search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமலிநகரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது எடுத்தபடம்.
    X
    அமலிநகரில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீனவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியபோது எடுத்தபடம்.

    தூத்துக்குடி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு ரூ.21 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழங்கினார்

    தூத்துக்குடி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு ரூ.21 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்செந்தூர் அமலிநகரில் நடந்தது.
    திருச்செந்தூர்:

    மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் தூத்துக்குடி மாவட்ட மீனவ குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்செந்தூர் அமலிநகரில் நடந்தது.

    விழாவிற்கு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். அமலிநகர் பங்குத்தந்தை ரவீந்திரன் வரவேற்று பேசினார்.

    விழாவில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மீனவ குடும்பங்களுக்கு தேசிய கடல் மீனவர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ.4,500 வீதம் 23 ஆயிரத்து 62 மீனவ பயனாளிகளுக்கும், தமிழ்நாடு மீனவ மகளிர் சேமிப்பு மற்றும் நிவாரணத் திட்டத்தின் கீழ் ரூ. 4,500 வீதம் 24 ஆயிரத்து 276 மீனவ மகளிர் பயனாளிகளுக்கு வழங்கும் திட்டத்தை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.

    இதன் மொத்த மதிப்பு ரூ.21 கோடியே 5 லட்சத்து 45 ஆயிரத்து 550 ஆகும். மேலும் பெரியதாழை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 400 மதிப்புள்ள வெளிப்படுத்தும் எந்திரத்தை 40 சதவீத மானியத்தில் 35 பேருக்கு வழங்கினார். அரசின் மொத்த மானிய தொகை ரூ.16 லட்சத்து 71 ஆயிரத்து 600 ஆகும்.

    நிகழ்ச்சியில், திருச் செந்தூர் உதவி கலெக்டர் புஹாரி, மீன் துறை இணை இயக்குனர் அமல் சேவியர், உதவி இயக்குனர்கள் விஜயராகவன், ஆண்டனி பிரின்சி வைலா, ஆய்வாளர் ஜெகன்,
    தி.மு.க. மாநில மாணவரணி துணை செயலாளர் உமரி சங்கர்,  மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, துணை தலைவர் ஏ.பி.ரமேஷ், கவுன்சிலர்கள் சுதாகர், செந்தில்குமார், லீலா, ரேவதி கோமதிநாயகம், முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×