ந் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக கோவிலில் ஜூன் 3-ந் தேதி வசந்த உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 

  விழாவையொட்டி தினமும் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி- தெய்வானையுடன் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுவார்.அங்கு சுவாமிக்கு சிறப்பு தீப-தூப ஆராதனைகள் நடைபெறும்.

  10 நாட்கள் நடைபெறும்  இந்த திருவிழாவில் நிறைவு நாளான 12-ந் தேதி வைகாசி விசாக திருவிழா நடைபெறும்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து  வந்து  நேர்த்திக் கடன் செலுத்துவார்கள். 

  முருகனுக்கு பால் அபிஷேகம் செய்வார்கள். விழாவையொட்டி சண்முகர் சன்னதி யில் இருந்து சண்முகர், வள்ளி, தெய்வானையுடன் கம்பத்தடி மண்டபத்துக்கு அருகே உள்ள விசாக கொறடு மண்டபத்தில் எழுந்தருளுவார். அங்கு சுவாமிகளுக்கு பக்தர்கள் கொண்டு வரும் பால்  மூலம்   காலை முதல் மாலை வரை சிறப்பு பாலாபிஷேகம் நடைபெறும். 

  விழாவிற்காக கோவில் துணை ஆணையர் சுரேஷ் உத்தரவின்பேரில்,   கம்பத்தடி மண்டபம், விசாக திருவிழா நடைபெறும் விசாக கொறடு மண்டபம் உள்ளிட்டவைகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். மேலும் கோவிலில் அனைத்து பகுதிகளிலும் பணியாளர்கள் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
  Next Story
  ×