என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கலெக்டர் செந்தில்ராஜ்.
  X
  கலெக்டர் செந்தில்ராஜ்.

  தூத்துக்குடியில் நாளை 6 மாவட்ட உப்பு உற்பத்தியாளர் கூட்டம்-3 அமைச்சர்கள் பங்கேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூத்துக்குடியில் நாளை 6 மாவட்ட உப்பு உற்பத்தியாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் 3 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர்.
  தூத்துக்குடி:

  தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

  தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் 6 மாவட்டங்களை சேர்ந்த உப்பு தயாரிப்பு நிறுவனங்கள், உப்பள உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கான அயோடின் கலந்த உப்பு தொடர்பான கலந்தாலோசனை கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நாளை காலை 11 மணிக்கு தூத்துக்குடி அறிஞர் அண்ணா மாநகராட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.

  இதில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்  கீதாஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கின்றனர். கூட்டத்தில் அனைத்து உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
  Next Story
  ×